Thursday, July 6, 2017

நாட்டாமைகளின் நாடு

poovannan ganapathy
Via Facebook
2017-07-01

----

நாட்டாமைகளின் நாடு-3

  பெரியார் மண் என்று போலித்தனமாக சொல்லி பெருமைப்பட்டு கொள்வதை விட நாட்டாமைகளின் நாடு என்று சொல்வதில் பெருமளவு உண்மை உள்ளது. திராவிட இயக்கத்தின் காரணமாக நாட்டாமைகள் எல்லா சமூகத்திலும் உருவாகி இருக்கின்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

   ஒரே சாதிக்குள் திருமணம் எனபது கடந்த இரண்டு,மூன்று தலைமுறைகளில் தான் எனபது தானே உண்மை.அதற்கு முன் மிக பெரும்பான்மையான திருமணங்கள் ஒரே குடும்பத்துக்குள் தான்.அடுத்த கிராமத்தை கூட வெளிநாடாக பார்த்த நிலை சில ஆண்டுகள் முன் வரை இருந்தது.குறிப்பிட்ட சில மைல்களுக்குள் மட்டும் வாழ்ந்து ,அதை தாண்டி நண்பன்,உறவினர் யாரும் இல்லாத நிலை தான் பெரும்பாலான மக்களின் நிலையாக இருந்தது

  இப்போது  இருக்கும் சாதிகளுக்கும் சென்ற நூற்றாண்டில் இருந்த சாதிகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
எண்ணிக்கைக்காக  பல சாதிகள் நாம் ஒன்று தான் என்று ஒன்றாக இணைவது கடந்த இருவது வருடங்களில் நடைபெறும் ஒன்று.பெண் எடுத்து பெண் கொடுக்காத சாதிகள் கூட நாம் ஒரே இனம் என்று கூக்குரலிடுவது எதற்காக
உட்பிரிவுகள் பார்க்காதே எனபது எதற்காக

தனக்கு கீழ் உள்ள சாதியை/வர்ணத்தை சார்ந்த பெண்களை மணக்க,வைத்து கொள்ள எப்போதும் தடை இருந்தது இல்லை. அதனால் தான் எல்லா சாதியிலும் கருப்பு,சிவப்பு,மாநிறம்,வெள்ளை எல்லாம்

   சாதிகள் ஏதோ ஏற்ற தாழ்வுகள் இல்லாத ஒரே அலுவலகத்தில் இயங்கும் பல பிரிவுகள் போன்ற ஒன்று,அவசியமானது என்று எழுதும் ,சாதிக்கும் சிலரின் ,தாய் தந்தையாக சாதியை போற்றும் சிலரின் வாதங்கள் வியப்பை தருகின்றன.உயர் சாதி/வர்ண  ஆணுக்கு  கீழ் வர்ண பெண்களை தூக்கி செல்ல சாதி தடை கிடையாது எனபது சாதி உருவாகிய காலத்தில் இருந்து உண்டு.

பல தார மணம்(நாலு ,ஆறு என்று எந்த வித கட்டுப்பாடு கூட கிடையாது )என்பதும் வெகு சமீபத்தில் தான் அண்ணல் அம்பேத்கர் புண்ணியத்தில் தவறு என்று ஹிந்டுத்வர்கள் எதிர்ப்புகளை மீறி சட்டத்தில்
சேர்க்கப்பட்டது
திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக வைத்து கொள்வது (இப்போது தான் நீதி மன்றங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் உரிமைகள் உண்டு,குழந்தைகள் திருமணமாகாமல் பிறந்தவர்களாக இருந்தாலும் உரிமை உடையவர்கள் என்று தீர்ப்பு வழங்க துவங்கியுள்ளன )உயர்சாதி ஆண்களுக்கு சாதி வழங்கிய உரிமை

கேப்மாரி,சூரமாரி,பறையன்,பள்ளன்,பள்ளி,சாணான்,பங்கி .சக்கிலியன்,கள்ளன் போன்ற சாதி பெயர்கள் உயர்சாதியினரால் வசவு சொற்களாக பயன்படுத்தப்பட்டவை ,பயன்படுத்தபடுகிரவை .
இப்படி இருக்கும் போது எல்லா சாதியும் ஒன்று தான்,ஏற்ற தாழ்வு இல்லை என்று சொல்வது  தவறல்லவா என்று கேட்டால் வசைகள்,நாஜிக்கள் என்று பட்டம் தான் கிடைக்கிறது.

பல மதங்கள் மறைந்திருக்கின்றன,பல புதிதாக தோன்றி இருக்கின்றன
பல சாதிகள் ஒன்றாகி உள்ளன.பல சாதிகள் ஒன்றிலிருந்து பிரிந்திருக்கின்றன
இவை அனைத்தையும் அறியாமல் சாதி தாய்பே,மதம் தந்தை என்று பேசுவதை ஆஹா என்று கொண்டாடவும் ஆட்கள்  இருப்பது வேதனை தான். 

இதில் மிக மிக குறைவான மாற்றங்களை சந்தித்த சாதி குழு பார்ப்பனர்கள் தான்.சாதி அப்படியே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதில் பார்ப்பனர்களுக்கு அருகில் கூட வேறு எந்த சாதியும் வர முடியாது.இதை தான் மதத்தை,கலாச்சாரத்தை,பாரம்பரியத்தை  காப்பாற்றிய பெருமை என்று ஆசான் அழகாக கிரீடமாக மாற்றி விடுகிறார்.

  பாஜக அரசில் ஏன் மோடியை மட்டும் குறிவைத்து திட்டுகிறீர்கள்.மொத்தம் 78 அமைச்சர்கள் என்று வாதிடுவதற்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக மட்டுமே சாதிக்கு எதிராக போராடுபவர்கள் குரல் கொடுப்பது சரியா என்பதற்கும் வித்தியாசம் கிடையாது.சாதி என்ற மூடநம்பிக்கை தழைத்து வாழ முக்கிய காரணம் பார்ப்பனர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தானே.கோவில் தர்மகர்த்தா,ஊழியர்கள்,கட்டுபவர்கள்,கோவில் நிலங்களில் பயிர் செய்பவர்கள்  என அனைத்திலும் எல்லா சாதியினரும் இருக்கும் சூழல் உருவானாலும் சாதிக்கு நூற்றாண்டுகளாக சாதியின் காரணமாக இருந்த பணியை,உரிமைகளை விடாமல் இருக்கும் சாதி வேறு எது

  எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது தனித்துவம் வாய்ந்த பழக்கங்கள்,பெருமைகள் இல்லாத சாதிகளிடம் சாதிபிரிவினை குறைந்து அல்லது அழிந்து விடும்.அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.
மைசூருக்கு ,விசாகப்பட்ட்டினத்துக்கு நானூறு ஆண்டுகள் முன் சென்ற அய்யங்கார்களோ அல்லது ஒரிஸ்ஸா எல்லையில் வாழும் பிராமணர்களோ பல நூற்றாண்டுகளாக அதே சாதியாக தான் உள்ளார்கள்.ஆனால் மற்ற சாதிகள் அங்குள்ள சாதிகளோடு ஐக்கியமாகி விடும்.
நாயர்,எழவ சாதிகளோடு ஐக்கியமான தமிழ் சாதிகள் பல.அதே போல் தெலுங்கு பேசும் மக்களோடு புலன் பெயர்ந்து சென்றதால் தெலுகு சாதியில் ஐக்கியமான தமிழ் சாதிகள் பல உண்டு.

   தனித்து காட்டும் பழக்க வழக்கங்கள்,அதில் கொள்ளும் பெருமை தான் சாதியை தக்க வைத்து கொள்கிறது.
பர்மாவில் வாழ்ந்து அங்கேயே தங்கி விட்ட தமிழர்களோ ,வடகிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கோ மூன்று,நான்கு  தலைமுறைகளுக்குள்  அவர்களுக்கு இடையே மற்றும் அங்கே உள்ள குழுக்களோடு உறவுகள் ஏற்பட்டு அவர்களில் ஒருவராகி விடுவது தான் நடக்கிறது.

   பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைத்து,கூலி வேலை செய்பவர்களாக தமிழகத்தை விட்டு பல நூறு,ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ தொடங்கியவர்களில்,அங்கேயே வீடு வாங்கி குடிபெய்ரந்தவர்களில் பார்ப்பனர்களை தவிர்த்து மற்றவர்கள் சாதியை தொலைப்பது எளிது.

------

நாட்டாமைகளின் நாடு -4

இப்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை  பல லட்சங்களில் இருக்கலாம்.அவர்களில் பல சாதிகள் உண்டு.இங்கிருந்து செல்லும் போது சாதியோடு தான் செல்கிறார்கள்.ஆனால் அங்கேயே பிறந்து வளர்ந்த அவர்களின் குழந்தைகள் எவ்வளவு பேர் அதே சாதியில் திருமணம் செய்வர்.அது ஒரு சதவீதத்தை கூட அது தாண்டாது.

இந்துவாக,இந்தியனாக இருந்தால் பரவாயில்லை என்று தான் சாதி @மத பற்றுள்ள பெற்றோர் கூட எண்ணுவர்.சாதி வாழ அக்ரஹாரம்,சாதிக்கு ஒரு தெரு,சாதிக்கு மட்டுமே உரித்தான வேலை எனபது முக்கியம்.அவை இல்லாமல் போகும் போது அது அழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

.
IAS அதிகாரிகள்,அரசியல் தலைவர்களில்/கலைஞர்களில்,விமானிகளில் ,விமான பணிப்பெண்களில் ,மருத்துவர்களில்,வெளிநாடுகளில்,வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள்,பணி புரிபவர்களில் (அனைத்து சாதி,மத மக்களுடன் சேர்ந்து படிக்க,வேலை செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்) சாதி விட்டு சாதி திருமணம் அதிகம் இருக்கும்.

   சாதிக்கு மட்டுமே உரித்தான தொழில்கள் புரியும் அர்ச்சகர் போன்றவர்களிடம் அது மிக குறைந்த அளவில் /அல்லது இருக்கவே இருக்காது.அனைத்து தொழில்களிலும் அனைத்து சாதிகளும் இடம் பெறும் போது,அனைவரும் ஒன்றாக ஒரே அடுக்கு மாடி குடியிருப்பு,அரசு விடுதி,வீடுகளில் குடியிருப்பது பெருமளவில் நடக்கும் போது சாதி எளிதில் வலுவிழக்கும்.

  இப்போது தமிழ் மொழியே தெரியாமல் தென்னாப்ரிக்காவில் வசிப்பவர்கள் யார். அவர்கள் தமிழக வம்சாவழியினர்.அவர்கள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கும் தமிழுக்கும் என்ன சமபந்தம் இருக்கிறதோ அதை விட குறைவாக தான் இப்போது சாதிக்கும் அங்குள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் தொடர்பு

  சாதி என்பதே செய்யும் வேலைகளை குறிக்கும் சொல்.பிறப்பால் இவன் இன்ன தொழில் தான் செய்ய முடியும்,இன்ன செய்ய தகுதியில்லாதவன் எனபது தான் சாதியின் அடிப்படை.மருத்துவர்,பொறியாளர்,முடி திருத்துபவர்,பூஜை செய்பவர்,வணிகம் செய்பவர்,கணக்கு பார்ப்பவர்,போர் வீரர்,சலவையாளர்,மயான தொழிலாளி,ஆடை தைப்பவர் போன்றவற்றின் அடிப்படையில் உருவானது பிரிக்கப்பட்டது சாதி .

  அதனால் தான் சாதி பெயர் வேண்டாம் என்று பிரச்சாரம் வந்தவுடன் இழிவாக கருதப்பட்ட பெயர்களை கொண்ட அனைத்து சாதியினரும் அதனை விட்டு விட்டனர்.இதனை விட அவர்கள் சுயநலம் தான் முக்கிய காரணம்.ஒவ்வொரு சாதியிலும் லட்சத்தில் ஒருவருக்கு கிடைத்த நாயக்கர்,தேவர்,உடையார்,மூப்பனார் ,படையாச்சி,தேவேந்திரர்,கவுண்டர் ,பிள்ளை ,நாடார் ,முதலியார் ,நாயுடு,ரெட்டியார்,நாயர்,நாய்க் போன்ற பட்டங்களை லட்சக்கணக்கான மக்கள்  சாதி பெயர் போல போட்டு கொண்டு பெருமை பேச  முயற்சி செய்தனர்.

  இன்றும் சாதி பெயர் போட்டு கொள்ளும் வழக்கம் தொடர்ந்து இருந்தாலும் அதனை வைத்து எந்த சாதியையும் கண்டுபிடிக்க முடியாது.எந்த சாதியும் சில உயர்சாதியினர் தவிர்த்து உண்மையான சாதிப்பெயரை போட்டு கொண்டிருக்காது.போலியாக பட்ட பெயர்களை போட்டு கொண்டு நாங்கள் மட்டுமே உண்மையான க்ஷத்ரியர்,வீரர்,ராஜ பரம்பரை என்று சண்டை போட்டு கொண்டு இருந்திருப்பார்கள்.

  இந்த குழப்பங்கள் இல்லாத தெளிவாக சாதியை பற்றிய பெருமிதங்களை கொண்ட சாதி பார்ப்பனர்கள் தான்.வெள்ளாளரோ,செட்டியாரோ,நாயரோ ,நாயக்கரோ ,கவுண்டரோ  மிக பெரும்பானமையானோர் பேசும் சாதி பெருமை அனைத்துமே பொய்களும்,புரட்டும் தான்.அது அவர்களுக்கு தெரியும்.

உயர் வர்ண ஆண் அதற்கு கீழ் உள்ள வர்ணங்களில் இருந்து திருமணம் செய்யவோ ,வைத்து கொள்ளவோ தடை கிடையாது.பெண் செய்தால் தான் கடுங்குற்றம்.அவர்களின் வாரிசுகள்  பஞ்சமரில் ,அவர்னரில் வருவார்கள். பல நூறு சாதிகள் உருவாக இதுவே காரணம்.

1931  கணக்கெடுப்பில் இருந்த பல சாதிகள் சட்டநாதன் கமிஷனில் இல்லை. இவை வேறு சாதிகளில் கலந்து விட்டன.சட்டநாதன் கமிஷனில் இருந்த சில நூறு சாதிகளிலும் பல சாதிகள் இன்று அருகி விட்டன.

  சாதிக்கு என்று இருந்த குறிப்பிட்ட தொழில் என்பது  மாறி விட்ட பின் யார் வேண்டுமானாலும் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்,எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்று வந்த பின் மிக பெரும்பாலான சாதிகளின் அடித்தளமே ஆட்டம் கண்டு விட்டது.

   நகரங்களில்,அலுவலகங்களில் ,அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களில்,நாம் வசிக்கும் தெருவில், வசிக்கும் மனிதர்களில் யார் சாதியை எளிதாக கண்டு பிடிக்க முடியும் என்று நடுநிலையாக ஆராய்ந்தால் சாதியை அதிகம் வெளிப்படுத்துவது யார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குமே.அப்படி சாதியை வெளிப்படையாக எங்கும் வெளிப்படும் சாதியை நோக்கி தானே சாதி எதிர்ப்பாளர்களின் குரல் இருக்கும்,இருக்க வேண்டும்

No comments:

Post a Comment