Wednesday, July 26, 2017

வந்தே மாதரம் பாடலை ஒரு போதும் முஸ்லிம்களால் பாட இயலாது

எம்.எச்.ஜவாஹிருல்லா.
Via facebook
2017-07-26


*வந்தே மாதரம் பாடலை ஒரு போதும் முஸ்லிம்களால் பாட இயலாது*

இப்பாடல் பக்கிம் சந்தர் சட்டர்ஜி 1875ல் எழுதிய ஆனந்த மடம் நாவலில் அதன் கதாநாயகன் சத்தியானந்த் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடலாகும்.  ஆங்கிலேயர்களை எதிர்ப்போருக்கு "எழுச்சியூட்ட வேண்டும்" என்ற நோக்கில் இந்த பாடல் எழுதப்படவில்லை. முஸ்லிம்களை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த பாடல் எழுதப்பட்டது.

"ஆங்கிலேயர் ஆட்சி ஆரோக்கியமானதும் அவசியமானதும்" -
என்று ஆனந்த மடம் நாவல் கூறுவதாக ஆங்கிலே அரசு குறிப்பு குறிப்பிடுகிறது. 

இது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பாடல் என்று லண்டனுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் பரிந்துரைத்ததாக வரலாற்றாசிரியர் டி ஞானைய்யா குறிப்பிடுகிறார்.

ஆனந்த மடம் நாவலில் முஸ்லிம்களை கொன்று பாடும் வெற்றி கீதமாக தான் வந்தே மாதரம் அமைக்கப்பட்டுள்ளது. தாய் என்று இந்த பாடலில் குறிப்பிடப்படுவது இந்திய தேசத்தை அல்ல.
மாறாக காளி தான் இந்த பாடலில் வணங்கப்பட வேண்டிய
தாயாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

*பக்கிம் சந்தர் ஆங்கிலேய அரசுக்கு விசவாசி*

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக விளங்கிய
இந்திய அதிகாரியான பக்கிம் சந்தருக்கு "ராவ் பகதூர்" பட்டம் அளித்து ஆங்கிலே அரசு கவுரவித்தது. இத்தகைய தேச பக்தர் எழுதிய பாடல் தான் வந்தே மாதரம்.

இப்பாடலின் பின்னணியை காந்தியடிகள் 1937ல் தான் தெரிந்துக் கொண்டார். முஸ்லிம்களுக்கு கோபமூட்டும் அவமானப்படுத்தும் இப்பாடலை பாட வேண்டாம் என்று காந்தியடிகள் கூறினார். இப்பாடலின் பின்னணியை மகாகவி தாகூரிடம் கேட்டறிந்த பண்டிதர் நேரு 'இது முஸ்லிம்களுக்கு எரிச்சலூட்டக் கூடியது' என்றார்.

வந்தே மாதரம் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை உமிழும்
பாடல். இந்த வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் மட்டுமல்ல, மதவெறியற்ற சமூக நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் விரும்பும் எவரும் பாட முன்வரமாட்டார்கள்.

ஜனகனமன என்ற தேசிய கீதத்தை தனிப்பட்ட முஸ்லிம்களும் பாடுகிறார்கள், முஸ்லிம் நிறுவனங்களிலும் பாடப்படுகிறது. இந்த சூழலில் ஏக இறைவனை தவிர வேறு யாரையும் வணங்காத முஸ்லிம்கள் ஒரு போதும் தங்கள் நிறுவனங்களிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வந்தே மாதரத்தை பாட மாட்டார்கள்.

தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்துள்ள
இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என்று
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
#எம்.எச்.ஜவாஹிருல்லா.

No comments:

Post a Comment