Thursday, July 6, 2017

ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு என்ன பிரச்சனை

Chochalingam Murugaiyan
Via Facebook
2017-07-02

டிமானிடேஷன் பற்றி பேசியே வாய் சாரி கை வலிக்கிறது இதில் ஜிஎஸ்டி வேறு !

டிமானிடேஷன் போது சொன்ன அதே வசனம் தான் இப்போதும் வரி முறையை எளிமைப்படுத்துவது நிச்சயம் அவசியம் ஆனால் மாநில வரி உரிமையை பறிப்பதும், உற்பத்தி மாநிலத்தின் வரி வருவாயை இல்லாமல் செய்வதும் தான் பிரச்சனை.

ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு என்ன பிரச்சனை ?

ஜிஎஸ்டியில் மூன்று பிரிவு உள்ளது எஸ்ஜிஎஸ்டி அதாவது மாநிலத்திற்கு போக வேண்டிய வரி, சிஜிஎஸ்டி அதாவது மத்திய அரசிற்கு போகும் வரி, மூன்றாவது இன்டகிரேடட் ஜிஎஸ்டி.

சரி அது என்ன ஜஜிஎஸ்டி ?

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஒரு பொருள் உற்பத்தி ஆகுது என்று வையுங்கள் அதற்கு அரசு தண்ணீரையும், மாநிலத்தின் பங்கில் இருந்து / உற்பத்தியில் இருந்து மின்சாரம் தருகிறது இது தவிர அந்த உற்பத்தி பகுதிக்கு செல்ல சாலை அமைக்கிறது . சரி இப்போது தூத்துக்குடி தொழிற்சாலை 100 ரூபாய்க்கு பொருள் தயாரித்துவிட்டது. இதனை சென்னையில் உள்ள ஒரு ஆள் 130 ரூபாய்க்கு வாங்குகிறார் என்று வையுங்கள். இது தமிழகத்திற்கு உள்ளே நடக்கும் பரிவர்தனை என்பதால் வெறும் எஸ்ஜிஎஸ்டி மற்றும் சிஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

18% என்று எடுத்து அதில் 9% தமிழகத்திற்கும் 9% மத்திய அரசிற்கும் கிடைக்க வேண்டிய வரி இது. அதாவது தமிழகத்திற்கு 9 ரூபாய் கிடைக்க வேண்டியது.

இப்போது இந்த பொருளை ஆந்திராவில் உள்ள ஒருவர் வாங்கினால் தமிழகத்தின் வரி வருமானம் தமிழகத்திற்கு கிடைக்காது மத்திய அரசிற்கும் ஆந்திர அரசிற்கும் போய் சேரும்.

இரு மாநிலங்கள் இடையே விற்பனை நடக்கும் போது அதற்கான வரி ஐஜிஎஸ்டி என விதிக்கப்பட்டு அது வாங்கும் மாநிலத்திற்கும் மத்திய அரசிற்கும் போகும்.

ஆக உற்பத்தி மிகுந்த மாநிலங்கள் உற்பத்திக்கான செலவு மட்டும் செய்யும் அதற்கான வரி உரிமையை இழக்கும். தமிழகம் தன் வருமானத்தில் ஆண்டிற்கு சுமார் 9270 கோடி ரூபாய் இழக்கும். இதனை ஒரு சில ஆண்டுகள் ஈடுகட்டுவதாக மத்திய அரசு சொல்லி இருக்கிறது அதன் பிறகு ?

வரியை பொறுத்தவரை என் இரண்டாவது பிரச்சனை இன்று தமிழகம் இந்தியாவில் முதல் மூன்று வரி ஈட்டும் மாநிலங்களில் ஒன்று. ஆனால் நாம் கொடுக்கும் வரி பணத்தில் மத்திய அரசு எடுத்துக்கொண்டது போக நமக்கு கிடைப்பதோ சொற்பமே ! நூறு ரூபாய் வருமானம் ஈட்டினால் நமக்கு கிடைப்பதோ வெறும் 34 ரூபாய் தான். ஆனால் உத்திரபிரதேசமோ பீகாரோ ஏனைய பல வட இந்திய மாநிலங்களோ தங்கள் வரி வருமானத்திற்கு ஏற்ற அளவு அல்லது அதை விட அதிகமான அளவு பெறுகின்றன. உத்திர பிரதேச அரசு 3000 கோடி விவசாய கடனை உத்திரபிரதேச விவசாயிகளுக்கு தள்ளுப்படி செய்தது. ஒரு விஷயம் தெரியுமா இங்கு எலி கடித்து அம்மனமாக கடன் கட்ட முடியாது போராட்டம் நடத்தினார்களே நம் ஊர் விவசாயிகள் அவர்களுக்கு நம் மாநில வருமானத்தில் கிடைக்க வேண்டிய பணம் மத்திய மாநில அதிகார மற்றும் பங்கீட்டு வித்தியாசங்களால் உத்திரபிரதேச மக்களுக்கு கிடைக்கிறது. அது மட்டுமல்ல 1980 கள் வரி மத்திய அரசின் 100 ரூபாய் ஒதுக்கீட்டில் 8 ரூபாய் பெற்ற தமிழக அரசு இன்று பெறுவதோ வெறும்  3.9 ரூபாய் மட்டுமே. இதற்கு காரணம் இங்கு காடு இல்லையாம், மக்கள் தொகை வளர்ச்சி குறைவாம் அடே காடு அழித்து குடும்பம் குறைத்து உற்பத்தி செய்தால் பணம் குறைக்கப்படுமாம் !

மூன்றாவது பிரச்சனை இன்று வரி மட்டும் நமது உற்பத்தி ரேசியோ வெறும் 8-10% மட்டுமே உள்ளது. அதாவது 100 ரூபாய் இங்கு GSDP இருந்தால் அதன் வரும் வரியோ 8-10% தான் இருக்கு. இதிலும் சாராயத்தை, எரிபொருள் வரியை நீக்கினால் 3.5-4.5 % மட்டுமே வருகிறது. இதற்கு என்ன அர்த்தம் ?? அத்தனை வரி ஏய்ப்பு நடக்கிறது ! வரி வசூலிப்பதில் ஏதோ குளறுபடி நடக்கிறது.

இந்த மூன்று விடயங்களும் தமிழகம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

இது எல்லாவற்றையும் மீறி ஜிஎஸ்டியால் மாநில அரசின் உரிமை பல இடங்களில் நீங்கி மத்திய அரசிடம் போயிருக்கிறது.

சரி எப்படி இருந்தால் சரியாக இருந்திருக்கும் ?

ஒரே வரி நிச்சயம் தேவை. அதாவது ஒரு பொருளுக்கு உற்பத்தி செய்யும் மாநிலமே வரி விதிக்கும் உரிமை வேண்டும். அதில் இருந்து மத்திய அரசிற்கும், வாங்கும் மாநிலத்திற்கும் பங்கு செல்ல வேண்டும். என்ன பொருளுக்கு என்ன வரி என்பதை உற்பத்தி மாநிலம் தீர்மானிக்க வேண்டும். அது தான் சரியானதாக இருக்கும்.

No comments:

Post a Comment