Sengovi guru
Via Facebook
2017-07-01
வரியையும் சேர்த்து ஒரு சினிமா டிக்கெட் விலை, 120 ரூபாய்.
அதாவது டிக்கெட் விலை மட்டும் 84 ரூபாய் + 30% டேக்ஸ் 36 ரூபாய். தமிழக அரசு வரிவிலக்கு கொடுத்ததால், இதுவரை கொள்ளை லாபம்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு, 28%. அப்படியென்றால் டிக்கெட் விலை 84 + 25.2 = 110 ரூபாய் என்று தானே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஏன் டிக்கெட் விலை கூடும் என்று சொன்னார்கள்? 120 ரூபாயிலேயே வரிவிகிதம் அடக்கம் என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்?
தற்போதைய திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம், 18%..அப்போ டிக்கெட் விலை 84 + 15.12 = 100 ரூபாய்க்கு குறையுமா?
டிக்கெட் விலையைக் குறைக்கவில்லையென்றால், சினிமாவை விட்டு விலகுவேன் என்று சொல்ல மானஸ்தன் யாராவது இருக்கிறார்களா?
No comments:
Post a Comment