Thursday, July 6, 2017

Id , Ego, super ego

ராஜசங்கீதன் ஜான்
Via Facebook
2017-05-22

அகங்காரத்தை ego என்பார்கள். 'அகங்காரம் பிடிச்சி அலையிறான்' என்றெல்லாம் சொல்வார்கள், Ego என்பது தவறான விஷயம் போல.  உண்மை என்னவென்றால், Ego எல்லாரிடமும் இருக்கிறது. Ego இல்லாமல் மனிதன் இல்லை. சொல்ல போனால், Ego தான் மனிதன்.

Freud பாணியில் சொல்வதானால் Id என்னும் subconscious mind எல்லாருக்கும் உள்ளது. அது மனிதனின் உயிர் தோன்றிய காலத்தில் இருந்து கொண்ட நினைவுகளை கொண்டிருக்கும். ஒரு உயிருக்கான உந்துதல் கொண்டது. அது விலங்கை போல தன்னை சுற்றி இருப்பவைகளை பொருட்படுத்தாது. சூழலை கவனிக்காது. ஏனெனில் விலங்குக்கு சமூகம் இல்லை.

Id-க்கு அடுத்து இருப்பது Ego. இது நாம் வளர்த்து கொள்வது. சமூகத்துக்காக. இதுதான் உங்களை உடை உடுத்த வைக்கும். தலை சீவ வைக்கும். உங்கள் கருத்தியலை, நம்பிக்கையை உருவாக்கும். அதாவது, இச்சமூகத்தில் புழங்க போகும் நீங்கள் உங்கள் ஆளுமையை உருவாக்குகிறீர்கள். விலங்கு அல்லாத நீங்களாக.

Sub conscious mind நம்முள் இருக்கும் விலங்கு மனம். அதுதான் ஆதாரப்பூர்வமானது. Egoவை கூட மாற்றி கொள்ளலாம். ஆனால் sub conscious mind ஐ மாற்ற முடியவே முடியாது. Ego என்பது shock absorber போல். Sub conscious mind-டமிருந்து உங்களை காப்பாற்றுவது ego தான். அந்த ego வை எப்படி கட்டியமைத்து கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும்.

அடுத்தது Super Ego.  அதை கடைசியில் சொல்கிறேன்.
Sub conscious mind, தான் விரும்புகிறபடிதான் நீங்கள் நடக்க வேண்டும் என்கிறது. அது அடுத்தவரை பற்றி, சூழலை பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. காம எண்ணங்களின் விளைவுகளாகவே அது செயல்படும் என்கிறார் Freud. உங்கள் கோபம், அன்பு, empathy, பொறாமை என எல்லா உணர்வுகளும் அழுத்தி அடக்கப்பட்ட காம எண்ணங்களின் விளைவுகளாம்.

இப்போது Ego வின் வேலையே, Sub conscious mind - விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும் என அதை நம்ப வைப்பது. மறுபக்க வேலை உங்களின் சமூக பிம்பத்தை கட்டமைத்து பாதுகாப்பது. Ego தன்னை ஏமாற்றுகிறது என sub conscious mind நினைக்கும் தருணங்களில் எல்லாம் அது படுபயங்கரமாக வெளிப்பட்டு ஆட்டம் போட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளில் உங்கள் ego கட்டமைத்திருக்கும் உங்கள் பிம்பம் உடைந்து நொறுங்கும். அதை மீட்க முடியாமல், உங்கள் சுயரூபத்தை உலகம் பார்த்து விட்டதே என்ற அவமானத்தில் கூனி குறுகி ego அழுது புலம்பும்.

திரும்ப எல்லாவற்றையும் சரி செய்ய அடுத்தவரிடம் மன்னிப்பு கேட்கும். இதை புரிந்ததால்தான் கமல் வசனம் வைத்தார், "மன்னிப்பு கேட்குறவன் மனுஷன்... மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்" என. யோசித்து பாருங்கள், மன்னிப்பு கேட்பதைத்தானே பெரிய விஷயமாக பேசி வந்திருக்கிறோம். இந்த ஆள் ஏன் மன்னிப்பு கேட்பதை சாதாரணமாக்குகிறார்? ஏனெனில் கமலுக்கு இந்த Ego vs Sub conscious mind தெரியும். அதனால், sub conscious mind ஆத்திரம் கொண்டு ஆடி அடங்கியதும், Ego தான் நொறுங்கி தன்னை மீட்டு கொள்ள மன்னிப்பு கேட்கும் என அவருக்கு தெரியும். அது மனிதனின் அடிப்படை இயல்பு. அதை கூட செய்ய மறுக்கும் கும்பல் இருக்கிறதென்பது வேறு விஷயம். ஆனால், உடைந்து போய் அழும் ego விடம் பதிலுக்கு தன் sub conscious mind ஐ அவிழ்த்து விடாமல், புரிந்து கொண்டு, மன்னிக்கிறான் பாருங்கள் அதற்கு மிக பெரிய புரிதலும் தெளிவும் வேண்டும். அதனால்தான் கமலின் அந்த வசனம்.

இந்த புரிதல் மிக மிக குறைவு. இதை புரிந்து கொள்ளத்தான் பல நேரங்களில் உறவுகள் பயன்படுகின்றன. அம்மா-மகன், காதலன்-காதலி, அப்பா - மகன் என உறவுகளில் இந்த sub conscious mind-ன் ஆட்டமும் பின் ego வை ஏற்று கொள்ளுதலும் மிக இயல்பாக நடக்கும். 'நீ என்னை அசிங்கப்படுத்தினாய் அல்லவா, நான் உன்னை அசிங்கப்படுத்துகிறேன்' என அம்மாவையோ அப்பாவையோ நாம் நினைப்பதில்லை. அவர்களும் மன்னிப்புகளுக்காக காத்திருப்பதில்லை.

ஆனால் குடும்பத்துக்குள் இப்படி நடந்து கொள்ளும் நாம் அதற்கு வெளியில் உள்ள நட்பு முதலான உறவுகளிடம் அப்படி நடப்பதில்லை. அவை எல்லாம் தற்காலிகமான உறவுகள் என நம்புகிறோம். அங்கு ஒரு sub conscious unleashing event-க்கு பிறகு, நாம் காயப்பட்ட நம் egoவை தூக்கி பிடிக்கிறோம்.  துணைக்கு sub conscious mind-ஐயும் அழைத்து கொண்டு ஆட வைக்கிறோம். அதனால் நொறுங்கி போன ego மேலும் அடித்து நொறுக்கப்படுகிறது.

அதிலும் capitalistic mode of production காலம், உங்கள் egoவை அப்படித்தான் இருக்க சொல்கிறது. கூட்டு புரிதலை மறுக்கிறது. 'நீங்கள் unique. எவரை பற்றியும் கவலைப்பட வேண்டாம்' 'Survival of the fittest' என்றெல்லாம் பேசி உங்களை உச்சாணி கொம்பில் கொண்டு போய் அமர்த்தி, தனிமைப்படுத்துகிறது. நீங்கள் தனித்து இருப்பதுதான் அவர்களுக்கு லாபம்.

ஆகவே இங்கு எல்லாருக்கும் ego இருக்கிறது. தன் ego நொறுங்கும் சமயம் நாம் அனுபவித்த வேதனை மற்றவர் அனுபவிக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. அதே போல், அந்த ego, sub conscious mind ஐ துணைக்கு அழைத்து இன்னும் அதிகமாக உங்கள் ego வை நொறுக்கும் சாத்தியங்கள் உங்களை போலவே எல்லாருக்கும் இருக்கிறது. அவற்றை எல்லாம் விடுத்து, மன்னிப்பு என ஒருவர் கேட்டால், அதற்கு உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் மதிப்பும் மட்டுமே காரணம் என புரிந்து கொள்ளுங்கள்.

Ego is always a victim. அதற்கு தேவை எல்லாம் நேசம் மட்டுமே. அன்பு எளிது. அன்பு காட்டுதல் அதைவிட எளிது. அதை புரிந்து கொள்ளுதல் அதைவிட மிக மிக எளிது.

நொறுங்கி போனவரை இன்னும் நொறுக்க நீங்கள் தூக்கும் சுத்தியல்கள்தான் மிக கனமானவை.

இப்போது கடைசியில் சொன்னதாக சொன்னது. Super Ego, Id மற்றும் Egoவுக்கெல்லாம் மேல். விழுமியங்கள் சார்ந்தது. நன்மை, தீமை பார்ப்பது. Morality என்று சொல்வோமே. Morality to the core is super ego. இதை கொண்டவர்களைத்தான் நாம் புத்தனாக, இயேசுவாக, காந்தியாக பார்க்கிறோம்.

Id-க்கும் Sub Conscious mind-க்கும் இடையே சண்டைகள் போடும் மனிதர்கள் இயல்பாக நாம் பார்க்க முடியும். Egoவுக்கும் Super Egoவுக்குமான சண்டைகளை குறைவாகத்தான் பார்ப்போம். 'நல்லவனுக்கு கெடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் கெட்டவனுக்கெ கெடைக்குதே' என்னும் ரகம். இந்த சண்டையையும் வென்று Super Egoவில் திளைப்பவர்கள் மிக மிக குறைவு. ஆனால் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு 'பிழைக்க தெரியாதவன், உருப்படாதவன், வியாக்கியானம் பேசுறவன், மண்டை கனம் பிடிச்சவன்' என பல பெயர்கள் வைத்திருக்கிறோம்.

- ராஜசங்கீதன் ஜான்

No comments:

Post a Comment