Wednesday, July 12, 2017

தொழு நோயும் தீண்டாமையும்: தீர்க்கும் வழிமுறைகள் - ஒரு ஒப்புமை

எங்கோ, யாரோ
Via whatsup
2017-07-16

தொழு நோயும் தீண்டாமையும்: தீர்க்கும் வழிமுறைகள் - ஒரு ஒப்புமை.

1. *தொழுநோயை  சர்க்கரை நோய் னு பேர் வச்சா போகும்* குரூப்.

பறையனை ஆதிதிராவிடர் னும் பள்ளனை தேவேந்திரகுல வேளாளர் னும் சக்கிலியனை அருந்ததியர் னும் பேர் மாத்திட்டா தீண்டாமை ஓடிவிடும்.

2. *தொழுநோய்க்கு பெரிய வரலாறு உண்டு, அதுதான் பழைய பெரிய நோய், பெருமைக்குரிய நோய்*. குரூப்.

இந்த பக்கம் பறையர் தான் முதல் குடி, அந்த பக்கம் பள்ளர் தான் முதல் வேளாண் குடி. பெருமை பேசினால் தீண்டாமை போகும்.

3. *தொழுநோயை இழிவாக பார்க்கக்கூடாது* குரூப்.

பறையன் கிறதை ப றை ய ன் னு அழுத்தமா, சத்தமாக, நெஞ்சை நிமிர்த்திட்டு சொன்னா தீண்டாமை விலகும்.

4. *தொழுநோயை நோயாவே பார்க்கக்கூடாது* குரூப்.

இப்பல்லாம் சாதி யாரும் பார்க்கிறது இல்லை. அப்புறம் தீண்டாமை எங்கே இருக்கு?

5. *தொழுநோயை பற்றி பேசவில்லை என்றால் அது ஒழிந்து விடும்* குரூப்.

சாதி பார்க்கமாட்டோம். தீண்டாமையை ஒழிப்போம்.

6. *அவனோட தொழு என்னோட தொழு வை விட மோசம். இறைவனுக்கு நன்றி* குரூப்.

பள்ளன், பறையனை தீண்டுறதில்லை, பறையன் சக்கிலியனை தீண்டுறதில்லை. இதை ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியும்.

7. *இது தேமல், தொழுநோய் இல்லை* குரூப்.

சாதி பாகுபாடும் தீண்டாமையும் ஒண்ணு. சாதி நல்லது, ஏற்றத்தாழ்வுதான் தப்பு.

8. *தொழுநோயாளிக்கும் நல்லா இருக்கிறவருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா சரியாயிடும்* குரூப்.

கலப்பு மணம் தீண்டாமையை ஒழிக்கும். ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்டா தீண்டாமை ஒழியும்.

9. *இது தொழுநோய் இல்லை, அழுக்கு. குளிச்சா சரியாயிடும்* குரூப்.

சுத்தமா இருந்தா, சாமியாடினா, மாலை போட்டா பாரத்மாத்தாக்கீ ஜே சொன்னா தீண்டாமை போயிடுச்சு.

10. *மருந்து சாப்பிடுறதுனாலதான் தொழுநோயாளின்னு தெரிய வருது, அதனால் இனி மருந்து திங்க மாட்டேன்* குரூப்.

பட்டியல் அட்டவணையில் இருப்பதால்தான் தீண்டாமை. வெளியேறுவோம், பிற்படுத்தப்பட்டவராவோம்.

11. *மலேரியா மருந்து சாப்பிட்டா தொழுநோய் குணமாகும்* குரூப்.

தீண்டாமைக்கு தீர்வு வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில் உள்ளது. அம்பேத்கர் சொன்னதில் இல்லை.

12. *தொழுநோயை குடுத்தவன் காலில் விழுந்தா சரியா போயிடும்* குரூப்.

இந்துத்துவா, நாம்டம்பளர் காரன் கூட இருந்தா தீண்டாமை போயிடும்.

13. *படிச்சவன், பணக்காரன், வெள்ளையாக இருக்கிறவனுக்கு தொழுநோய் வராது* குரூப்.

அதே. தீண்டாமை படிச்சா பணம்சேத்தா கிடையாது.

14. *தொழுநோய் முன்சென்ம பலன்* குரூப்.

நல்லா சாமி கும்பிட்டு அடுத்த சென்மத்தில வேற சாதில பொறந்து இந்த கீழ்சாதிக்காரன் கிட்ட போகாமல் இருப்போம்.

15. *எல்லாருக்கும் தொழுநோய் இருக்கு* குரூப்.

எல்லாரும் தான் முன்னொரு காலத்தில ஒடுக்கப்பட்டிருக்காங்க. அப்ப நமக்கு தீண்டாமை இல்லைதானே.

நீங்க எந்த குரூப்?

No comments:

Post a Comment