Thursday, September 21, 2017

புல்லட் ரயில் 3

Narain Rajagopalan
Via Facebook
2017-09-15

பணவீக்கம்
இந்தியாவில் - 3% (Avg)
ஜப்பானில் - 0%

பணவீக்கம் ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பு ஏறுமா, இறங்குமா என்று சொல்வதற்கு இருக்கும் பல காரணிகளில் ஒன்று.

20 வருடங்களில் இந்த 3% பணவீக்கம் ரூபாயின் மதிப்பை 60% குறைக்கும். ஆக 88,000 கோடிகள் (0.1% வட்டி தான் என்று சொன்னாலுமே கூட) 20 வருட முடிவில் மொத்தமாய் 1,50,000 கோடிகளாக மாறி இருக்கும். இந்திய ஒன்றியம் 20 வருடங்களில் 1,50,000 கோடிகளை வெளியேற்றும். இந்த 1,50,000 கோடிகள் என்பது இன்றைய இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் 1% (1% of GDP is 1,50,000 Crs as we are close to $2 Trillion Economy)

மோடி சொல்வது போல 0.1% என்பது இலவசத்திற்கு பக்கத்தில் இருப்பதல்ல. இன்னும் சொல்லப் போனால் நாம் இந்த யென்னில் வாங்கும் கடனிற்கு அதிகமான வட்டிக் கொடுக்கிறோம்.

ஜப்பானிய அரசாங்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம்

JGB10 Year Yield - 0.01%
JGB20 Year Yield - 0.53%
JGB30 Year Yield - 0.82%

Source: Bloomberg

ஆக ஜப்பானியர்கள் வாகாக பெருங்கடனை நம் தலைமீது கட்டி விட்டார்கள். நமக்கு வாய்த்த prime moron இதை உலக மகா சாதனையாகக் கொண்டாடிக் கொண்டு சுற்றிக் கொண்டு இருக்கிறது.

0.1% வட்டிக்கு, 1% GDP ஸ்வாஹா!

530 கி.மீ தூர ரயிலுக்கு 1% ஜிடிபியை அடகு வைப்பது தான் ‘வளர்ச்சி’ என்று உங்கள் அகராதியில் இருக்குமானால், உங்களுடைய சங்காத்தமே தமிழகத்திற்கு தேவையில்லை. இந்த முட்டாள்தனத்திற்கும், அபத்தத்திற்கும் எங்களுடைய தலைமுறையும், எங்களின் அடுத்த தலைமுறையும் ஏன் அதீத வரி விதிப்பு என்கிறப் பெயரில் வட்டி கட்ட வேண்டும்?

ஆளை விடுங்கடா சாமிங்களா. உங்களுடைய ராமர் உங்களைக் காக்கட்டும். எங்களுக்கு தமிழ்’நாடு’ போதும்.

#BulletTrainMadness

No comments:

Post a Comment