Wednesday, September 6, 2017

தமிழகத்தில் கல்வி தரமில்லை யா?

Prakash JP
Via Facebook
2017-09-05

//தமிழகத்தில் கல்வி தரமில்லை, நீட் பாஸ் செய்யமுடியவில்லை  -- வழக்கமான அரைவேக்காட்டு கும்பல்//

எப்பா அறிவாளிகளே, ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்சி, ஐசிஎஸ் என எந்த சிலபஸ்ஸில் +2 படித்திருந்தாலும், லட்சகணக்கான ரூபாய் செலவு செய்து, தனியார் கோச்சிங் இன்ஸ்டிட்யூட்டில் நீட் நுழைவு தேர்வுக்கு ஓராண்டு சிறப்பு பயிற்சி படிக்காமல், யாராலும் நீட் பாஸ் செய்யமுடியாது..

சரி, அந்த தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவுக்கு மருத்துவம் பார்க்க வருகிற வெளிநாட்டவர்களில் 45% சதவீதம் பேர் சென்னைக்கு வருகிறார்கள்??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியா நாட்டுக்குள்ளேயே மருத்துவ வசதி தேடி வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களில் 40% சதவீதம் பேர் சென்னைக்கு வருகிறார்கள்??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, ஹெல்த் டூரிசத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருக்கிறது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், 22 கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருக்கிறது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில், 24 தமிழ் நாட்டில் இருக்கிறது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடங்களில் தமிழ்நாடு உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, சாப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடங்களில் தமிழ்நாடு உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, MMR, IMR, vaccination coverage, போன்ற அனைத்து மருத்துவ சுகாதார குறியீடுகளில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, மோட்டார் வாகன துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, சமூக பொருளாதார குறியீடுகளில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, GDP யில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் தமிழகம் உள்ளது???

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, தனி நபர் வருமானத்தில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடங்களில் உள்ளது??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, மேற்கத்திய நாடுகளில் அதிகளவு தமிழர்கள் கம்ப்யூட்டர் போன்ற உயர் தொழில்களில் பணியில் உள்ளார்கள்??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, தமிழகத்தில் வேலை தேடி அலை அலையாக இந்தி பேசும் வட மாநில மக்கள் வருகிறார்கள்??

தரமில்லாத கல்வியை படித்ததால் எப்படி, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சுந்தர் பிச்சை போன்றோர் உருவானார்கள்??

தாங்கள் ஆளும் பல மாநிலங்களை, கல்வியிலும், சமூக பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகத்தை விட பல மடங்கு கீழே, பின்தங்கியுள்ள நிலையில் வைத்துக்கொண்டு, இந்த பிஜேபி RSS கும்பல், எப்படி கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், தமிழ்நாட்டை குறை சொல்கிறார்கள்??

No comments:

Post a Comment