Wednesday, September 6, 2017

NEET - சில கேள்விகளும் பல‌ பதில்களும்

வினவு
2017-09-06

அனித்தா இறந்த இந்த சோகமான தருனத்தில்
நேற்று எங்களுக்கு "சில கேள்விகளும் பல‌ பதில்களும்" என்று நீட் தேர்விற்க்கு ஆதரவாக ஒரு வாட்ஸ் பதிவு உலாவுதை கண்டோம்‌ சங்கிகளின் உண்மைக்கு மாறான அந்த பதிவை அம்பலப்படுத்துவோம்

அவர்களுக்கான பதில்கள்:

*(1) நீட் தேர்வில் அனிதா குறைவான மதிப்பெண் எடுத்து உள்ளார்*

அடே சங்க்கிகளா அதுதான் இங்கே பிரச்சனை என்கிறோம் எங்கள் வீட்டு பிள்ளைகள் படித்த மாநில‌ பாட திட்டததில் கேள்வி எழுப்ப வில்லை என்பதுதான் பிரச்சனையே

உங்கள் வீட்டு பிள்ளைகள் மத்திய பாடத்திட்டதில் படித்து உள்ளார்கள் அவர்கள் எல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடகர்னா மாநில பாடத்திட்டதில் தேர்வு நடத்த சொல்லி எங்கவீட்டு பிள்ளைகளுடன் போட்டி போட வேண்டியதுதானே

நீ படிக்கும் பாடதிட்டதிலேயே பல வருசம் கோச்சிங் போயியும் பல திகுடுதத்தம் பன்னி பாசாகும் நாய்கள் குன்டு பல்பு வெளிச்சத்தில் பட்டினியுடன் படிக்கும் எங்க வீட்டு பிளைகளை எகாத்தாலாமாய் பேசு உன்னை எதை கொன்டு அடிக்க ?

*(2) தனியார் கல்லுரிகள் கொள்ளை அடிக்கும்‌ போது ஏன் இந்த அரசியல் கட்சிகள் கேட்க வில்லை*

என கேட்டு விட்டு எதோ‌ b.j.p கல்வி கொள்ளைக்கு எதிரான கட்சி மாதிரி காட்டி கொள்ளும் நரி தந்திரதை பாருங்கள்

ஊழல் குற்றச்சாட்டுகளால்அம்பலப்பட்டுப் போன இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்கும் வரை, அதனின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி லோதாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியையும் அமைத்திருக்கிறது. இந்த கமிட்டி சமீபத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்த 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்தக் கல்லூரிகளுள் உ.பி. மாநிலத்தில் அமைந்துள்ள சரசுவதி மருத்துவக் கல்லூரி, ம.பி.யில் அமைந்துள்ள சாக்ஷி மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைபாடுகளை எங்கள் கல்லூரி சரி செய்யவில்லை என அவர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவற்றுக்கும் சேர்த்து அங்கீகாரம் அளித்த கூத்தையும் நடத்தியிருக்கிறது, லோதா கமிட்டி. நாட்டின் மருத்துவர் தேவையை ஈடுசெய்யும் நல்லெண்ணத்தில்தான் இந்த அங்கீகாரத்தை அளித்திருப்பதாகக் கூறி, தனது அயோக்கியத்தனத்திற்குப் பட்டுக்குஞ்சமும் கட்டிவிட்டது.

ஏன் அடுத்த மாநிலத்திற்க்கு போகனும் தற்போது b.j.p க்கு சொம்பு தூக்கும் கிரு(ஸ்)க்குசாமி தனியார் மருத்துவ கல்லூரி தொடங்க போவது நாட்டின் சேவைக்கா? லாபம் சம்பாரிக்கவா?

அவர் நீட்டுக்கு ஆதரவாக பேசுவதன் நோக்கம் லாபம் பார்க்கதானே

“கடந்த ஆண்டு 10 இலட்ச ரூபாயாக இருந்த எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் ஆண்டு கல்விக் கட்டணம் நீட் தேர்வுக்குப் பிறகு 21 இலட்சமாகவும்; சிறீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 15 இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளதென்றும், இதற்கு அப்பால், ஒரு இலட்ச ரூபாய் முதல் மூன்று இலட்ச ரூபாய் வரை பிற கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும்; இவற்றுக்கும் மேலே ஒவ்வொரு கல்லூரியும் தனது தரத்திற்கு ஏற்ப 40 இலட்ச ரூபாய் முதல் 85 இலட்ச ரூபாய் வரையிலும் நன்கொடை வசூலிப்பதாகவும்” டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு, அதனிடத்தில் தேசிய மருத்துவ கமிசனை அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள நிதி ஆயோக், தனது பரிந்துரையில், ”இலாபம் கிடைத்தால்தான் கல்லூரிகள் தொடங்க தனியார் முன்வருவார்கள். அதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்திற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், மாணவர் சேர்க்கையில் மோசடிகளுக்கு இடமிருக்காது” எனக் கூறியிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சட்டவிரோத நன்கொடையை ஒழிப்பதற்கு அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் வழி என்பதுதான் இந்தப் பரிந்துரையின் பொருள்.

*(3) புதிய தலைமுறை சேனலில் SRM கல்வி கொள்ளையை காட்டுமா?*

இன்று பொது மக்களிடையே ஒரு சாமுக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு வந்து நீட்டுக்கு எதிராக போராடுகிறார்கள் வேறு வழி இல்லாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் அதை ஓரளவேனும் வெளிப்படுத்துகிறார்கள் அதை பார்த்து சங்கிகளுக்கு வரும் கோபத்தை பாருங்கள்

ஏன் SRM பச்சமுத்து கல்வி கொள்ளையன் என இப்போதுதான் தெரியுமா?

B.j.p அவனுடன் தேர்தல் கூட்டனி வைத்து கூடி குழாவும் போது தெரியாதா?

உங்கள் கிரிமினல் மோடியை சிறந்த நிர்வாகி என புகழ்ந்த போது தெரியாதா?
( இந்த இடத்தில் கவன் படம் நினைவுக்கு வந்தால் நீங்கள் விழித்து கொன்டீர்கள் என அர்த்தம்)

*(4) SRM கல்வி நிருவனம் ஏன் நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் போக வேண்டும்*

என்ற வாதத்தின் மூலம் நீட் கல்வி கொள்ளையர்களுக்கு எதிரானது என வாதம் செய்கிறார்

பதில்; அது தான் எங்களுக்கு புரியமாட்டேங்குது, இந்தியா முழுவதும் உள்ள எல்லா கல்வி கொள்ளையனும் நீட்டை ஆதரிக்கும் போது இவன் ஏன் வித்தியாசமா நடந்தான் என்று

ஒரு வேலை உங்கள் பிக் பாஸ் மோடி SRM க்கு கொடுத்த ஸ்பெஷல் டாஸ்க்காக கூட இருக்கலாம் இதன் முலம் கல்வி கொள்ளையர்களுக்கு எதிரானதாக நீட்டை காட்ட முடியும் அல்லவா!

இல்லை இது கல்வி கொள்ளையர்களுக்கு எதிரானது என்றால் மோடி பதவி ஏற்ற மூன்றான்டில் எத்தனை கல்வி கொள்ளையர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளது

அவர்களிடம் இருக்கும் பணம் எல்லாம் உஜாலா வெள்ளையா?

*(5) நீட் தேர்வு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பறித்துவிடவில்லை*

என்பது உண்மைதான். ஆனால், அந்த இட ஒதுக்கீடை இனி யார் அனுபவிப்பார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. நீட் தேர்விற்கு முன்னதாகவே, அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு பறிபோய்விட்டது. கடந்த பத்தாண்டுகளில் வெறும் இருநூற்று சொச்சம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவலத்தை நீட் தேர்வின் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தும். குறிப்பாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், 40,000, 50,000 கொடுத்து தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் சேர வாய்ப்புள்ள நல்ல வசதி படைத்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இனி தமிழகத்தில் மருத்துவராக முடியும்.

நீட் தேர்வானது, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனியுரிமையாக்குகிறது. பணக்கார மாணவர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு என்ற புதிய சமூக நீதியை மருத்துவக் கல்வியில் புகுத்துகிறது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதாக கூறிக்கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு அதற்கு நேர் எதிரான விளைவையே அளித்திருக்கிறது. இந்த பணக்கார வாரிசுகளும், பார்ப்பன – ஆதிக்க சாதி மேட்டுக்குடியினரும் மருத்துவர்களாகி அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து ஏழைகளுக்குச் சேவை செய்யப்போவதில்லை. அமெரிக்காவுக்குப் பறப்பது எப்படி என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கும்.

*(6) கடைசியாக பிற மாநிலத்தில் நீட்டை எதிற்க்காத போது நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்*

எங்களுக்கு ரோசம் இருக்கு அதனால் தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே உங்களை எதிர்தோம்

அன்னைக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது ஏன் இது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்த எங்க பங்காளிங்க இப்ப நாங்கள் செய்தது சரிதான் என உணர்ந்து தார் அடிச்சி இந்தியை அழிக்கிறான்

இப்ப நீட்டில் உன் யோக்கிதை என்ன அனைத்து இந்தியாவிற்க்கும்  ஒரே தேர்வு என கூறி பின் வடநாட்டு மாணவர்க்கு எளிமையான கேள்விதாளும் , தென்நாட்டு மாணவர்களுக்கு கடினமான கேள்விதாளும் தந்த நோக்கம் என்ன?

நீட்டினால் வட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கக் கூடும். தமிழகத்திலுள்ள ரயில்வே அலுவலகங்களிலும், மைய அரசின் அலுவலகங்களிலும் வட இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை பெருத்துள்ளதைப் போன்ற நிலையைக் கூடிய விரைவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தமிழக மக்கள் காணக் கூடும்.

நீட் தேர்வும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின், சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, ஏழை நோயாளிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் நிலையை உருவாக்கும். தரமான, தகுதியான மருத்துவர்கள் என்பது இறுதியில் ஏழை மாணவர்களுக்கும் ஏழை நோயாளிகளுக்கும்   அமைகிறது.

*(7) அரசியல் கட்சிகள் நீட்டை எதிக்க காரனம்‌ தனியார் கல்வி நிருவனத்தின் மூலம் கிடைக்கும் லாபம்*

உங்கள் மோடி யோக்கின் என்றால் அனைத்து தனியார் கல்வி நிருவனத்தையும் அரசுடமை ஆக்க வேண்டியதுதானே ( உங்கள் சங்கிகள் நடத்தும் கல்வி  உட்பட)

உலக வங்கியின் உத்தரவுக்கு‌ கட்டுபட்டு அனைத்து கல்வியையும் தனியார்கையில் ஒப்படைபேன் என காட் ஒப்பந்ததில் காட்டிய இடத்தில் எல்லாம் கை எழுத்து போட்டு வந்த மோடியை பக்கதில் வைத்து கொன்டு நீ எல்லாம் தனியார் கல்வி கொள்ளை பத்தி பேசவே கூடாது

நீ நடத்தும் நீட் தேர்வே ஊழல் செய்யதான்

நீட்டில் நடந்த ஊழலை பற்றி படியுங்கள்

http://www.vinavu.com/2017/07/27/neet-exam-scandal-from-delhi/#

*(8) அடுத்து கல்வி துறையில் என்ன செய்ய வேண்டும்*

ஏன் இதுவரை செஞ்சது போதா? என வடிவேலு மைன்ட் வாய்சில் வந்து கேட்கிறார்

அவர் சொல்லும் யோசனை என்னவெண்றால் அரசு பள்ளியே தனியார் கோச்சிங் கிளாஸ் நடத்தனுமாம்

அதாவது கோச்சிங் கான்ராக்ட் என்று அவன் அரசு பணத்தை  லவுட்டி கொன்டு போக யோசனை சொல்கிறார்

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நீட் தேர்வுக்கான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாதென விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வு பயிற்சிக்கு 40,000, 50,000 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத்தத்தில், நீட் தேர்வு கல்விக் கொள்ளையை ஒழிக்கவில்லை, மாறாக, அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதோடு, கொள்ளைக்குப் புதிய வழிகளையும்‌ திறந்துவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு பத்தாம்பசலித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்க்கப்படுவது போலக் கற்பிதம் செய்துகொண்டு, தமிழக மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களை முறையாக நடத்தினால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஊதித் தள்ளிவிடுவார்கள், தமிழகப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.-க்கு இணையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றெல்லாம் நீட் தேர்விற்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நீட் தேர்வை எதிர்ப்பதற்குத் தமிழக மாணவர்களின் திறமையோ, தமிழகப் பாடத் திட்டத்தின் தரமோ முதன்மையான காரணமல்ல. நீட் தேர்வு, தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையைத் தமிழக அரசிடமிருந்து தட்டிப் பறிக்கிறது என்பதுதான் மையமானது. இந்த அநீதியை மிகவும் நைச்சியமான வழியில் மைய அரசும், நீதிமன்றங்களும் செய்கின்றன.

மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது, மாநில அரசு நடத்தும் தேர்வுகள் தரமற்றவை; மைய பாடத்திட்டம், தேசியத் தேர்வுகள் என்றால் தரமானது; மாநில அரசு நிர்வாகம் ஊழல்மயமானது, சி.பி.ஐ. போன்ற மைய அரசின் அமைப்புகள் அப்பழுக்கற்றவை; மாநிலக் கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் ஊழலும், முறைகேடுகளும் நிரம்பியவை, தேசியக் கட்சிகள் நேர்மையானவை என்றவாறு ஒரு பொய்யை தமிழகப் பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதன் நீட்சிதான் நீட் தேர்வுத் திணிப்பு.

*(9) நீதிமன்றம் மக்கள் நலனுக்காக நீட்டை அமுல்படுத்தியது*

நீட் விசயத்தில் நீதிமன்றத்தின் யோக்கிதை என்ன என்று பார்ப்போம்

ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்கு முன்பே தீர்ப்புக் கூறுவது ஊழலுக்கு நிகரான முறைகேடு. நீட் தேர்வு வழக்கில் இம்முறைகேட்டினைத் துணிந்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். நீட் தேர்வு தேவையா என்பது குறித்து நடந்த வழக்கை விசாரித்த அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, இத்தேர்வு தேவையில்லை எனப் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மைய அரசு வழக்கு போட்டது. உச்ச நீதிமன்றம் அதனை இன்னும் விசாரிக்கவே இல்லை. இருப்பினும் அதற்குள் நீட் தேர்வை அமல்படுத்துவது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முடிவு அமல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வு சரியா, தவறா என்பது இனிமேல்தான் விசாரிக்கப்படும்.

உதாரனமாக சங்கராச்சாரியாரை விடுதலை செய்துவிட்டு விடுதலை சரியா? தவறா என விசாரிப்பது போல்

இதில் காட்டிய அவசரத்திற்க்கு காரனம் மானவர் நலனா அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளைக்கான நலனா?

*(10) இந்திய மானவர்களை வெளிநாட்டு கல்வி நிருவனம் கொள்ளை அடிப்பதா இங்கே மருத்துவ கல்லூரிகள் திறந்தவர்கள் கதி என்னாவது என்ற அரசீற்றம் காரனமாக நீதிமன்றம் உத்தரவிட்டு மருத்துவ கவுசில் கொன்டு வந்தாகவும் அதை காங்கிரஸ் வேறு வழி இல்லாமல் ஏற்றதாகவும் ஒரு கதை அளக்கிறார்*

நீட் தேர்வை அமுல் படுத்த சொன்ன மருத்துவ கவுன்சில்  அதிகாரியி லட்சனத்தை பார்ப்போம்
கேத்தன் தேசாய் ஏற்கனவே மருத்துவ கவுன்சில் தலைராக இருந்த பொழுது ஊழல் செய்து மாட்டி கொன்டவன் 2010 ல் அவன் வீட்டில் இருந்து 500 கிலோ தங்கம் கைபற்றப்பட்டது கனக்கில் வராத சொத்து மதிப்பு 2500 கோடி

2016 –17ஆம் ஆண்டுக்கான உலக மருத்துவக் கழகத் தலைவராக கேதன் தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது சி.பி.ஐ. போட்டிருக்கும் கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாகப் பொய் சொல்லி, தேசாயை இந்தப் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். இந்த அசிங்கமான உண்மையை ராய்ட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராய்ட்டர் புலனாய்வு தேவைப்படாத வேறொரு உண்மையும் இருக்கிறது. 2013-இல் கேதன் தேசாய்க்கு குஜராத்தில் மறுவாழ்வு தரப்பட்டபோது, அங்கே முதல்வராக இருந்தவர் திருவாளர் மோடி. தேசாய்க்கு சர்வதேச கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், பிரதமராக இருப்பவரும் திருவாளர் மோடிதான்.

தகுதி வாழ்க, திறமை வாழ்க, நல்லொழுக்கம் வாழ்க, நீட் வாழ்க! பாரத் மாதா கி ஜெய்!

No comments:

Post a Comment