Saturday, September 9, 2017

மாபலிச் சக்கரவர்த்தியின் கதை

Babu pk
Via Facebook
2017-09-

சின்னத் திரு ஓணம் வந்தல்லோ...

மாபலிச் சக்கரவர்த்தியின் கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். நான் சொல்லப் போற செய்தி கதைக்காக இல்லை.

எத்தனை ஒரு குயுக்தி இருந்தால், நன்கு ஆட்சி புரிந்து கொண்டிருக்கக் கூடிய, மக்களால் விரும்பப்படக்கூடிய ஒரு மன்னனை அழிக்கத் துணிந்திருப்பார்கள்....

நேரிடைப் போரில் வெற்றி பெற முடியாது என்று குயுக்தியாக மூன்றடி மண் தானமாகக் கேட்டு... அதையும் மாயத்தினால் ஏமாற்றி அளந்து அடக்கியதாகக் கதை புனையப்பட்டிருக்கிறது.

என் கேள்விகள் என்னவென்றால், கதையாகவே இருந்தாலும், மூன்றடி மண் எனக் கேட்டால், அது நிலத்தையே குறிக்கும். அவ்வகையில் முதல் அடியை பூமி முழுவதிலும் வைக்கிறான் அந்த யாசகன். ஒரு குள்ளனின் உருவத்தில் வந்து யாசகம் கேட்டு விட்டுப் பின் பேருருவம் எடுத்து அளந்ததே ஏமாற்று வேலை.

அப்படி ஒரு அடியை பூமியில் வைக்க வேண்டும் என்றால், இன்னொரு கால் எங்கே இருந்திருக்கும்?

சரி, இரண்டாவது அடியை விண் முழுவதும் வைத்து அளந்தான் என்றால், நிச்சயம் விண்ணுக்கு வெளியே நின்றுதான் விண்ணை அளந்திருக்க முடியும். அப்படியெனில் விண்ணுக்கு வெளியே என்ன இருந்திருக்கும், அக்குள்ளன் எங்கே நின்றிருப்பான்?

அவன் கேட்டது மண், ஆனால், இரண்டாவது அடியில் அளந்தது விண். மண்ணை அளந்த அடியும், விண்ணை அளந்த அடியும் ஒரே அளவாகவா இருந்திருக்கும்? இங்கே அளவுகோலும் ஏமாற்று வேலையாக அல்லவா இருக்கிறது?

இப்பொழுது மூன்றாவது அடியை எங்கே வைக்க என்று எதுவும் தெரியாதது போல் கேட்கிறானாம், அதை என் தலையில் வையுங்கள் என்று மாபலி சொன்னானாம்.... நாம் எரிச்சலாக இருக்கும்பொழுது... நம் வீட்டிலுள்ளோர் இதை எங்கே வைக்க என்று கேட்டால்.... ஆ...ங்... என் தலையில வை என்று சொல்வோம்....

அதைப் போன்றே இந்த குள்ளன் செய்த செயலைப் பார்த்து எரிச்சலுற்ற மாபலி அப்படிச் சொல்லியிருக்கலாம்.. யார் கண்டார்? அதை என்னவோ மாபலி பணிந்து சொன்னது போல் கதை புனைந்து... தலையில் வைத்து அளப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவனை அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பி விடுகிறானாம்.

பாதாள லோகம் என்று இருந்தால், மூன்றாவது அடியை அங்கே வைத்துத் தொலைத்திருக்கலாமே? எது எப்படியோ.... புரட்டுக் கதைகளைப் புனைந்து விட்டார்கள்....

ஆனால், இன்றைய சொம்புகள் இன்னும் பலபடிகள் மேலே போய்.... "வாமன ஜெயந்தி வாழ்த்துகள்"னு... சொல்றதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை....

மேய்க்கிறது எருமை... இதுல ஒரு பெருமை.... ச்சை....

No comments:

Post a Comment