Suresh kannan
Via Facebook
2017-09-23
இந்தக் கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக ஆண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
ஃபோர்னோ படங்களை பார்க்காத ஆண்களே இருக்க முடியாது. அதில் ‘நடிக்கும்’ பெண்கள் உண்மையிலேயே தங்களின் உடலின்பதை நுகர்வதாக பெரும்பாலோனோர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவ்வாறாக அது எடிட் செய்யப்படுகிறது. என்பது பலர் அறியாதது, அவைகளில் சித்தரிக்கப்படும் விதமாக ‘நீண்ட நேரம், விதம்விதமாக’ செயல்படுவதெல்லாம், நடைமுறையில் சாத்தியம் அல்லாத, திறமையான முறையில் உருவாக்கப்பட்ட காட்சிகளே.
நம்முடைய பாலியல் விழைவிற்கு, வக்கிரத்திற்கு வடிகாலாக இருக்கும் ஃபோர்னோ படங்களின் பின்னால் இன்னொரு இருண்ட உலகம் இருக்கிறது. பொதுவாக அவற்றை நாம் அறிவதில்லை. அல்லது அறிய விரும்புவதில்லை. அவை நமக்கு குற்றவுணர்வு ஏற்படுத்தக்கூடும் என்கிற நினைப்பினாலோ என்னமோ.
ஒரு முன்னாள் ஃபார்ன் நடிகையின் துயரமான அனுபவங்கள் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன. பெண் என்பவளை வெறும் மனித உடலாக, கவர்ச்சிப்பண்டமாக உபயோகித்து தூக்கியெறிவது ஃபார்ன் உலகம். ஏறத்தாழ ஆணுறையைப் போல.
அவை காட்சிப்படுத்தும் விதம் நமக்கு கிளுகிளுப்பை ஊட்டினாலும், அதற்குப் பின்னே அவர்கள் படும் சிரமங்கள் நாம் அறியாதது. குறிப்பாக பெண்கள். அவர்களும் உடலின்பத்தை நுகர்கிறார்கள் என்று நம்மில் பெரும்பாலோனார் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறானது இது.
கட்டுரையைப் படியுங்கள். இதற்கு முந்தைய இரண்டு பாகங்களும் உள்ளன. அவற்றையும் வாசித்து விடுங்கள். அடுத்த முறை ஒரு ஃபார்ன் படத்தைப் பார்க்கும் முன் இவர்களின் துயரங்கள் உங்களின் மனதில் ஓரத்தில் வந்து செல்லக்கூடும்.
இத்துறையில் ஈடுபடும் பெண்களின் சிரமங்களைப் போலவே ஆண்களுக்கான பிரத்யேகமான வேதனைகளும் உள்ளன. அவற்றையும் தேடி அறியலாம்.
http://www.vinavu.com/2017/08/18/dirty-and-dark-side-of-pornography-part-one/
http://www.vinavu.com/2017/08/24/dirty-and-dark-side-of-pornography-part-2/
http://www.vinavu.com/2017/09/22/dirty-and-dark-side-of-pornography-part-3/
No comments:
Post a Comment