From whatsup
ரொம்ப சிம்ப்பிளாவே சொல்லிடுறேன்...
2006 - 2011 ஐந்து வருட திமுக ஆட்சியில்.. மொத்தமாக திமுகழக ஆட்சி வாங்கிய கடன் தொகை 43 ஆயிரத்தி 892 கோடி ரூபாய்.
அந்த ஐந்து வருடத்தில் திமுக ஒரே ஒரு முறை கூட பஸ் கட்டணத்தை ஏற்றவில்லை... ஒரே ஒரு முறை கூட மின் கட்டணத்தை ஏற்றவில்லை... ஒரே ஒரு முறை கூட பால் விலையை ஏற்றவில்லை.., ஒரே ஒரு முறை கூட வாட் வரியைக் கூட்டி பெட்ரோல், டீசல் விலையை ஏற்றவில்லை..., ஒரே ஒரு முறை கூட விற்பனை வரியை ஏற்றவில்லை...,
சுறுக்கமா சொல்லணுன்னா... வருமானத்தைப் பெருக்க மக்களிடமிருந்து திமுக ஆட்சி அடித்துப் பிடுங்கவில்லை.
போகட்டும் அந்த நாற்பத்தி மூவாயிரத்தி சொச்சம் கோடிக்கு மக்களுக்கு என்னென்ன செய்தது திமுக..?!
#ஸ்ட்ரைட்டா 7000 கோடி ரூபாய் விவசாயிகள் வாங்கி வைத்திருந்த கடனை தள்ளுபடி செய்தது..!
#ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்து 8 மாவட்ட மக்களின் தாகம் தீர்த்தது.
#ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்து 6 மாவட்ட மக்கள் தாகம் தீர்த்தது.
#நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நிதி அளித்து சென்னை மக்களின் தண்ணீர் தட்டுப்பட்டை நீக்கியது.
#4300 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தீட்டி நிதி ஒதுக்கி.. உற்பத்தி செய்து... அந்த மின்சாரத்தின் மூலம் தான் இன்றைக்கு தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலையினை உருவாக்கியிருக்கிறது.
#சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
#இந்தியாவிலேயே மிகப் பெரிய தலைமைச் செயலகத்தைக் கட்டி முடித்திருக்கிறது.
#ஆசியாவிலேயெ மிகப் பெரிய அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை கட்டி திறந்திருக்கிறது.
#மூன்று லட்சம் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றித் தந்திருக்கிறது...!
இப்படியாக நிறைய அடுக்கிக் கொண்டே செல்லலாம்..!
திமுக ஆட்சியை விட்டு அகலும் போது தமிழகத்தின் மொத்த கடன் தொகையாக விட்டுச் சென்றது ஒரு லட்சம் கோடி தான். அதில் திமுக அந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கியது வெறும் 43 ஆயிரத்தி 892 கோடிகள் மட்டுமே.!
அடுத்து அதே 2011இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தமிழகத்தின் கடன் கூடிவிட்டது என்று கூப்பாடு போட்டு கடனைக் குறைக்கப் போகிறேன் பேர்வழி என்று மக்களிடமிருந்துபிடுங்கியது கீழ்வருமாறு...
#ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே... அதாவது ஜூன் 2011இலேயே வாட் வரியை உயர்த்தி வருடத்திற்கு குறைந்த பட்சம் 5200 கோடி வருமானத்தினை மக்களின் சுறுக்குப் பைகளின் இருந்து பிடுங்கிக் கொண்டது. அந்த வகையில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் அதிமுக அரசு மக்களிடமிருந்து பிடுங்கிய மொத்த #கூடுதல் தொகை... ரூபாய் 31200 கோடி அதாவது முப்பத்திஓராயிரத்தி இரநூறு கோடி..!
#அடுத்து பால் விலையை இரண்டு முறை ஏற்றி அதன் மூலம் இந்த ஆறு ஆண்டுகளில் மக்களிடமிருந்துஇருபத்தி ஐந்தாயிரம் கோடி வரை #கூடுதலாக தண்டல் வசூல் செய்திருக்கிறது..!
#அடுத்ததாக மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி... அதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில்... ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் #கூடுதலாக மக்களிடமிருந்துஆட்டையை போட்டிருக்கிறது..!
#மேலும் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி... அதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் #கூடுதலாக மக்களிடமிருந்து முப்பதாயிரம் கோடியை ஆட்டை போட்டிருக்கிறது..!
#பத்திரப்பதிவுக் கட்டணங்களை உயர்த்திய வகையில்...#கூடுதலாக ஐந்தாயிரம் கோடியும்... இப்போ பெட்ரோல், டீசலுக்கு வாட் வரியை உயர்த்தியதன் மூலம் இந்த பத்து நாட்களிலேயே சில நூறு கோடிகளையும் #கூடுதலாக..., கல்லாவில் சேர்த்துக் கொண்டிருக்கிறது..!
#இவை அனைத்திற்கும் மேலாக கடந்த திமுக ஆட்சியில் இருந்ததை விட மது விற்பனையை இரு மடங்காக உயர்த்தி அதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் #கூடுதலாக முப்பதாயிரம் கோடியை மக்களிடமிருந்து சுரண்டியிருக்கிறது...!!!
ஆக அதிமுக ஆட்சி... அதாவது ஜெயலலிதா, பன்னீர்செல்வம்,எடப்பாடி போன்றோர் கடந்த ஆறு ஆண்டுகளில் அதற்கு முன்னதான திமுக ஆட்சியில் இருந்ததைவிட #கூடுதலாக... மக்களிடம் சுரண்டி, பிச்சை எடுத்து, திருடி, ஆட்டை போட்டு சேர்த்த தொகை மட்டுமே எப்படி குறைவாக கணக்கிட்டாலுமே கூட....
ஒன்னரை லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கிறது...!
அந்த பணத்தைக் கொண்டு அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த ஒரு லட்சம் கோடி கடனை அடைத்து விட்டு..., சர்ப்ளஸ் ஃபண்டாக ஐம்பதாயிரம் கோடி கையிருப்புடன் அதிமுக அரசு இருந்திருக்க வேண்டும்.
காரணம்... கடந்த ஐந்து ஆண்டுகளில்... அதிமுக அரசு...
#எந்த குடிநீர் திட்டங்களையும் கொண்டுவரவில்லை..
#எந்த போக்குவரத்து திட்டங்களையும் கொண்டுவரவில்லை...
#எந்த புது மின் உற்பத்தி திட்டங்களையும் கொண்டுவரவில்லை...
#எந்த புது சாலையோ, பாலமோ, அரசு கட்டிடங்களோ, மருத்துவமனைகளோ... இத்தியாதிகளோ கட்டவில்லை...
#எந்த புதிய தொழிற்சாலையையும் கொண்டு வரவில்லை...
ஆக மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் செய்யாமல்... அதாவது செலவே செய்யாமல், வருமானத்தை மட்டும் மக்களிடமிருந்து புடுங்கி எடுத்தும்....
இன்றைக்கு 3.14 லட்சம் கோடி கடனாளியாக தமிழகத்தை ஆக்கி வைத்திருக்கிறது.! அதாவது கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இரண்டேகால் லட்சம் கோடி கடனை வாங்கிக் குவித்திருக்கிறது அதிமுக அரசு...!!
பல்லாயிரக்கணக்கான கோடி கொடநாடு எஸ்டேட்டுகளும், ஃபீனிக்ஸ் மால்களும், கூவத்தூர் செலவுகளும், ஓட்டுக்கு மக்களிடம் தூக்கிப் போடும் பிச்சைக் காசுகளும், ஐதராபாத் திராட்சைத் தோட்டங்களும், மிடாஸ் ஆலைகளும்... இன்னபிறவும் இந்த பற்று வரவுகளை டேலி செய்யுமா என்றும் புரியவில்லை...!
No comments:
Post a Comment