Narain Rajagopalan
Via Facebook
2017-09-16
புல்லட் ரயில் கடன் சுமையும்,
இந்தியாவின் வளர்ச்சி விகிதமும்
==============================
சில அடிப்படைகள்
பணவீக்கம் என்பது static விகிதமல்ல. தொடர்ச்சியாக மாறக் கூடிய ஒரு காரணி. ஒரு வளரும் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க தான் செய்யும். ஆனால் தொடர்ச்சியாக பணவீக்கம் அதிகரித்தாலும் அது ஒட்டு மொத்த ஜிடிபியை கீழிறக்கும்.
ஒரு வாதத்திற்கு இந்தியாவின் பணவீக்கம் 5% என்று வைத்துக் கொண்டால்
நேற்று நான் 100ரூ வாங்கியப் பொருள் இந்த காலாண்டோ / ஆண்டோ ரூ. 105, அடுத்த ஆண்டு இது இப்படி இருக்கும்
ஆரம்பப் பொருளின் விலை +
அவ்வாண்டின் பணவீக்கம் +
இவ்வாண்டின் பணவீக்கம்
Put Simply,
100 + 100*5% (Year1) + 100*5% (Year 2) = 110.25
மேம்போக்காய் பார்த்தால் நியாயமாய் 100க்கு 5ரூபாய் என்றால் 2 வருடங்களில் ரூ.110 தான் வர வேண்டும். ஆனால் இங்கே 110.25 வருகிறது. இது தான் compounding. 30 வருடங்களில் இந்த 100க்கான 5% விகிதம் எங்கிருக்கும் (குறையும் இந்திய ரூபாய் மதிப்போடு)
Compounding தான் வரவிற்கும், கடனிற்கும் நிதி சூழலில் இருக்கும் வரம் & சாபம். இதுவே செலவாக இல்லாமல் வைப்பு நிதியாக இருந்தால் நாம் மகிழ்ச்சி அடைவோம். அதுவே செலவாக இருந்தால் அதிகமாக நாம் நம் கையை விட்டு கொடுக்க வேண்டியதிருக்கும். பார்க்க பின்னங்களாக இருந்தாலும் 88,000 கோடி கடனில் இந்த பின்னங்கள் என்ன விளைவினை பணவீக்கத்தோடு ஏற்படுத்தும் என்று கணக்கிட்டால் தலை சுற்றும்.
ஒரு over simplification செய்வோம். அப்படியென்றால் நாம் இப்போது வளர்ந்துக் கொண்டிருக்கும் 6-7% வளர்ச்சி விகிதம் போதாது. பணவீக்கம் 3% என்று வைத்துக் கொண்டால், அதையும் தாண்டி 10% வளர்ந்தாலேயொழிய, இந்த 6-7% வளர்ச்சியை நம்மால் நிலை நிறுத்திக் கொள்ள முடியாது. இது தான் யதார்த்தம். இது தான் நிதர்சனம். இதை எந்த கொம்பானாலும் மாற்ற முடியாது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால்
1992-இல் ஒரு அமெரிக்க டாலர் = 31.0895 இந்திய ரூபாயாக இருந்தது.
2017-இல் ஒரு அமெரிக்க டாலர் = 64.0873 இந்திய ரூபாயாக இருக்கிறது.
இது தான் பணவீக்கம் ஒரு கரன்சியை என்ன செய்யும் என்பதற்கான அடிப்படை. 25 வருடங்களில் அதே ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் 2.06 முறை அதிகமான இந்திய ரூபாயை இழக்கிறோம்.
இதே பணவீக்கம் தான் ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதங்களுக்கான அடிப்படை காரணி என்பதும் இந்த இடத்தில் முக்கியம்.
நாம் இப்போது எங்கிருக்கிறோம்?
(ஜிடிபி முழுமையானது அமெரிக்க டாலர் ட்ரில்லியன்களில் அதாவது $1,000,000,000,000 = $1 டிரில்லியன்)
அமெரிக்கா - $18
சீனா - $11
ஜப்பான் - $4.4
ஜெர்மனி - $3.3
யூ.கே - $2.9
ப்ரான்ஸ் - $2.4
இந்தியா - $2
இத்தாலி - $1.8
பிரேசில் - $1.75
கனடா - $1.5
Source: World Economic Forum, March 2017 Report.
உலகப் பொருளாதாரப் பட்டியலில் ஏழாவது இடத்தில் நாம் இருக்கிறோம். இது இன்றைய நிலை.
அடுத்த 25-30 வருடங்களில் எங்கேப் போவோம்?
ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பரின் 2050 டாப் 10 பொருளாதாரங்கள் அறிக்கை* 2050-இல் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் இருக்குமென்று சொல்கிறது.
இதனுடைய assumption என்னவென்றால் அடுத்த 25 - 30 வருடங்களுக்கு சீனா சராசரியா 5-6% வளர்ச்சி விகிதத்திலும், இந்தியா 6-8% வளர்ச்சி விகிதத்திலும், அமெரிக்கா 1-2.5% வளர்ச்சி விகிதத்திலும் இருக்க வேண்டும். 2050இல் உலகின் மொத்த ஜிடிபி இப்போது இருப்பதை விட இரடிப்பாகும் என்கிறார்கள். இவை எல்லாமே இப்போதைக்கு projections தான்.
உள்நாட்டுப் போர், வட கொரியா போல சீண்டல்கள், பருவ சூழல் காலநிலை மாற்றங்களால் உருவாக்கக் கூடிய இழப்புகள், ட்ரம்ப் மாதிரியான protectionist பேசும் தலைமைகள் என ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.
Let's acknowledge and accept the fact, நம்மால் ஒரு நாளும் சீனாவை அடுத்த நூறு ஆண்டுகளுக்கு முந்த முடியாது. ஆக இரடிப்பாக மாறினாலுமே கூட இந்தியாவில் ஜிடிபி என்பது அதிகப்பட்சம் அடுத்த 33 ஆண்டுகளில் $10 - 18/20 டிரில்லியன்களாக ஆக மட்டுமே மாற வாய்ப்பிருக்கிறது. மிக வளர்ந்த நாடான அமெரிக்காவின் இன்றைய முழுமையே வெறும் $18Tn தான் எனும் போது நாம் போக வேண்டிய தூரம் எவ்வளவு என்பது கண்கூடு. அதுவுமே கூட, assuming we grow at a constant 7 - 8% for next 25-30 years without a fall.
ஆனால், புல்லட் ரயில் கடன் சுமை பற்றி நான் எழுதிய கடந்த சில பதிவுகளில் சிலர் நாம் $40 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவோம். வேகமாக வளருகிறோம். 5% வளர்ச்சி வந்தாலே நாம் செவ்வாய்க்கு போவோம். புளூட்டோ பாஜக அனைத்து கண்டங்கள் மாநாட்டின் பொது செயலாளராக நானே இருப்பேன் என்கிற அளவில் கருத்துக்கள் வருகிறது.
இது எதுவுமே நடக்காது. நடக்க சாத்தியங்களுமில்லை. மோடியை விட மோடியின் பக்தர்களும், இந்திய லிபரலிஸ்டுகளும் மோசமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. Growth can't be linear for ever. It will always go thru its own bumps and spikes.
பொருளாதார வரலாறு தெளிவாக இருக்கிறது. கிரேட் பிரிட்டனாக இங்கிலாந்து உலகை ஆண்ட கடந்த 300-350 வருடங்களுக்குப் பிறகு, 1872-இல் அமெரிக்கா பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் பொருளாதார வளர்ச்சிக் கொண்ட நாடாக வருகிறது. 2025-30இல் சீனா அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்திற்கு வரும். ஆக ஒரு பெருவளர்ச்சி நாடாய் ஜிடிபியை மாற்ற குறைந்த பட்சம் 150 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
எப்படிப் பார்த்தாலும் இந்த புல்லட் ரயில் சுமை என்பது அடுத்த 15 ஆண்டுகளுக்கு உடனடியாக நம்மை பாதிக்கா விட்டாலும் (15 Years Moratorium), நீண்ட கால நோக்கில் பெரும் சுமையாகவும், அழுத்தமாகவும் மாறும். இந்த கடனை ஜெனடிக்கல் டிஸ்ஸார்டர் போல நாம் தலைமுறை தலைமுறையாக தள்ளுவோம். இது இந்திய ஒன்றியத்தை தொடர்ச்சியான கடன் சுழற்சியில் (Debt Cycle) தள்ளி நம்முடைய வளர்ச்சியை பாதிக்கும். ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை முழுமையாய் மூன்று வேளை உணவு கூட உண்ண முடியாத நாட்டிற்கு இது இப்போதைக்கு தேவையா ?
விழிப்படையுங்கள்.
நிராகரியுங்கள்.
நம்மால் முடியவில்லை என்றால் வெளியேறுவோம்.
* The World in 2050 -The long view: how will the global economic order change by 2050? - Price Waterhouse Cooper Report
#BulletTrainMadness
No comments:
Post a Comment