Karthick ramasamy
Via Facebook
2017-09-12
ஆதாரமே இல்லாமல் லெமுரீயா என்று ஒரு கண்டம் இருந்தது அது ஆப்ரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் தமிழகத்தையும் இணைத்த அளவிற்கு இருந்தது, அவ்வளவு பெரிய கண்டம் முழுவதும் தமிழர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே நம்புவான்
ஆதாரமே இல்லாமல் தமிழ் ஐம்பதாயிரம் வருடம் பழமையானது, உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளும் தமிழில் இருந்து தோன்றின என்று சொன்னாலும் நம்ம ஆள் உடனடியாக எந்த கேள்வியும் கேட்காமல் பரப்புவான்.
ஆதாரமே இல்லாமல் மாட்டுமூத்திரம் குடித்தால் கேன்சர் குணமாகும் என்று சொன்னாலும் மாங்கு மாங்கென்று பரப்புவான்.
ஆனால் ஆதாரத்துடன்
1) இந்தியாவில் தலைசிறந்த மருத்துவ, பொறியியல் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக புள்ளி விபரத்தை சொன்னால் நம்ப மாட்டான்.
2) இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களும் ஊரக சுகாதார கட்டமைப்பும் தமிழகத்தில்தான் உள்ளன என்று சொன்னால் நம்ப மாட்டான்.
3) பள்ளிப் படிப்பை முடித்தவுடன் உயர் கல்விக்கு கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்று சொன்னாலும் நம்ப மாட்டான்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவுகளே என்று சொல்லி காவிகளுக்கு அடியாள் வேலை பார்க்க சென்று விடுவான்.
No comments:
Post a Comment