"புத்தர் ஏன் திருடாதே, பொய் சொல்லாதே... இப்படி சொன்னார்? அவர் யாரிடம் சொன்னார்? எதற்காக சொன்னார்? இதை தெரிந்துக்கொண்டால் - பார்ப்பனியம் புரிந்துவிடும்" - ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.
பலபேர் 'ஆகா, ஓகோன்னு' ஆதரவு தந்தாங்க! ஏகப்பட்ட பகிர்வுகளை பார்த்தேன்.
ஒருவேளை புரிந்துட்டாங்களோன்னு ஆச்சரியமா இருந்தது. நன்றி.
இருந்தாலும், ஒரு சின்ன விளக்கம்.
ஒரு பார்ப்பன ஆதரவாளர் என்னிடம் சொன்னது இது, "ஒரு பிராமணச் சிறுவன் தன் தாயுடன் பூ விற்று தன் கல்விசெலவை ஏற்கிறான்..ஒரு SC/ST வகுப்பை சேர்ந்த மாணவன் ஊக்க தொகையை வைத்து சாராயம் குடிக்கிறான்.. சலுகை யாருக்கு தேவை..?" எனக் கேட்டார்.
இதை அப்படியே கடந்துவிட முடியாது.
1.பார்ப்பன சிறுவனை அந்த சமுகம் கைவிட்டுவிட்டதா?
பதில்: இருக்கலாம். ஆனால் அதற்கு வலுவான காரணங்கள் இருக்கனும். அதற்கு பார்ப்பன சித்தாந்தங்கள் தான் பொறுப்பே தவிர, நாம் ஒன்றும் அதற்கு செய்ய முடியாது.
2.பார்ப்பனர்கள் தங்களை தாங்கள் கடவுளாக நினைத்துக்கொண்டு நம்மை கேவலமாக நினைத்தாலும்.. நாம் அவரை 100% வெறுக்கத் தேவையில்லை! அவர்கள் செய்யும் வினைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதே நம் வேலையாக இருக்க வேண்டும்.
3.எப்படிப்பார்த்தாலும் .. அவர்களின் கருத்தியலின் மைய புள்ளி 'பார்ப்பன நலன்', இதைத்தாண்டி ஒன்றும் இல்லை. அதற்கு பெரிய பெரிய விலைகள் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். நாம் இதைப்புரிந்து கொண்டால் மட்டுமே நம்மை தற்காக்கவோ எதிர்த்து போரிடவோ முடியும்.
4.அமெரிக்கா எப்படி இந்த உலகத்த பலி கொடுத்து, அரசியல் செய்யுதோ.. அதுவே இந்தியாவிற்குள் பார்ப்பனர்களும்!
சுருக்கமாக உலக அரசியல் என்பது, 'அமெரிக்க பெரும் நிறுவன முதலாளிகளின் நலன்'.
அதே இந்தியாவில் வரும்போது 'பார்ப்பன நலனுடன்' கைகோர்த்து நிற்கிறது'.
5.புத்தர், தன் வாழ்நாள் முழுவதும் பல பல விவாதங்களில் ஈடுபட்டு வந்தார்.
அப்பொழுது அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது பார்ப்னர்கள் சொன்ன ஒரு விடயம்,
அதாவது பார்ப்பனர் அல்லாதோர், பார்ப்பனர்கள் போல நடந்துகொள்வது இல்லை, ஆக, பார்ப்பனருக்கும், பார்ப்பனன் அல்லாதோருக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கிறது என்றார்கள். உதாரணமாக பார்ப்பனர அல்லாதோர், வெளிப்படையாக நேர்மை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றனர்.
6.பின்பு தான் புத்தர் இதில் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதை கண்டார்.
பார்ப்பனர்கள் தன் பார்ப்பனியத்தை நிறுவும்முன், அந்த சுற்றுப்புறத்தில் ஒரு ஒழுங்கற்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். உதாரணமாக, இன்றும்கூட, 21ஆம் நூற்றாண்டில், காலத்திற்கு தகுந்தார்ப்போல் -நாம் காசுக்கு பின்னாக ஓடுகிறோம், எதுவும் தவறில்லை என்ற எண்ணத்தில் வாழ்கிறோம், பெண்களை போகப்பொருளாக பார்க்கிறோம், குடிக்கிறோம், அதிகமாக தொலைக்காட்சி பார்த்து கெட்டுப்போகிறோம், மாடு உண்கிறோம், கமர்சியலைசேசனில் தொலைகிறோம், இப்படி கீழான பல கருத்தியல் நியாயப்படுத்தப்படுகிறது. அல்லது இவை கீழானவை என்று நம்ப வைக்கப்படுகிறது. குறிப்பாக படிப்பை ஒரு சுமையாக கருதுகிறோம்.
7.அதாவது இன்று இருக்கும் இந்துமுன்னனிக்காரனை வைத்து நமக்கு வைக்கிறான் செக்! பார்ப்பான் நல்லா படிப்பான். உன்னால அந்த மாதிரி படிக்க முடியுமான்னு சவால்விடுகிறான்.
8.இன்னும் தெளிவாக : சினிமாக்களை வைத்து பல தீமையான கருத்தியலை பரப்புகிறான். 'குடிப்பது ஒரு சாலிக்காக, படிப்பது ஒரு சுமை .. ' இப்படி பல!
ஆனால் இவனே, வெவரமாக நீ சாலிக்காக குடிக்கிறாய், படிக்க மாட்டேங்குறாய், என ஆள் வைத்து நக்கல் செய்கிறான்!
9.இது என்ன புதிதாக கதை சொல்கிறாய்ன்னு கேட்கிறீங்களா? சினிமாவை கெடுத்தது பார்ப்பனர்கள் இல்லையா? (எப்படி கெடுத்தார்கள் என வே.மதிமாறன் ஒரு பட்டியலே போட்டுருப்பார்).
10.இப்போது நீங்கள் போய் புத்தரிடம் கேட்டால், 1.குடிக்காதே, 2.படிப்பை அலட்சியப்படுத்தாதே என்பார்.
11.இதற்கு ஆதாரம்: தலாய்லாமா சொல்லியுள்ளார். பௌத்ததிற்கு ஒரு நிலையான கொள்கை இல்லை, அது காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டே இருக்கும் என்று.
அது பார்ப்பனியம் எதை உன்னை செய்ய வைத்து, அதை தவறு என்கிறதோ? உடனே, அங்கு பௌத்தம் பிறந்து அதை முறியடிக்கிறது.
12.சூத்திரன் எல்லாம் பிக் பாசு ஓவியாவை பார்த்து வாயை பிழக்கிறான் என்றால், புத்தரை தண்ணீர் தொளித்து எழுப்பி கேட்டால், 'ஓவியாவை பார்க்காதே' என்று ஒரு சட்டம்போடுவார்.
13.இந்த வகையான பௌத்ததை பார்ப்பனர்கள் அழிக்கவே, பௌத்தர்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தார்கள். இந்தியாவில் பிறந்து, சிறந்து வளர்ந்த பௌத்தம், கோவில் வாசல்களில் செதர் தேங்காய் ஆனது. ஒரு மொட்டை தலைக்கு ஒரு பொற்காசு தந்தது பார்ப்னனியம், அதன் எச்சங்களே கோவிலில் செதர் தேந்ங்காய் வழிப்பாட்டு முறைகள்.
14.ஒரு பார்ப்பன ஆதரவாளர் என்னிடம் சொன்னது இது, "ஒரு பிராமணச் சிறுவன் தன் தாயுடன் பூ விற்று தன் கல்விசெலவை ஏற்கிறான்..ஒரு SC/ST வகுப்பை சேர்ந்த மாணவன் ஊக்க தொகையை வைத்து சாராயம் குடிக்கிறான்.. சலுகை யாருக்கு தேவை..? "
எனக் கேட்டார். அதற்கான பதில் தந்துவிட்டதாக நினைக்கிறேன்.
15.இந்துமதம் என்பதும், இந்தியம் என்பதுமே, பார்பானின் பதுங்குகுழிகளில் சில.
இந்துமதம் மீதும், இந்தியா மீதும் பற்றுள்ள பார்ப்பனர்கள் ஏன் அமெரிக்கா போகிறார்கள் என்ற கேள்விக்கு நியாயமான பதில் இல்லை!
என்னை கேட்டால்,
15.1 பார்ப்பன நலன், இந்தியா பாலைவனமாகிறது, so அமெரிக்காவின் வளத்தை நோக்கி ஓடுகிறது பார்பபனியம்.
15.2 இந்தியாவின் தெருக்களை போய் பாருங்கள், குப்பைகள்! இவை அனைத்துமே மனுதர்ம ஆட்சியின் எச்சங்களே!
15.3 பார்ப்பனியம் தனது ஆக்டபசு கரங்களை கொண்டு அமெரிக்காவரை விரியப்பார்க்கிறது. விஷ்ணுவின் சித்தப்பா தான் இயேசு என கூடிய விரைவில் வரும் செய்தியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
நான் Atheist தமிழன், SK Kumar.
No comments:
Post a Comment