Narain Rajagopalan
Via Facebook
2017-09-15
புல்லட் ரயில் அறிவிப்பு அறிக்கையினைப் படித்தேன்.
1 இலட்சம் கோடிகளில் உருவாகிறது. இதில் 80% ஜப்பான் தருகிறது. அதாவது 80,000 கோடிகள். இந்த 80,000 கோடிகளுக்கு முதல் 15 வருடங்களுக்கு வட்டி கிடையாது. (15 years moratorium) அதற்கு பிறகு இந்த கடனை அடுத்த 35 ஆண்டுகளில் 0.5% வட்டி விகிதத்தில் திருப்பித் தர வேண்டும். இது தான் ஒப்பந்தம்.
0.5% வட்டி என்பது 80,000 கோடிக்கு 400 கோடிகள். EMI கணக்கில் ப்ளாட்டாக கணக்கிட்டுப் போட்டாலும், வருடத்திற்கு ரூ. 2,285.71 கோடிகள் அசல் + இந்த 400 கோடிகள் ஆக மொத்தம் = ரூ. 2,685.71 கோடிகள் 2032-ஆம் வருடத்திலிருந்து அடுத்த 35 வருடங்களுக்கு 2067 வரைக்கும் கட்ட வேண்டும்.
அப்பன் ஆத்தாளை உருவிய தலைமுறைகளைப் பார்த்திருக்கிறேன். தாத்தா பாட்டி தலைமுறையை உருவிய ஆட்களைக் கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தியாவின் எதிர்கால சந்ததிகளின் வாழ்வியலை இன்றைக்கே அடகு வைக்கின்ற புத்திசாலியை இப்போது தான் பார்க்கின்றேன்.
நாட்டினை முன்னேற்றுகின்ற திட்டங்களில் Future Discounted Cash flow விகிதங்கள் சிக்கல் இல்லை. பல மாநில தலைநகரங்களில் உலக வங்கி உதவியோடு வாங்கிப் போடப்பட்ட மெட்ரோ திட்டம் தலையெடுக்கவே இன்னும் 20-25 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் மோடியார் இதையெல்லாம் செய்கிறார் என்று புலப்படவே இல்லை. ஒரு வேளை, 2030 போல தான் பிரதமராகவோ, தன்னுடைய கட்சி ஆட்சியிலோ இருக்கப் போவதில்லை, அதைப் பற்றி நாம் எதற்கு கவலைப்பட வேண்டுமென்று நினைக்கிறாரோ என்னவோ.
ஏற்கனவே உலகளாவிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ரேஷன் கடைகளை மூடுவது என்பதற்கே இந்தியாவில் பல இடங்களில் வெடிக்கிறது. இந்த இலட்சணத்தில் 2067 வரைக்கும் கடன் வாங்கி புல்லட் ட்ரெயின் விடவில்லை என்று யார் அழுதார்கள்?
காவிகளுக்கு கவர்னென்ஸ் தெரியாதென்பது என்பதும், இந்திய ஒன்றியத்தை அர்ஜெண்டினா போல மாற்றாமல் ஒய மாட்டார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது. ஒரே சந்தோஷம், மோடியார் வெளியே போவதற்குள் தமிழகத்தையும் சேர்த்து ஏகப்பட்ட ‘நாடுகளை’ உருவாக்காமல் போக மாட்டார்.
வாழ்க நீ எம்மான்!
#BulletTrainBakwaas
No comments:
Post a Comment