Sunday, September 17, 2017

பெரியார் மீதான அவதூறுகள் பதில்கள்

Poovannan Ganapathy
Via Facebook
2017-09-17

இன்று பெரியாரின் பிறந்த நாள். பெரியார் என்றவுடன் பற்றி கொண்டு எரியும் பல நபர்கள்,சாதி,மத குழுக்கள் உண்டு. அவர்கள் வீசும் குற்றச்சாட்டுக்கள் பல

அவற்றில் முக்கியமானவை- அவர் வயதான காலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.72 வயதில் அவரை விரும்பி அவர் வீட்டில் வசித்து வந்த பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் விருப்பத்தின் பேரில் நடைபெற்ற திருமணம்.பெண் மேஜர்.வேறு சமூகத்தை சார்ந்தவர். அவர் மனைவியை இழந்த பெரியாரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதை பெரும் குற்றமாக சொல்பவர்கள் எதன் அடிப்படையில் அதனை குற்றமாக பார்க்கிறார்கள்.

   சில நாட்களுக்கு  முன் ஆசிரியர்கள் தினம் வந்தது. முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்.ஹிந்து மதத்தின் தத்துவங்களை பற்றி ஆராய்நது அவற்றின் பெருமையை ?உலகறிய செய்தவர் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மகன் தந்தையை பற்றிய சுயசரிதையில் அவருக்கு இருந்த பல பெண் தொடர்புகளை பற்றி எழுதி உள்ளார். அவர் அறிவில் மயங்கி வந்த பெண்களை அவர் பயன்படுத்தி கொள்ள தயங்கியது கிடையாது,ஆனால் யாருடனும் நீண்ட காலம் அது நீடிக்கவில்லை,யாருடனும்கா தல் கொள்ளவில்லை என்று கூறுகிறார்.
       நாட்டின் குடியரசு தலைவராக இருந்தவர்.அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி ஏதேனும் சிறு குறிப்புகளையாவது பார்த்திருக்கிறீர்களா.அவரை உத்தமராக கட்டமைப்பவர்கள் இடது,வலது,நடு என்று எல்லா இடத்திலும் தயக்கமற்ற நிறைந்திருப்பவர்கள்.
நான் பெரியார் ஆதரவாளன் என்பவர்கள் கூட பெரியார் என்றவுடன் அவர் செய்து கொண்ட திருமணத்தை நக்கல் செய்து பதிவிடுவார்கள்.அவரை பற்றி குறிப்பிடும் போது பெரும் குற்றம் போல பதிவிடுவார்கள்.ஆனால் காந்தி,நேரு,ராதாகிருஷ்ணன்,சாவர்க்கர் போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் தொட மாட்டார்கள்.

   பெரியார் குறிப்பிட்ட சாதியை மட்டும் தாக்கினார் என்று அடுத்த அவதூறை அள்ளி வீசுவார்கள். அவர் திட்டாத சாதியே கிடையாது. அன்றும் இன்றும் சாதி சங்கங்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் பெரியார்.அவர்களின் முதல் எதிரி பெரியார் தான். சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஆதரவாக என்றும் இருப்பவர்கள் தான் உண்மையான பெரியாரியவாதிகள்.

  பெரியாரின் இயக்கத்தினால் குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே முன்னேறின என்று இன்னொரு குற்றசாட்டை அள்ளி வீசுவார்கள்.இது உண்மையா என்பதை ஆராயலாம்.1950 இல் இருந்த கல்வி,அரசு பணிகளில் சாதி குழுக்களின் சதவீதம் நிலை,பெண்  கல்வி ,அரசியல்,நீதி துறை,ஊடகங்கள் போன்றவற்றில் பல்வேறு சாதிகளின் பங்கு.1950 இல் மற்ற மாநிலங்களில் மேற்கூறியவற்றில் பெண்கள்,சாதி குழுக்களின் நிலை போன்றவற்றை ஒப்பிட்டால் இவர்களின் குற்றசாட்டு அடிப்படை அற்ற குற்றசாட்டு என்பதை மிக தெளிவாக அறியலாம்.

  எடுத்துக்காட்டாக நீதித்துறையை எடுத்து கொள்ளலாம்.உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 12 இல் 10 பேர் உயர்சாதியினர்.இட ஒதுக்கீடு பெறாத சாதியினர்.இன்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் சென்னை நீதிமன்றத்தில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள்.60 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்.20 சதவீதம் இட ஒதுக்கீடு இல்லாத சாதிக்குழுவை சார்ந்தவர்கள்.மற்ற மாநிலங்கள் இவற்றில் கால்பங்கு நிலையை கூட அடையவில்லை.

பெண் கல்வியில் முன்னேற்றம் கடந்த 50 ஆண்டுகளில் மிக அதிகம். இன்று தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம். மொத்தம் உள்ள 12 1/2 லட்சம் மாணவமாணவிகளில் பெண்கள் ஆண்களை விட அதிகம்.அணைத்து சாதி குழுக்களை சேர்ந்த பெண்களும் தான் பெருமளவில் கல்லூரிகளில் படிக்கின்றனர்.தங்கள் இட ஒதுக்கீட்டு சதவீத அளவுக்கு பிற்படுத்தப்பட்ட,பட்டியல் இனத்தின் கீழ் வரும் சாதிகள் இடங்களை பிடிக்கும் இடம் மற்றும் பொது இடங்களிலும் இடங்களை பிடிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதில் மாற்று கருத்து இருக்கிறதா

பெரியார் ஹிந்து மதத்தை மட்டுமே தாக்கினார் என்றொரு குற்றசாட்டு-பெரியாரின் எழுத்துக்களை,பேச்சுக்களை சிறிது படித்தாலும் இது சிறிதும் உண்மையல்ல என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.ஆனால் அவதூறுகளை அள்ளி வீசுபவர்களுக்கு சான்றுகளா முக்கியம்.1930 முதல் அவர் இறக்கும் வரை கடவுளை சாடி வந்தார்.கடவுள் நம்புபவன்,பரப்புகிறவன்  காட்டுமிராண்டி,முட்டாள்  என்றால் அது ஒரு மத கடவுளையோ குறிக்கிறது.ஹிந்துமதத்தை விட கிருத்துவத்தை அதிகமாக தாக்கியவர் அவர். கிருத்துவத்தை விட ஹிந்து மதமே மேல் என்று சொன்னவரை கிருத்துவ கைக்கூலி என்று சொல்பவர்களின் உள்நோக்கம்,வெறுப்பு ஏன்

  வன்முறையை என்றும் ஆயுதமாக பயன்படுத்தாதவர் பெரியார். 75 ஆண்டு பொதுவாழ்வில்அவர், 75 வயதை தாண்டிய பிறகு பேசிய சில பேச்சுக்களில் கோவத்தில் சில வார்த்தைகள் வந்து விழுந்திருப்பதை தவிர்த்து வன்முறையை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் அவர்.2006 செயின்ட் தாமஸ் மலை சர்ச்சில் நடந்த ஒரு நிகழ்வை பார்க்கலாம். தீவிர ஹிந்துத்வர் ஒருவர் மலையின் மேல் உள்ள சர்ச்சுக்கு சென்று நாங்கள் தீபம் ஏற்ற வேண்டும் ,மலையை காலி செய்து விடுங்கள் என்று சத்தம் போடுகிறார்.நன்கு படித்து உயர்பதவிகளில் இருந்தவர்.இந்து மதத்தின் பெருமைகளை பற்றி ப்லோக் நடத்துபவர்.பாதிரியாரை பாருங்கள் என்று சொன்ன சர்ச் மேலாளரை தான் கொண்டு வந்த கத்தியை வைத்து நூற்றுக்கணக்கானவர் முன்னிலையில் வெட்டி கொள்கிறார். அவர் ரத்தத்தை எடுத்து தன் மேல் பூசி கொள்கிறார். நூற்றாண்டுகளாக மத நம்பிக்கைகள் சாதித்தது இதை தான்.நாடு முழுவதும் பசுவின் பெயரால் நடக்கும் கொலைகளுக்கு இன்றும் குறைவு கிடையாது.கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக மாற,பல லட்சம் மக்கள் பிரிவினையின் போது கொல்லப்பட காரணமாக இருந்தது மத நம்பிக்கை தான்.மேல் சொன்னது போல தனி நபர் குற்றங்களோ,கூட்டாக வன்முறை நடத்திய குற்றசாட்டுகளையோ பெரியார் மீதோ ,பெரியார் இயக்கத்தின் மீதோ வைக்க முடியுமா .உணர்ச்சி பிழம்பாக மாறி கொலை புரியும் மனநிலையை அவர் எழுத்துக்கள்,பேச்சு செய்ததா அல்லது வன்முறையை அவர் பேச்சுக்கள் விரட்டியதா என்பதை அவர் வாழ்க்கையை,தமிழ்நாட்டின் நிலையை அறிந்த எல்லாரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.பெரியாரை திட்டுவதை,அவதூறுகளை அள்ளி விசுவதை வாழ்நாள் கடமையாக கருதும் அருமை நண்பர் அனந்தகிருஷ்ணன் பதிவில் பெரியாரின் மறைவின் போது நடந்த நிகழ்வு ஒன்றே பெரியார் இயக்கத்தவரை பற்றி அறிந்து கொள்ள போதுமே

https://m.facebook.com/story.php?story_fbid=1268189416526182&id=100000054060235

https://m.facebook.com/story.php?story_fbid=596250143848651&id=100003910111750

http://sugunadiwakar.blogspot.in/2007/10/blog-post_09.html

https://m.facebook.com/story.php?story_fbid=10207450714839533&id=1037767751

No comments:

Post a Comment