Wednesday, September 6, 2017

எந்த எஸ்சி, 35 மார்க் எடுத்து மருத்துவம் படிக்கிறான்?

வாசுகி பாஸ்கர்
Via Facebook
2017-09-06

வரலாற்று அறிவோ, பொது அறிவோ உள்ளவர்களை தான் விவாதத்துக்கு அழைப்போம் என்றால் பெரும்பாலான பார்ப்பனர்களை, இனி எந்த தொலைக்காட்சி ஊடகமும் அழைக்க கூடாது.

பெரும்பாலான பார்ப்பனர்கள் எந்த வித தரவும் இல்லாமல் பேசுபவர்கள் தான், பொது இடத்தில நா கூசாமல் தெரியாத விவகாரத்தை தெரிந்தது போல பேசுவதில் அவர்களை போல வெக்கம் கெட்ட ஜென்மங்களை நீங்கள் பார்க்கவே முடியாது.

ஆனாலும் அறிவாளி தோற்றத்திலேயே சுற்றித்திரியும் அந்த பிரிவிலேஜை கொடுப்பது அடிமை கூட்டமான பார்ப்பனர் அல்லாத நம் கூட்டம் தான்.

சமூகநீதி பேசினாலும், பார்ப்பனியத்தை எதிர்த்தாலும், உண்மையில் பார்ப்பன மாணவர்கள் திறமையானவர்கள், நிறைய மார்க் எடுக்க கூடியவர்கள் என்கிற பொதுப்புத்தி உறைந்து, படிந்து இருக்கிறது.

உண்மையில் அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. ஏனைய சமூகத்துக்கு கல்வி மறுக்கபட்டு, திட்டமிட்டு கல்வி கிடைக்காமல் ஒடுக்கி வைத்திருந்த காலத்தில் மட்டும் தான் பார்ப்பனர்கள் பாடிப்பாடி தனக்கு சொந்தமாக்கி வைத்திருந்தார்கள்.

அந்த காலத்திலும் கூட, எல்லோருமே top score என்றும் சொல்லிவிட முடியாது.
போட்டியே அதிகமில்லாத காலத்தில் மக்கு பார்ப்பனர்கள் பலர் இடங்களை நிரப்பி கொண்டார்களே ஒழிய, பார்ப்பனர்கள் என்றால் அறிவாலிகள் என்பது இந்தியாவின் ஆகச்சிறந்த பொதுப்புத்தி.

ஆங்கிலேயே மாணவர்களுடன் போட்டி போட முடியாமல், pass mark 35 ல் இருந்து, 20 ஆக குறைக்க வேண்டுமென்று கெஞ்சி, கோரிக்கை எல்லாம் வைத்து, 1920 களில் சென்னை பல்கலை கழகத்தில் இந்திய மாணவர்கள் அந்த சலுகையையும் பெற்று இருக்கிறார்கள்.
அதில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள் என்பது குறிப்பிட தக்கது.

ஆனால், எல்லா சமூகமும் படிக்க வழிவகை செய்யப்பட்டு, அரசியலமைப்பு சட்டம் இயற்றி சில தலைமுறைகள் கல்வி கற்ற இன்றைய நிலை என்ன? இன்றைய கட் ஆப் என்ன?
"35 மார்க் எடுத்தால் ஒரு எஸ்சி க்கு சீட் கிடைக்குது, அதிக மார்க் எடுக்கும் பார்ப்பன பிள்ளைகளுக்கு சீட் கிடைப்பதில்லைன்னு" அனிதாவின் மரணத்தின் போது எத்தனை பார்ப்பனர்கள் முக்கால் மூளை தனமாக உளறினார்கள் என்பதை, தங்கள் முட்டாள் தனமான வாதத்தை ஏதோ பயங்கரமான data எல்லாம் வைத்து வாதிடுவதை போல வாதாடினார்கள் என்பது நீங்களே அறிந்தது.

2016 ஆம் ஆண்டு மருத்துவ கட் ஆப் மார்க்கை இணைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நீங்கள் காணலாம். எந்த எஸ்சி, 35 மார்க் எடுத்து மருத்துவம் படிக்கிறான்?

அல்லது, ஒரு வாதத்திற்கு சொன்னோம் என்று இவர்கள் பல்டி அடித்தாலும், பார்ப்பனர்கள் என்ன நூறாண்டு காலமாகவே 98 or 97 சதவிகிதத்திலேயே எடுத்தா எல்லா அரசு பதவியும் வகித்து வருகிறீர்கள்?

படிக்க ஆளில்லாத காலத்தில மக்கு பார்ப்பனர்கள் எல்லாரும் வேலையில இருந்திங்க, இன்னைக்கி எல்லாவனும் படிக்க ஆரம்பிச்சுட்டான், கட் ஆப் 98 தாண்டி புள்ளியில் போய்ட்டு இருக்கு.
படிப்பதும், தேர்வுகளை எதிர்கொள்வதும், மதிப்பெண்கள் வாங்குவதும் ஒரு யுக்தி, அது பழக்கப்பட பழக்கப்பட, கைக்குள் வசமாகும், அவ்ளோதான்.

சமூகநீதியை பெற்று அந்த சூழலை அமைத்துக்கொடுக்க போய் தான், தன் விந்து மட்டும் அறிவாளி விந்துன்னு அதையே ஜாலியா பார்த்துட்டு இருந்த பயலுகளுக்கும் ஊர்ல இருக்கிற புள்ள பூரா மார்க் எடுக்கிறது அவ்ளோ கசப்பா இருக்கு, அதை சகிச்சிக்க முடியாமத்தான், bc கட் ஆப் 199 ல போயும் கூட, இவனுங்க வெள்ளைக்காரன் கால்ல விழுந்து 20 மார்க் எடுத்து வேலை வாங்குன மாதிரியே எல்லாரும் வாங்குறானுங்கன்னு நினைச்சிட்டு இருக்கானுவ.

அட மர மண்டைகளா!!!

No comments:

Post a Comment