Wednesday, September 6, 2017

NEET vs CMC

PChochalingam Murugaiyan
Via Facebook
2017-09-06

நாம முதலில் வாட்ஸ் அப் செய்திகளை தவிர்த்து வெளியே உள்ள செய்திகளை படிக்கனும்

சிஎம்சி கிருத்துவ மைனாரிட்டிகளுக்காக நடத்தப்படும் அரசு உதவி பெறாத கல்லூரி . இதே போல் பல கல்லூரிகள் உள்ளன. அமிரிஸ்டாரில் குரு ராம் தாஸ் கல்லூரி சீக்கிய மைனாரிட்டிகளுக்கான கல்லூரி

சிஎம்சியில் 100 சீட்டில் 85 சீட்டு மைனாரிட்டிகளுக்கான ஒதுக்கீடு.இதில் பல கிருத்தவ அறநிலைய நிலையங்கள் பிள்ளைகளை ஸ்பான்சர் செய்யும். மிச்ச 15 பொதுவான மாணவர்களுக்கு.

இந்த கல்லூரியின் முக்கிய விதி இங்கு படிக்கும் மாணவர்கள் மருத்துவர் ஆன பின்பு பின்தங்கிய கிராமங்களிலும் ஏழ்மை நிறைந்த பகுதிகளிலும் பணி செய்ய வேண்டும்  என்பதே.

நீட் வந்தாலும் அவர்களின் 100 ல் 85 சீட்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது சிறுபான்மை மக்களுக்கே போகும்

நீட் மாணவர்களின் சமயோசிக திறனை சோதிக்கும் ஆனால் அவர்களின் எண்ண ஓட்டங்களை அல்ல. தேர்தெடுக்கப்படும் மாணவர்கள் மருத்துவர் ஆன பின்பு கிராமங்களிலும் பின் தங்கிய பகுதிகளும் சேவை செய்வார்களா என்பதை நீட்டை வைத்து சோதிக்க இயலாது.ஆகவே நீட் கட்டாயம் என்றாலும் அதனை தாண்டி அவர்களின் சேவை மனப்பான்மை, எண்ண ஓட்டத்தை அறியும்படியான தனியான தேர்வு நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்தார்கள். அதை மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு எதிர்க்க அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அது முடியும் வரை தற்காலிகமாக சேர்க்கையை நிறுத்தியுள்ளது அக்கல்லூரி.

மிக குறைந்த கட்டணமே வசூலிக்கும் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ கல்லூரியான சிஎம்சி, எனக்கு தகுதி தேர்வு மட்டும் சார்ந்த மாணவர்கள் தேவையில்லை , சேவை மனப்பான்மை உள்ள மாணவர்கள் தேவை என்று சொல்வதில் என்ன தவறு ?

குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு படித்து தனியார் மருத்துவமனையிலோ, நகரங்களிலோ லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்போர் தான் அதனை எதிர்ப்பார்கள்.

ஒரு விடயம் தெரியுமா இந்தியாவிலேயே மருத்துவ கல்லூரி சேர்ப்பில் பாரிய ஊழல் செய்து இன்றளவும் திடுக்கிடும் பல கொலைகள் / தற்கொலைகள் நடக்கும் வழக்கு வியாபம் மருத்துவ ஊழல் வழக்கு. அது பாசக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஊழல். ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட, சாட்சியாக இருந்த எத்தனை பேர் எப்படி இறந்தார்கள் என்பதை ஒரு முறை கூகுல் செய்து பாருங்கள். சாத்தான் வேதம் ஓதுவது என்பது ஒருதலைப்பட்சமான, சாதி இன வெறிக்கொண்ட ஊழல் செய்யும் பாசக மருத்துவத்தில் சமூக நீதிப்பற்றி பேசுவது.

-------

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2016 - 2017 நிதியாண்டு விவரம்:

2016 -2017க்கான செலவினங்கள்: 1062.02 கோடி
கட்டமைப்பு வளர்ச்சிக்கான செலவு: 61.45 கோடி

மருத்துவ சேவைக்காக செலவிட்ட மானியத் தொகை: 171.22 கோடி,
கல்விக்காக செலவிட்ட மானியத் தொகை: 83.20 கோடி.

வருவாயின் ஆதாரம்:

நோயாளிகளிடமிருந்து பெற்ற கட்டணம்: 98.71%
மாணவர்களிடமிருந்து பெற்ற கட்டணம்: 1.03%
ஆதரவளிக்கும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி: 0.26%

மருத்துவம் படிப்பதற்கு ஒரு மாணவருக்கான ஒரு வருடக் கல்விக் கட்டணம்: 3000 ரூபாய்

நூறு வருடங்களைக் கடந்து மருத்துவமும் மருத்துவக் கல்வியும் பணம் சேர்ப்பதற்கான தொழிலாகக் கருதாமல் வரும் பணத்தை மீண்டும் மக்களுக்காகவே செலுத்தும் சேவையாகச் செயல்படுவதனால் மட்டுமே தனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என இந்திய அரசையே எதிர்த்து நிற்கும் துணிச்சல் வருகிறது.

Joshua Isaac Azad

No comments:

Post a Comment