Sunday, April 29, 2018

Rights-based governance' மற்றும் 'Duty-based governance'

Sridhar Subramaniam
2018-04-30

சோறும் சுத்தமும் 
===================
.
அரசு நிர்வாகத்தில் 'Rights-based governance' மற்றும் 'Duty-based governance' என்று இரண்டு வகை இருக்கிறது. குடிமகன்களுக்கு இருக்கும் உரிமைகளை அரசு உணர்ந்து கொண்டு, அவற்றைப் பேணி, உரிமைகளை அதிகரித்து பரிபாலனம் செய்வது. இன்னொன்று குடிமகன்களுக்கு இருக்கும் கடமைகளை அதிகரித்து, அவற்றை தொடர்ந்து குறிப்பிட்டு, அரசு சேவைகளுக்கு எல்லாம் அவற்றை நிபந்தனையாக வைப்பது.

உலகெங்கிலும் வலதுசாரி அரசுகள் கடமையை வலியுறுத்தும், எதிர்பார்க்கும் அரசுகளாகவே இயங்கி வந்திருக்கின்றன. நம் மத்திய அரசும் வந்த நாள் முதல் குடிமகன்கள் தேசத்துக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாடம் எடுத்து அதற்கேற்ப திட்டங்கள் தீட்டுவதிலேயே கவனமாக இருந்து வந்திருக்கிறது.

- அரசு திட்டங்களுக்கு குடிமகன்கள் தங்கள் நிலங்களை கொடுக்க வேண்டும்,
- நாட்டில் கள்ளப்பணம் நீங்க வேண்டுமானால் மணிக்கணக்கில் கியூவில் நிற்க வேண்டும்,
- வரித்திட்டம் புனரமைப்பு செய்யும் போது உங்கள் தொழில் பாதிக்கப்பட்டால் அதற்கு தேவைப்படும் தியாகங்கள் செய்ய வேண்டும்,
- பிரைவசி என்பது தனிமனிதனுக்குக் கிடையாது, தேச முன்னேற்றத்துக்காக நீங்கள் உங்கள் தகவல்களை அரசுக்கு கொடுக்க வேண்டும்,

இத்யாதி இத்யாதி.

இதன் தொடர்ச்சிதான் 'சோறு வேண்டுமா, ஊரை சுத்தம் செய்!' என்பது.

குடிமகன்களுக்கு இருக்கும் உரிமைகள் இவர்களுக்கு பொருட்டாகவே இருக்காது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதே புரிந்து கொள்வது இவர்களுக்கு கடினம். அதனால்தான் சத்துணவு, ரேஷன் போன்ற திட்டங்களை அமுல்படுத்துவதில் பாஜக மாநிலங்கள் சுணக்கம் கொள்கின்றன. தமிழகம் அளவுக்கு உணவு விநியோகம் பாஜக ஆளும் மாநிலங்களில் இல்லை.

முந்தைய அரசு உரிமை சார்ந்த நிறைய சட்டங்கள் திட்டங்கள் கொண்டு வந்தது. ஊரக வேலை வாய்ப்பு திட்டம், ஆதாரக் கல்வி உரிமை, ஆதார உணவு உரிமை, தகவல் அறியும் உரிமை போன்றவை.  Rural Employment Act, Right to Education, Right to Food, Right to Information Act. இவை யாவுமே உரிமைகள் சார்ந்தவை. இவை யாவுமே இன்றைய அரசால் கிடப்பில் போடப்பட்டோ அல்லது சரிவர அமுல்படுத்தாமலோ பிரச்சனைகளை சந்தித்து வருவதற்கும் இதே சிந்தனைதான் காரணம்.

இங்கே குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் என்று பெரிதாகக் கிடையாது. ஆற்ற வேண்டிய கடமைகள் லிஸ்ட் மட்டும் நீளமாக இருக்கிறது.

புரிய வேண்டிய தியாகங்களின் லிஸ்டும் கூடத்தான்...

#Sridhar Subramaniam#

திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தார்?

தமிழ்க்கவி கருவூர்
2018-04-30

#திராவிடர்என்றசொல்லை #பெரியார் #நுழைத்தாரா??

தமிழர் என்ற சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.

இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா?
ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம்.

1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, இம்மண்ணுக்கு உரிமையான மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர். பின்பு 1912இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேசன் அவர்கள், திராவிடர் சங்கம் தொடங்குகிறார். 1916இல் பிட்டி தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் பின்னாளில்,  திராவிடர் என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறார்.

1892இல் ஜான்ரெத்தினம் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன், கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்... திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.

1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags)  என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

எனவே, திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு; மோசடி!
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை, தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்.

குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்  (tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).

கியர்சன்  (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson)   என்பவர்தான் திராவிடன் (Dravidan)  என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

உண்மை வரலாறு இப்படியிருக்க பெரியார்தான் திராவிடர் என்ற சொல்லை வலிய, உள்நோக்கத்தோடு நுழைத்தார் என்பது பித்தலாட்ட பிரச்சாரமாகும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர்-திராவிடர் பேராட்டமே ஒழிய, வடமொழி தென்மொழிப் போராட்டமல்லவே! இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே!

தமிழ் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழனென்று கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான்...

... தமிழர் என்று பொதுவாக அழைக்கும்போது, இவ்வளவு நிபந்தனை (தடை) உண்டா? ஆகவேதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்?

தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த _ நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லோரும் ஒன்றாவோம்!
.... சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.

நீங்கள் கொடுக்கும் பெயரில் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனில்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டாமா? என்றார் பெரியார். (மொழியாராய்ச்சி எனும் நூலில் பெரியார் எழுதியதிலிருந்து.)

ஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்ற சொல்லால் தங்களை அழைத்து, ஆரிய பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்ற சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது.

தமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரிய பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பை சிதைத்துவிடுகின்றனர்.

தமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரிய பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசடியும், இன கட்டின் தகர்ப்பும் வேறு என்ன இருக்க முடியும்?

ம.பொ.சி. காலத்திலிருந்து சீமான் காலம் வரை ஆரிய பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று உள்ளடக்கி, ஆரியத்திற்கு துணைநிற்கக் கூடியவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர்.

பெரியார் ஈ.வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் _ பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும் (தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில் ம.பொ.சி.)

ஆக, மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் தமிழர்களுக்கு எதிரியே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்ல என்பதே இவர்கள் கொள்கை.

திராவிடர் என்பதை விலக்கி தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்களை அறவே விலக்கித் தமிழர்களை கடமைக்கு அணியாக்கிக் காட்ட வழி சொன்னால் அய்யா பெரியார் சொல்வதுபோல அதை அட்டியின்றி ஏற்க நாம் யாராகவுள்ளோம் என்பதை ம.பொ.சி.  வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, பெரியார், தான் கன்னடர் என்பதால் தமிழர் என்ற சொல்லை நீக்கி, திராவிடர் என்ற சொல்லைப் புகுத்தினார் என்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது _ அபத்தமானது ஆகும்.

என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும், அதனை நான் தினசரி பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லா வற்றிற்கும் தமிழ்மொழியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கன்னடத்தைத் தவிர தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். (விடுதலை 21.5.1959)

என்று தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பெரியார், தமிழின், தமிழரின் மேம்பாட்டிற்கு மட்டுமே பாடுபட்டார். அவர் என்றைக்குமே கன்னடர்களுக்காகப் பாடுபட்டதில்லை.
=============================

https://m.facebook.com/story.php?story_fbid=189749155081351&id=100021388023203

இந்துக் கடவுள்களின் காமக் காலித்தனங்கள்

செ. பா. செல்வம்
2018-04-29

இந்துக் கடவுள்களின் காமக் காலித்தனங்கள்
----------------------
உங்களிடத்தில்?

மின்சாரம்

"இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகா பண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் முல்லர் 'இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையிரல் எரிந்து விடும்' என்றார்" என்று கைவல்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார் (கைவல்ய சாமியார் கட்டுரைத் தொகுதி எண் 2 - பக்கம் 21).

இது ஏதோ மேம்போக்காகச் சொன்னதல்ல. இந்துக் களின் கடவுள்கள் எந்தத் தரத்தில், காட்டுமிராண்டித்தனத்தில், ஆபாசத்தில், ஒழுக்கக் கேட்டில் உழன்று, திரண்டு உருக்குலைந்து கிடக்கின்றன என்பதற்கு இதோ ஒரு பட்டியல்.

(1). சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை வினோதங் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந் நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்துவர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரவேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

(2). நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

(3). தவ வலிமை மிக்க பஸ்மாசுரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது, மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பஸ்மாசூரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவை, உயிருக்குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?

(4). பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண்-பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவி யத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு, பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையாக்கிப் புணர்ந்து, கணபதியைப் பெற்றான்.

(5) சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1768621386493586&id=100000372247445

அறிவுக்குப் பொருந்தாத பிறப்புகளாக இல்லையா?

செ. பா. செல்வம்
2018-04-29

வால்மீகி பாம்புப் புற்றில் பிறந்தார். அஸ்வத்தாமன் குதிரை வயிற்றில் பிறந்தார். மாண்டவ்யர் தவளையிடம் பிறந்தார். சவ்னகன் நாயிடம் பிறந்தார். கவுதமர் பசுவினிடம் பிறந்தார். அகஸ்தியர் பானையில் பிறந்தார். காங்கேயன் கழுதையிடம் பிறந்தார். பிரமன் தாமரையில் பிறந்தார். இலஷ்மி கடலில் பிறந்தாள். பார்வதி மலைக்குப் பிறந்தாள். மச்சகந்தி மீனிடம் பிறந்தாள். கணபதி யானைக்குப் பிறந்தார். விரலில் கங்கை பிறந்தாள். கொட்டாவியில் சிந்தூரன் பிறந்தான். தும்மலில் குபன் பிறந்தான். கண்ணீரில் வாநரன் பிறந்தான். உரோமத்தில் உரோமாஞ்சன் பிறந்தான்.
இவை அறிவுக்குப் பொருந்தாத பிறப்புகளாக இல்லையா?

இவ்வாறாக ஆணை ஆண் புணர்வதும், மிருகப் புணர்ச்சி செய்வதும், மகளைத் தந்தை புணர்வதும், பெற்ற தாயைத் தனயன் புணர்வதும், பிறர் மனைவிகள் மீது மோகங்கொண்டு கற்பழிப்பதும், பிற புருஷர் மீது காமுற்றுக் கூடுவதும், திருட்டு, மது அருந்துதல், சூதாடுதல், கொலை செய்தல், பருவமெய்தாக் கன்னிப் பெண்களைக் கற் பழித்தல், அறிவுக்குப் பொருந்தாத விபரீதங்களைக் கூறுதல் ஆகிய திருவிளையாடல்கள் இன்றும் ஆரியர் களுடைய புராண - இதிகாச - சாஸ்திரங்களில் மலிந்து கிடப்பதைக் காணலாம்.

என்ன குருமூர்த்தி மீtநீ களே! இவை போதுமா, இன்னும் வேண்டுமா?

இவைதான் உங்கள் தெய்வங்களா? தெய்வ நூல்களா? இவற்றை இன்று வரை இம்மியளவும் பிசகாமல் தூக்கிச் சுமக்கின்றீர்களே - தெய்வாம்சம் என்று கண்ணில் ஒத்திக் கொள்கிறீர்களே - இதன் மூலம் உங்கள் தகுதி, தரம், ஒழுக்கம், பண்பாடு எந்தத் தரத்திலிருக்கிறது என்பது விளங்கவில்லையா?

இவற்றை நம்பும், மதிக்கும், தொழும், கடைபிடிக்கும் உங்களிடம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

தனி மனிதனைத் தொடர்ந்து சமூகத்தில் நல்லொழுக் கத்தை, கலாச்சாரத்தை சீரழிப்பது, வாழையடி வாழையாக வந்த குருதியில் குமிழுகின்ற மரபணுக்களில் கலந்த இந்தக் கேடு கெட்ட இந்துத்துவக் குணாம்சங்கள் தானே காரணம்? உங்களின் ஜெகத் குருக்களே மடத்துக்கு வந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்கவில்லையா?

இந்த இலட்சணத்தில் இந்த ஆபாசங்களை, அரு வருப்பை, ஒழுக்க மீறல்களை, மனிதத் தன்மைக்கு எதிரான வைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து மனமாற்றம் செய்து வருகின்ற, பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டுகின்ற ஓர் இயக்கத்தை - அதன் தோற்றுநரைத் தூற்றுவது சரியானதுதானா? அந்தத் தூற்றல்காரர்களைத் தோலுரிப்பது நல்லோரின் கடமையல்லவா?

எதையும் தலை கீழாகப் புரட்டிப் பேசுவதுதான் குரு மூர்த்திகளே உங்கள் புத்தியா? ஓடாதே நில்லும் - நாளையும் சாட்டை சுழலுகிறது

https://m.facebook.com/story.php?story_fbid=1768640393158352&id=100000372247445

Friday, April 27, 2018

திமுக ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது

Babu Vmk
2018-04-27

ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி - எனக்கூறு கூமுட்டைகள் (ஜெயக்குமார்) போன்றோர்க்கு இப்பதிவு ஆதரத்துடன் சமர்ப்பணம்.

ஆதாரங்கள் கமெண்டில்

முதல் விஷயம், 1976 ஜனவரி 31 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது கவர்னர் கொடுத்த அறிக்கையில் ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எந்த ஒரு வார்த்தைகளும் இல்லை. (ஆதாரம்- படம்)

இரண்டாவது, சில முட்டாள்களின் வாதப்படியே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டது என்றால், திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு அதனை விசாரிக்க இந்திராகாந்தியால் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட நாள் 1976 பிப்ரவரி 3ம் தேதி. திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 1976 ஜனவரி 31ம் தேதி. திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து தான் சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது.

சர்க்காரியா கமிஷனும் அமைக்கப்படவில்லை, அதன் இறுதி அறிக்கையும் வருவதற்கு முன்பே ஊழலுக்காக எப்படி திமுக ஆட்சியை கலைக்க முடியும். சர்க்காரியா கமிஷனால் திமுக மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை அது வேறு விஷயம். புகார் கொடுத்த எம்ஜிஆரை சர்க்காரியா விசாரணைக்கு அழைத்த போது எனக்கு எதுவும் தெரியாது என்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகாமல் எம்ஜிஆர் ஓடினார் என்பது அதைவிட பெரிய சோகம். ஊழல் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படுவதற்கு முன்பே ஆட்சியை கலைக்க முடியும் என்றால் இந்தியாவில் ஒரு ஆட்சி கூட நடக்காது. குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி வரை அதிமுவின் ஆட்சி ஒருநாள் கூட நடந்திருக்க முடியாது.

சரி.. எதற்கு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது..? அதற்கு பல காரணங்கள் உண்டு.

🌄1974-ல் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வேண்டும் என்று இந்திராகாந்தியிடம் வாதாடி பெற்றது. (1970 ஆகஸ்ட் 27லேயே டெல்லியில் வைத்து தமிழகத்திற்கு என தனிக் கொடியை கலைஞர் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாகத்தான் பின்னாளில் முதல்வர்களுக்கும் தேசியக் கொடி ஏற்றும் உரிமைக்கு இந்திராகாந்தி ஒத்துக் கொண்டார்.)

🌄1974 ஏப்ரல் 20ல் தமிழக சட்டமன்றத்தில் திமுக மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.

🌄1975 ஜூன் 12-ஆம் தேதி இந்திராகாந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிறது. தஞ்சையில் சுற்றுப்பயணத்தில் இருந்த கலைஞர் இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

🌄1975 ஜூன் 27ம் தேதி திமுக செயற்குழுவில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

🌄1975 ஜூலை 21 தேதி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் எமர்ஜென்சிக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர். [அப்போது பேசிய இந்திராகாந்தி தமிழகமும் (திமுக ஆட்சி) , குஜராத்தும் (ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி) தனி தீவாக செயல்படுகிறது என்று கடுமையாக எச்சரித்தார்]

🌄1975 ஆகஸ்ட் 9,10 மற்றும் டிசம்பர் 28ல் நடைபெற்ற திமுக மாநாட்டில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
[இந்த மாநாடுகளுக்கு பிறகு பம்பாயில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி, ஆர்எஸ்எஸ், ஆனந்த்மார்க், நக்சலைட்டு இயக்கங்கள் போல திமுக தடையை செய்யப்பட வேண்டும் என்றார்.]

🌄இந்திராகாந்திக்கு எதிராக இப்படியெல்லாம் கலைஞர் செயல்பட்ட காரணத்திற்காகத்தான் 1976 ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. [15 நாட்களுக்கு பிறகு 1976 பிப்ரவரி 15ம் நாள் சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி தான் காரணமாக இருக்கிறார் என்றார். திமுக ஆட்சி கலைக்கப்பட அதுதான் காரணம் என்றால், அதைவிட பெருமையான விஷயம் திமுகவிற்கு இருக்க முடியாது என்று கலைஞர் பதிலளித்தார்.]

மேலும் சில ஆதாரங்கள் கமெண்ட்ஸ் பகுதியில்...

பி.கு :-
இந்தியாவிலேயே ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால்  இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்து, கடைசியில் 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி ஜெயலலிதாவை தலைவியாக வைத்துக் கொண்டு ஊழல் பற்றியெல்லாம் அதிமுக பேசலாமா...? ஊழல் பற்றி பேச கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை வேண்டாம்...

பதிவு: Babu Vmk

https://m.facebook.com/story.php?story_fbid=882496378617802&id=100005723441988

HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி

Sengovi guru
2018-04-27

HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி

நல்ல படங்களுக்கும் மோசமான படங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், படம் பார்த்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நம்மை தொந்திரவு செய்துகொண்டே இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஹீட்டை பார்த்தேன். மூன்று நாட்கள் கடந்தும் இன்னும் சூடு குறையவில்லை.

அல் பசினோ, ராபர்ட் டி நீரோ எனும் இரண்டு சிங்கங்கள் இணைந்து மிரட்டிய படம். இயக்குநர் மைக்கேல் மேன்னின் பெஸ்ட் மூவியாக இன்றும் முதலிடத்தில் இருக்கும் படம்.

இயக்குநர் மைக்கேல் மேனின் நண்பர், முன்னாள் போலீஸ்கார், இயக்குநரின் கதை ஆலோசகர் ஆடம்சன். அவர் சந்தித்த நீல் எனும் ஒரு தொடர் கொள்ளையனைப் பற்றியும், நீலின் பெர்ஃபெக்சனிசம் பற்றியும் மைக்கேல் மேன் அறிந்தபோது, தொடங்கியது இந்த கிளாசிக்கல் மூவிக்கான விதை.

ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்ட திரைக்கதை. இடையில் l.a. takedown (1989) எனும் டிவி பைலட் மூவியாகவும் இந்தக் கதையை மைக்கேல் மேன் எடுத்தார். (ஆரம்பத்தில் இதை டிவி சீரீஸாக செய்வதாக ஐடியா).

கதையின் கிளைமாக்ஸ் சிக்கியபின், இதை அல் பசினோவும் ராபர்ட் டி நீரோவும் இணைந்து நடித்தால், மறக்க முடியாத சினிமாவாக வரும் என்பதை இயக்குநர் உணர்ந்தார். ஹீட் ஆரம்பம் ஆனது.

தனக்கென்று பெர்ஃபெக்ட்டான சிறு குழுவை வைத்துக்கொண்டு, பெரிய அளவிலான கொள்ளைகளை நட த்தி வருபவன் நீல் மெக்காலே (ராபர்ட் டி நீரோ). இதைத் தவிர வாழ்க்கையில் அவனுக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது. தொழில் பக்தாஸ்!

தனது குழுவுடன் நகரின் நடக்கும் குற்றங்களை தடுக்கும், குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் போலீஸ் அதிகாரி வின்சன்ட் ஹன்னா (அல் பசினோ). இரண்டு டைவர்ஸ்களைக் கடந்து, மூன்றாவது டைவர்ஸை நோக்கி போய்க்கொண்டிருக்கும் சின்சியர் ஆபீசர். வேலையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் கிடையாது.

ஏறக்குறைய சம திறமையுள்ள, தொழில்பக்தி மிக்க ஆனால் எதிரெதிர் துருவங்கள். பட த்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொள்ளை நடுரோட்டில் நடக்கிறது. டி நீரோவின் குழுவில் புதிதாகச் சேர்ந்த வேய்ங்க்ரோவின் அதிகப்பிரசிங்கித்தனத்தால், முதல் கொள்ளை மூன்று கொலைகளுடன் முடிகிறது. அதை விசாரிக்க அல் பசினோ வந்து சேர்கிறார்.

வேய்ங்ரோவை டி நீரோ கொல்ல முயல, அவன் தப்பிச்செல்கிறான். அந்த ஆபத்து டி நீரோவை நோக்கி எப்போதும் திரும்பி வரும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், அல் பசினோ விரிக்கும் வலை.

‘ஆபத்து உன்னை நெருங்கும்போது, 30 செகண்டிற்குள் விட்டு விலக முடியாத எதனுடனும் உன்னை பிணைத்துக்கொள்ளாதே’ என்பது டி நீரோவின் தொழில் தர்மம். மனைவி மேல் அட்டாச்மெண்டாக இருக்கும் தம்பிக்கே, டி நீரோ கொடுக்கும் அட்வைஸ் அது தான்.

அல் பசினோ ஸ்கெட்ச் போட்டு, டி நீரோவை நெருங்கும்வேளையில், டி நீரோவுக்கும் ஒரு காதல் வருகிறது.

அல் பசினோ இந்த கொள்ளைக்கூட்ட த்தைப் பிடித்தாரா?

டி நீரோ தன் தொழிலை அல் பசினோவை மீறி செய்ய முடிந்ததா?

இரு ஹீரோக்களாலுமே தன்னையும், தன் கூட்ட த்தையும் மற்ற ஹீரோவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா?

இரண்டு ஹீரோக்களின் பெர்சனல் வாழ்க்கை என்ன ஆகிறது?

- என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த க்ளாசிக்கல் மூவி.

ஹீட் -ஐ க்ரைம் மூவி என்று சொல்வதைவிட, எமோசனல் டிராமா என்று சொல்லிவிடலாம். திருடன் – போலீஸ் விளையாட்டு என்பது ப்லாட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கிய கேரக்டரின் பெர்சனல் வாழ்க்கை பற்றியும், ஃபீலிங்ஸ் பற்றியுமே படம் அதிகம் பேசுகிறது.

படத்தை மறக்க முடியாத அனுபவமாக ஆக்குபவை நான்கு சீன்கள் :

1. அல் பசினோவும் டி நீரோவும் சந்திக்கும் ரெஸ்டாரண்ட் காட்சி. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படும் காட்சி அது. இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடம் அது. அதே நேரத்தில் இன்னும் உக்கிரமாக மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பதையும் நமக்கு உணர்த்திவிடும் காட்சி. இரண்டு பேரின் உடல்மொழிக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காட்சி.

2. பேங்க் கொள்ளை. ஒரு அதகள ஆக்சன் பட த்தின் கிளைமாக்ஸ் காட்சி போல், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நிகழும் காட்சி. இருதரப்புமே தன்னை மறந்து களத்தில் குதிக்கும் அழகை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த சீனைப் பற்றி படிப்பதைவிட, பட த்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

3. ‘Sun rises with her & sets with her’ என்று சொல்லும் தம்பி வால் கில்மர்க்கும் அவரது சீட்டிங் மனைவிக்கும் இடையிலான கடைசி ஷாட், அந்த கை அசைப்பு.

4. மைக்கேல் மேன் கேரக்டர்களை வடிவமைத்த விதத்தினால், இரு ஹீரோக்களுமே ஜெயிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். திருடன் என்பதால் டி நீரோ தோற்றுப்போக வாய்ப்பு இருப்பதையும் நாம் உணர்கிறோம். இங்கே எதுவும் நடக்கலாம் என்பதால், ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். இந்த அளவிற்கு டச்சிங்கான கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு க்ரைம் மூவியில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. டி நீரோவின் காதலி திகைத்து நிற்கும் ஷாட், இறுதில் இரு ஹீரோக்களும் கை பிடித்து நிற்கும் அந்த ஷாட், கூடவே அந்த முடிவு….அசந்து போய் உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு கேரக்டர்களும் எடுக்கும் கடைசி முடிவுகளும், அதன் விளைவுகளும் தான் நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகின்றன. திருந்தி வாழும் ஒருவன் மீண்டும் ட்ரைவராக திருடக் கிளம்புவது, அல் பசினோவை எப்போதும் தடுக்கும் அவன் மனைவி கிளைமாக்ஸில் தடுக்காமல் விடுவது, தம்பி மனைவியின் கடைசி முடிவு, டி நீரோ காதலி பற்றி எடுக்கும் கடைசி முடிவு, வேய்ங்ரோ பற்றி எடுக்கும் முடிவு – என்று எல்லாமே, யோசித்துப்பார்த்தால், இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று நம்மை ஃபீலிங்கில் ஆழ்த்துவது தான் இந்த திரைக்கதையின் பெரும் பலம்.

இது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், முடிந்தவரை ஸ்பாய்லர்களை தவிர்த்து எழுதியிருக்கிறேன். நல்ல சினிமா விரும்பிகள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

https://m.facebook.com/story.php?story_fbid=1988522494554904&id=100001915192635