Wednesday, April 25, 2018

ஜாதிக்கொரு நீதி

Chidambaram Periyasami
Via Facebook
2018-04-25

இந்து மதம்

திருவிளையாடல் புராணத்தில் ஒரு காட்சி வரும் அதில் ஒரு பார்ப்பணர் தன் தாயுடன் உடலுறவு வைத்துக் கொண்டு தன் தந்தையையும் கொலை செய்து விடுவார்

இந்தப் பார்ப்பணர் முன் தோன்றிய சிவன் மற்றும் பார்வதி இருவரும் இவருக்கு கொடுக்கும் தண்டனை சில நாட்கள் பிச்சை எடுத்து தன் பாவத்தைக் கழுவுவது

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் தண்டனை கொடுத்தது எதற்காக என்றால் தன் தந்தையாகிய பார்ப்பனரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் கழிய

தாயுடன் உடலுறவு வைத்ததற்கு தண்டனை இல்லை காரணம் மனு பெண்களை நடத்தை கெட்டவர்கள் என்று தான் சொல்கிறது இதில் தாய் என்ன தாரம் என்ன

---

ஸ்ரீமத் பாகவதத்தில் மகாபாரதத்தில் அசுவத்தாமன் பாண்டவர்களின் குழந்தைகளை கொன்றதற்கான தண்டனை பற்றி ஒரு விளக்கம் வரும்

அதில் உயிருக்கு உயிர் எடுக்க வேண்டும் என்று பாஞ்சாலி பீமன் எல்லாம் பேசிக் கொண்டிருக்க கிருஷ்ணன் தலையிட்டு தர்மப்படி தண்டனை வழங்க வேண்டும் என்பார்

அந்த தர்மப்படி அசுவத்தாமனுக்கு உயிருக்கு பதில் அவன் தலைமுடி மட்டும் வெட்டப்படும் அதாவது மரண தண்டனை என்பது மற்றவருக்கு உயிரை எடுத்தலும் பார்ப்பனருக்கு மயிரை எடுத்தலும் என்று மனு சொல்கிறது

---

ராமாயணத்தில் ஒரு காட்சி வரும் ஒரு பார்ப்பணர் தன் குழந்தை இறந்து விட்டது என்றும் இது ஒரு கெட்ட சகுணம் என்றும் சொல்வார்

அப்படி என்ன கெட்ட சகுணம் என்று ராமர் ஆராய்ந்து பார்த்ததில் முதுகுநூல் போடாத பிரிவை சேர்ந்த சம்பூகன் என்கிற ஒருவர் கடவுளை நினைத்து கோவிலுக்குள் தவம் இருப்பதாக கண்டுபிடிப்பார்

உடனே அந்த சம்பூகன் கழுத்தை வெட்டி விடுவார்

சூத்திரன் வேதம் கற்கவோ யாகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யவோ தடை விதிக்கிறது மனு

---

தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற பார்ப்பனருக்கு தண்டனை சில நாட்கள் பிச்சை எடுப்பது பச்சிளங்குழந்தைகளைக் கொன்ற பார்ப்பனருக்கு தண்டனை மயிரை வெட்டுவது

ஆனால் கடவுளை உரிமையோடு வழிபட்ட பார்ப்பனரல்லாத ஒருவருக்கு தண்டனை தலையை வெட்டுவது

இந்து மதத்தில் தண்டனை என்பது செய்த தவறைப் பொருத்தல்ல அதை யார் செய்கிறார்கள் என்பதை பொருத்து தான்

சுருக்கமாகச் சொன்னால் ஜாதிக்கொரு நீதி

சும்மா ஒரு தகவல் தான்

-----
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந் தவனுக்கே மோட்சம் அளித்தது

அன்னையைப் புணர்ந்து தாதை
குரவனாம் அந்தணாளன்
தன்னையும் கொன்ற பாவம்
தணிந்து வீடளித்த தென்றால்
பின்னை நீவிழி நோய் குட்டம்
பெரு வலி றீளை வெப்பென்று
இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம்
என்பதோ இதற்கு மேன்மை.

(மாபாதகம் தீர்த்த படலம், திருவிளை யாடல் புராணம், பரஞ்சோதி முனிவர்).

திருவிளையாடல் புராணம் மபாத தீர்த்தபடலம் செய்யுள் எண் 1573& 1574

https://m.facebook.com/story.php?story_fbid=2017617238527062&id=100008364167833

No comments:

Post a Comment