Friday, April 20, 2018

குஜராத் கலவரம்! - நன்கு திட்டமிடப்பட்டது

மு. செ. பாதுஷா
2014-04-21
Via Facebook

*குஜராத் கலவரம்!*

இந்தியாவின் மதச்சார்பின்மை முகமுடி சர்வதேச அரங்கில் கிழிக்கப்பட்டு இந்தியாவின் சாயம் வெளுத்திய மாபெரும் தலைகுனிவு! மூன்று முறை தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS-ன் தேசதுரோக சங்பரிவார்கள் இதை ஆத்திரத்தின் வெளிப்பாடு என்றும், முஸ்லிம்களுக்கு தகுந்த பாடம் என்றும் கூறுகிறார்கள்! சில மதச்சார்பற்ற அரசியல்கட்சிகள் இந்தியாவின் கரும்புள்ளி என்றும், மோசமான ஆட்சியின் கையாலாகாத்தனம் என்று கூற, சிலர் மட்டும் மவுனமாகவே உள்ளனர்!

ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் இதை திட்டமிட்ட சதி என்கிறார்கள்! அருந்ததிராய் போன்றோர்களோ "குஜராத் கலவரம் ராமராஜ்ஜியத்தை அமைப்பதற்க்கான வெள்ளோட்டம்" என்று கூறுகிறார்கள்! முகநூல் போன்ற பொது தளங்களில் இஸ்லாமியர்களோடு மல்லுகட்டும் காவிகள் கருத்தியல்ரீதியாக தோற்க்கும் தருவாயில் "என்னடா துலுக்க பசங்களா, இன்னொரு குஜராத் பாக்க ஆசையா இருக்கா" என மிரட்டல் விடுக்கும்போதுதான் இதன் தீவிரத்தை உணர முடிகிறது! என்னதான் இருந்தாலும் ஆதாரப்பூர்வமாக சில உண்மைகள் வெளிவரும்போது தானே அதன்மீது நம்பிக்கையும் வரும்?

1) கலவரத்திற்க்கு 7 மாதங்கள் இருக்கையில் இந்தூரில் நடைபெற்ற பஜ்ரங்தள் பயிற்ச்சி முகாமில் ம.பி உ.பி ராஜஸ்தான் குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து 1800 தொண்டர்கள் வரவழைக்கப்பட்டனர். நிறைவுநாளில் உரையாற்றிய பிரவீண் தொகாடியா "ஒ ராமரின் கொடிதாங்கும் போர்வாள்களே, இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு பெரும்பணி காத்திருக்கிறது, அத வேறு ஒன்றுமல்ல, அகண்ட பாரதத்தை படைக்கும் லட்சியத்தின் மாபெரும் ஒத்திகை என்றார்! தொண்டர்கள் சற்று குழம்ப, தலைவர்கள் தெளிவாய் சிரித்தனர்!

-ஆஷிஷ் கேதான், தெஹெல்கா நிருபர்! 10-09-2010

2) கலவரம் தொடங்க 3 மாதங்களுக்கு முன்பே அகமதாபாத், நரோடா பாட்டியா, வடோதரா, ஜாம்நகர், ஜூனாகடு ஆகிய பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிருவனத்தின் வேடத்தில் துர்காவாஹிணி பெண்கள் இஸ்லாமியர்களை கணக்கெடுத்தனர்

-Shri rambunyani. Bloodmark at the gandhi land!

3) கலவரத்தின் 2 மாதங்களுக்கு முன்பே குஜராத்தில் ஆயுதங்கள் திரட்டப்பட்டன. RSS பஜ்ரங்தளில் அல்லாத ஆண்களுக்கும் வாலிபர்களுக்கும் திடீர் என கம்பு சுழற்றும் பயிற்ச்சிகள் தரப்பட்டன, ஆகமதாபாத் படேல்நகர் VHP அலுவலகத்தில்
2 அரைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன, இது இந்தூரில் இருந்து வரவழைக்கப்பட்டதாக படேல்நகர் VHP செயலாளர் ரகுராம் கடாரியா தெரிவித்தார்!

-Shri rambunyani. Bloodmark at the gandhi land.

4) கலவரத்திற்க்கு 28 நாட்களுக்கு முன்பு ஜெய்பூரிலிருந்து ஒரு கன்டெய்னர் குஜராத்தின் நரோடாபாட்டியாவுக்கு புரப்பட்டது! வழியில் 7 சொதனைச்சாவடிகளில் மேலிட உத்தரவினால் சோதனை செய்யப்படவில்லை, ஆனாலு குஜராத் எல்லையில் மாநில ஊர்க்காவல் மற்றும் பாதுகாப்பு பிரிவு போலிசார் அந்த கன்டெய்னரை திறந்து பார்த்தபோது குவியல் குவியலாக வாள்களும், ஈட்டிகளும், திருசூளங்களும், இரும்புத்தடிகளும் அதில் இருந்தன, 45 நிமிட காத்திருப்புக்கு பிரகு அந்த கன்டெய்னரை நரோடாபாட்டியா அனுப்பி வைத்தனர்!

-Shri rambunyani. Bloodmark at the gandhi land.

5) கலவரத்தின் 15 நாட்களுக்கு முன்பு ஜூனாகடில் 2நாள் பஜ்ரங்தள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது, எப்போதும் கூட்டம் நடக்கும் 2 நாட்களும் ஜூனாகடு முழுக்க ஒரே விழாக்கோலமாக இருக்கும், இறுதியில் மாபெரும் பொதுக்கூட்டமும் இருக்கும், ஆனால் இந்த கூட்டம் மிகமிக ரகசியமாகவே நடைபெற்றது!

-அங்குர் ரகுவர்தன் பிரசாத்! ucnhrt. morning time. 02-12-2011

-----

குஜராத் கலவரம் கோத்ரா சம்பவத்தின் வெளிப்பாடல்ல, மாறாக கோத்ரா சம்பவமே குஜராத் கலவரத்தின் முன்னேற்ப்பாடு

கலவரம் துவங்கியவுடன் அரசு இயந்திரத்தை முடக்கி, காவல்துறையை விலங்கிட்டு, இஸ்லாமியர்களை வேட்டையாடி முடிக்க காவி ஓநாய்களுக்கு எப்படியெல்லாம் பாதையமைத்து கொடுத்தார் மோடி என்பது வேறுகதை!

மாநில அரசாங்கத்தின் தலைவராக இருக்கும்போதே துல்லியமான திட்டமிடலுடன் மிகமோசமான இனக்கலவரத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும்போது, நாட்டின் பிரதமாக மோடி பதவியேற்றால் காட்சிகள் எப்படி இருக்கும் என 2 நிமிடங்கள் கற்ப்பனை செய்து பாருங்கள்!

காந்தியின் கனவுபூமியில் காந்தியின் கொலைகாரர்கள் அரியணை ஏறுவதென்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு விடப்படும் சவால்.

https://m.facebook.com/story.php?story_fbid=784798738198851&id=100000061950087

No comments:

Post a Comment