Chidambaram Periyasamy
2018-04-24
*பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்*
பொருளாதார கொள்கைகள் என்று பார்த்தால் இடதுசாரிகள் தவிர நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே கொள்கையுடைய கட்சிகள் தான்
சூழ்நிலைக்கேற்ப வரி விதிப்பில் சில ஏற்றத்தாழ்வுகள், வளர்ச்சி விகிதத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கலாமேயன்றி அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளாதார கொள்கை கொண்டவை தான்
*சரி வேறு என்ன பிரச்சினை*
இரண்டு முக்கிய பிரச்சினைகள்
*(1)* முதலாவது இந்துத்வா என்று அவர்கள் சொல்வதை நாம் "பார்ப்பனிய வர்ணாசிரம கோட்பாடு" - என்று புரிந்து கொள்கிறோம். அவர்கள் அதை "இந்து ஒற்றுமை" - என்று சொல்கிறார்கள்
*(2)* இரண்டாவது மாட்டுக்கறி போன்ற பிரச்சினைகளை நாம் "இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்" - என்று புரிந்து கொள்கிறோம். அவர்கள் "பசு எங்கள் தாய் போன்றது" - என்கிறார்கள்
*இரண்டையும் பார்ப்போம்*
*1. முதலாவது விசயம்*
முதலாவது விசயத்தில்,"ஜாதி தவறில்லை. மேலும், சுயஜாதி பெருமை கூட தவறில்லை. ஆனால், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தான் தவறு" - என்று பல கட்டங்களில் பாஜக கூறியுள்ளது.
இது பாஜக மட்டுமல்ல, நாடு முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டது தான், திக திமுக மதிமுக தவிர
உண்மையில் "ஜாதி தவறில்லை. ஆனால், ஏற்றத்தாழ்வு தான் தவறு" - என்கிற வாதம் "வீட்டில் மலம் இருப்பது தவறல்ல, துர்நாற்றம் தான் தவறு" - என்பதற்கு சமம். உண்மையில் இது சாத்தியம் இல்லாத பொய்யான வாதம்
இருந்தாலும், அனைத்து கட்சிகளும் ஜாதியை ஏற்றுக் கொண்ட பிறகு, பாஜகவை மட்டும் நாம் ஏன் பார்ப்பனீய கட்சி என்கிறோம்.
மற்ற கட்சிகள் ஜாதி சமூகத்தில் தவிர்க்க முடியாதது என்கிற ரீதியில் ஜாதி இருத்தலை ஆதரிக்கவும் இல்லாமல் எதிர்க்கவும் இல்லாமல் சமூக நீரோட்டத்தில் செல்கிறார்கள்.
உதாரணமாக, அம்பேத்கர் "ஜாதி மறுப்பு திருமண சட்ட மசோதா" - வைக்கொண்டு வந்த போதும், "விவாகரத்து, விதவை மறுமணம் சட்ட மசோதா" - வைக்கொண்டு வந்த போதும் RSS மட்டும் தான் கடுமையாக எதிர்த்து, மற்ற கட்சிகள் வேடிக்கை மட்டும் தான் பார்த்தது.
இதனால் இந்து மதமே அழிந்து விடும் என்றும் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் அம்பேத்கரை தூற்றியது RSS தான்.
அதாவது பார்ப்பணிய கோட்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்வது பாஜக. பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆதரிக்கவும் செய்யாமல் எதிர்க்கவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது மற்ற கட்சிகள்
அதாவது கொலை செய்கிறவனுக்கும் நமக்கு எதுக்கு வம்பு என்று கொலையை வேடிக்கை பார்ப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் தான் இந்துத்வா மற்றும் பார்ப்பணிய சித்தாந்த விசயத்தில் பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்
கொலைகாரனை நாம் கடுமையாக எதிர்க்கிறோம் அவ்வளவு தான்
மேலும் ஒரு உதாரணம் வேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் கொண்டு வந்த போது அதை பாஜக மற்றும் அதன் ஆதரவு பத்திரிக்கைகள் மட்டும் தான் எதிர்த்தது. மற்ற கட்சிகள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை
*2.இரண்டாவது இஸ்லாம் எதிர்ப்பு*
மாட்டுக்கறி பிரச்சினையால் இஸ்லாமிய எதிர்ப்பா அல்லது தனக்குள் இருக்கும் பார்ப்பணிய சித்தாந்தத்தை மறைக்க இஸ்லாமிய எதிர்ப்பு என்கிற மண்ணை தூவி நம் கண்களை மறைக்க மாட்டுக்கறி பிரச்சினை பயன்படுத்தப்படுகிறதா என்பதை பார்த்தால் உண்மை தெரியும்
உண்மையில் மாட்டுக்கறி உணவு ஒரு பிரச்சனையே இல்லை. பார்ப்பனர்கள் இன்று இஸ்லாமியர்கள் உண்பதை விட அதிகமாக மாட்டுக்கறி தின்றவர்கள் தான் வரலாறுப்பூர்வமாக பல இடங்களில் நிறுவியுள்ளார் அம்பேத்கர்.
மாட்டுக்கறி பார்ப்பனர்களின் அன்றாட உணவாக இருந்தது என்கிறார் விவேகானந்தர்
அன்று பார்ப்பனர்கள் தின்ற போது உணவாக தெரிந்த மாடு இன்று இஸ்லாமியர்கள் உண்ணும் போது அதே மாடு ஆத்தாவாக தெரிகிறதா
உண்மையில் மாட்டுக்கறி உணவை இஸ்லாமியர்கள் நிறுத்திக் கொண்டாலும் ஏன் பாபர் மசூதி இடத்தை ராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்புகள் விட்டு கொடுத்தாலும் இஸ்லாமிய எதிர்ப்பு என்கிற பூச்சாண்டி நமக்கு காட்டப்படும்
காரணம் இங்கு இஸ்லாமிய எதிர்ப்பு என்பது பிரதானமல்ல, அது ஒரு கண்கட்டி வித்தை
உண்மையில் பாஜகவின் அடிப்படை கொள்கை பார்ப்பனிய சித்தாந்தத்தை அமுல்படுத்துவது தான், இஸ்லாமிய எதிர்ப்பு எல்லாம் சும்மா டெக்கால்டி வேலை
வீட்டிற்குள் நடக்கும் கொலையை மறைக்க வெளியே நடக்கும் குழாயடிச் சண்டையை பெரிதுபடுத்துவது போன்றது தான் இஸ்லாமிய எதிர்ப்பு
உண்மையில் வெளியே நடக்கும் குழாயடிச் சண்டை நின்று விட்டால் உள்ளே நடக்கும் கொலை வெளியே தெரிந்து நாறி விடும்
அதனால் குழாயடிச் சண்டை நிற்பதை கொலைகாரர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்
https://m.facebook.com/story.php?story_fbid=601305913538053&id=100009759497094
No comments:
Post a Comment