Sunday, April 29, 2018

இந்துக் கடவுள்களின் காமக் காலித்தனங்கள்

செ. பா. செல்வம்
2018-04-29

இந்துக் கடவுள்களின் காமக் காலித்தனங்கள்
----------------------
உங்களிடத்தில்?

மின்சாரம்

"இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகா பண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் முல்லர் 'இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையிரல் எரிந்து விடும்' என்றார்" என்று கைவல்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார் (கைவல்ய சாமியார் கட்டுரைத் தொகுதி எண் 2 - பக்கம் 21).

இது ஏதோ மேம்போக்காகச் சொன்னதல்ல. இந்துக் களின் கடவுள்கள் எந்தத் தரத்தில், காட்டுமிராண்டித்தனத்தில், ஆபாசத்தில், ஒழுக்கக் கேட்டில் உழன்று, திரண்டு உருக்குலைந்து கிடக்கின்றன என்பதற்கு இதோ ஒரு பட்டியல்.

(1). சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை வினோதங் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந் நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்துவர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரவேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

(2). நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

(3). தவ வலிமை மிக்க பஸ்மாசுரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது, மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பஸ்மாசூரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவை, உயிருக்குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?

(4). பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண்-பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவி யத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு, பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையாக்கிப் புணர்ந்து, கணபதியைப் பெற்றான்.

(5) சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1768621386493586&id=100000372247445

No comments:

Post a Comment