Friday, April 6, 2018

வசூல்ராஜா சீமான்

Lokesh gopalsamy
Via Facebook
2018-04-07

என் கண்முன்னே நிகழ்ந்தது....

சற்றுமுன் இந்த வீடியோவை கடந்து வர நேர்ந்தது. அண்மைக்கலாமாகவே எதையும் வாசித்துவிட்டு கடந்து செல்லும் வழக்கத்தை வலுக்கட்டாமயாக உருவாக்கிக் கொண்ட எனக்கு இதை கண்டும் காணாமல் செல்ல இயலவில்லை. ஏனெனில் இதில் இவர் குறிப்பிடும் இரண்டு சம்பவங்களில் ஒன்று என் கண்முன்னே நிகழ்ந்தது.

இதில் வைகோ இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறார். ஒன்று பாரிஸ் நகரில் நடந்தது. இரண்டு மலேசியாவில் நடந்தது. பாரிஸ் நகரில் நடந்தது குறித்துதான் நான் விளக்க விரும்புகிறேன்.

2011 ஆம் ஆண்டு, அலைபேசியில் அழைத்த வைகோ அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற வளாகத்தில் ஒரு நிகழ்வை புலம்பெயர் தமிழரகள் ஒருங்கு செய்த்துள்ளார்கள். நீங்கள் ஆஸ்லோவில் தானே உள்ளீர்கள், நான்கு நாட்கள் ப்ருசல்ஸ் நகருக்கு வர இயலுமாயின் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என அழைத்தார். நிகழ்வு ஜீன் மாதம். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் எனது திருமணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்திருந்தார். அரசியல் களத்தில் அது ஒரு இக்கட்டான காலகட்டம். 2011 சட்டசபை தேர்தல் காலம். கடைசி நேரம் 5சீட்டு ஆறு சீட்டு என அதிமுக அவமானப்படுத்திய காரணத்தால் தேர்தலை புறக்கணித்து அறிவிப்பு வெளியிட்டுந்த  காலாட்டம் (அதிமுகவின் அந்த முடிவிற்கு ஸ்டெர்லைட் தான் காரணம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன). வைகோ அவர்கள் எந்த ஒரு செய்தியாளரையும் சந்திக்காமல் தவிர்த்து வந்த நேரத்தில், எனது மணவிழாவில் அவர் பங்கேற்கவேண்டும். தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டோமே என நான் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் வந்தார் திருமணத்தை நடத்தி வைத்தார். செய்தியாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், உளவு போலீசார்கள் சூழ அந்நிகழ்வு நடந்தேறியது. அவர் செய்த உதவியை எவ்வாறு பிரதிபலிப்பது என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவர் என்னை ப்ருசல்ஸ் அழைத்தார். மனமுவந்து ஏற்றுக் கொண்டேன்.

பயண டிக்கெட், விடுதி முன்பதிவு செய்துவிட்டு அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு ப்ருசல்ஸ் விமான நிலையத்தில் அவரை வரவேற்றேன். நான்கு நாட்கள் அவருக்கு தட்டச்சு, உணவு, போக்குவரத்து என உடனிருந்து உதவும் வாய்ப்பு கிடைத்தது. நான் அங்கே சென்றது ஒருவகையில் நல்லதாகப் போயிற்று, ஏனெனில் நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் அறக்கப்பறக்க அழைத்து கொண்டிருந்தார்கள். அவர்களால் இவருக்கு உரிய வசதிகளையோ அல்லது உதவியையோ செய்திருக்க இயலாது.

அதில் ஒருநாள், பாரிஸ் நகரில் தங்களை சந்திக்க ஒரு ஒன்றுகூடல் நிகழ்வு ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஆறு மணி நேர கார் பயணம் தங்களால் இயலுமா என நிகழ்வை ஒழுங்கு செய்தவர் கேட்டார். சிரமம் பாராமல் சரி என வைகோ ஏற்றுக்கொண்டார். அந்த கார் பயணத்தில் நானும் இருந்தேன். ஒரு காரில் நான்கு பேர், நிகழ்வை ஒழுங்கு செய்த இருவர், வைகோ அவர்கள் மற்றும் நான். முன்னிருக்கையில் அமர்ந்திருந்த வைகோ அவர்கள் வழிநெடுகிலும் அவரது ஈழ ஆதரவு, ஈழப்பயணம், அவர்கள் போற்றும் தேசியத்தலைவர் பிரபாகரனுடன் இருந்த இணக்கம், வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கடக்க நேர்கையில் உலகப்போர் காலத்தில் நடந்த சில சுவாரசிய சம்பவங்கள், நெப்போலியன் படைநடத்தியது தோல்வியுற்றது குறித்து என சிலாகித்து பேசிக் கொண்டு வந்தார்.

ஒரு கட்டத்தில், அரசியல் குறித்து பேசிக்கொண்டிருந்த பொழுது, கார் ஒட்டிக்கொண்டிருந்த அந்த ஒருங்கிணைப்பாளர், சீமான் கட்சி ஆரம்பித்து நடத்திய முதல் மதுரை மாநாட்டிற்கு மூன்று கோடி தங்களிடம் கேட்டதாகவும், அவ்வளவு எங்களிடம் இல்லை எனக் கூறி கொஞ்சம் கொடுத்தோம். ஆனால் மற்ற நாடுகளில் இருந்து நிறைய உதவியிருக்கிறார்கள் எனக் கூறினார். அப்படியா எனக் கேட்டுக் கொண்டதோடு வைகோ அவர்கள் இதுகுறித்து அவர்களிடம் விரிவாக வேறெதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. பயணத்தில் இளைப்பாற ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் கார் நிறுத்தப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் காபி வாங்கிவர சென்றுவிட்டார்கள். அப்போது வைகோ அவர்கள் சொன்னார்கள் " ஒரு மாநாடு நடத்த மிஞ்சிப்போனா 20 லட்சம் செலவாகும், இவன் மூணு கோடி கேட்ருக்கான். இப்பிடி உலகம் பூராம் வசூல் பண்ணீட்டு திரியிறானே. நம்மளும் இந்தனை வருஷம் கட்சி நடத்துறோம், புலம்பெயர் தமிழர்ட்ட பத்து பைசா கேட்ருப்போமா ? அவிங்களே பாவம், அவுங்க இயக்கத்துக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளைத்தான் செஞ்சிருக்கோம். இவன் இப்பிடி வசூல் பண்ணீட்டு திரிஞ்சா அது ஈழ ஆதரவாளர்களுக்கும், அந்த போராட்டத்துக்கும் டேமேஜாப் போயிருமே " என நொந்து கொண்டார். அதை ஆமோதிக்கிற வகையில் நான் ஏதோ பதில் கூற முற்பட்டேன், அதற்குள் அவர்கள் இருவரும் வர, உஸ்ஸ் என எனக்கு சைகை காட்டி, இதப்பத்தி நீங்க எதும் பேசாதீங்க என என்னிடம் சொல்லிவிட்டார்.

பயணத்திலும் இதுகுறித்து அவர்களிடம் எதுவும் பேசவில்லை. ஒருவழியாக பாரிஸ் நகரை வந்தடைந்த பொழுது இரவு 11 மணி. அங்கே எங்களை வரவேற்றவர் முன்னாள் புலிப்படை தளபதி பரிதி என்பவர். அவர்தான் பாரிஸ் நிகழ்வையும் ஒழுங்கு செய்தவர். (சிலமாதங்கள் கழித்து அவர் அதே பாரிஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் என தமிழ்நெட் செய்தியில் படித்த பொழுது அதிர்ந்து போனேன் )

மூடப்பட்ட ஒரு சிறிய உணவகத்தில் 100 பேர் திரண்டிருந்தார்கள். வைகோ அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார். உரை முடிந்ததும் கேள்வி நேரம், அதில் ஒருவர் ' ஈழம் குறித்து, தமிழகத்தில் பல அமைப்புகளின் ஆதரவு பெருகிவருவது ஆறுதலாக உள்ளது, அதில் சீமான் குறித்து உங்கள் கருத்து என்ன?' என ஒருவர் கேட்டார். ஈழம் குறித்து எழுகிற அத்தனை குரல்களும் நமக்கு வலுச்சேர்க்கும் என டிப்ளோமாட்டிக்காக பதில்சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு போயிவிட்டார். கடுமையான பசி எனக்கு. மொத்தமாக மலிவு விலை பர்கர்கள் வாங்கி வைத்திருந்தார்கள். நான் ஒன்றை உண்டு விட்டபிறகுதான் உதித்தது, வைகோ அவர்கள் அசைவம் சாப்பிடமாட்டேன் என்றாரே என்ன செய்யப் போகிறாரோ என. பர்கரில் இருந்த வெறும் பன்னும் , ஒரு காப்பியும் மட்டும் உண்டது கண்டு கவலை கொண்டேன். ஏனெனில் அது எனது பொறுப்பல்லவா.

நிகழ்வு முடிய இரவு 1 மணி. ப்ருசல்ஸ் திரும்பும் பயணத்தில் 5-6 வாகனங்கள் உடன் வந்தன. இம்முறை நான் வேறு வாகனத்தில். வைகோ அவர்களும் தளபதி பரிதியும் மற்ற சிலரும் (எதோ முக்கிய போராளிகள் போல. யாரென எனக்கு தெரியவில்லை) வேறொரு வாகனத்தில் வந்தார்கள். விடுதியை வந்தடைந்த பொழுது அதிகாலை நேரம். மற்ற வாகனத்தில் இருந்த ஒருவர் என்னிடம் வந்தார். அண்ணே நித்திரையில இருக்கார், எப்படி எழுப்ப என தனது சிக்கலை வெளிப்படுத்தினார். நான் சென்றேன், களைப்பில் காரில் அமர்ந்தவாறு உறங்கி கொண்டிருந்தார் வைகோ அவர்கள். ஐயா என எழுப்ப முற்பட, வாகனத்தில் இருந்த ஐவரும் கீழே இறங்கி ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் கொண்டார்கள். அவர்களது ஒழுங்கு, நேர்த்தி, பாதுகாப்பு உணர்வு மற்றும் கட்டுமஸ்தான உடலமைப்பு அவர்கள் யாராக இருந்திருக்கக் கூடும் என்பதை எனக்கு எடுத்துக்காட்டியது. எனக்கும் சங்கோகஜமாக இருந்த போதிலும், ஐயா ஐயா என அவரை உலுப்பி எழுப்பிவிட்டேன். எழுந்ததும் , தூங்கிட்டேனா.. ஐ மஸ்ட் பீன் வெரி டயர்ட் எனக் கூறிக் கொண்டு எழுந்தார். உடன் வந்தவர்களுடன் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, விடுதிக்குள் சென்றார்.

இரண்டு நாட்கள் கழித்து , புருசல்ஸ் நிகழ்வு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் விடுதிக்கு வந்தார்கள். வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, "அண்ணே... உங்க பயணச்செலவுக்கு...." என ஒரு வெள்ளை உரையை நீட்டினார்கள். அதற்கு வைகோ சொன்னார், நான் ஈழத்தமிழர் எவரிடமும் பணம் பெறுவதில்லை என்கிற கொள்கை உடையவன். இதற்கான செலவை எனது கட்சியினர் அளித்த ஐந்து பத்து என அளித்த நன்கொடையிலிருந்து ஏற்றுக்கொள்கிறேன். அதுதான் அவர்களுக்கு நான் செய்யும் மதிப்பு. இது நீங்கள் புலம் பெயர் நாட்டில் கிடைக்கிற வேலையை செய்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். இந்தப் பணத்தை நீங்கள் உங்கள் அமைப்புசார்ந்த  பணிகளுக்கு வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டார். அதோடு நில்லாமல், விடுதியில் அவரது அறைக்கான கட்டணத்தை மட்டுமின்றி எனது அறைக்கான கட்டணத்தையும் அவரே செலுத்தினார். ஐயா இது என்னோட கடமை, நான் ஏற்றுக்கொள்கிறேன் என எவ்வளவோ சொல்லியும், " மாதச்சம்பளம் வாங்குற நீங்க எனக்கு எப்படி செலவு செய்வீங்க? நீங்க வந்து உடனிருந்து உதவியதே எனக்கு பேருதவி எனக் கூறிவிட்டார். இது நான் கண்ட , உணர்ந்த உண்மைச் சம்பவம்.

ஒரு உண்மையான உணர்வாளனுக்கும் ஒரு பிராடுப் பயலுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை நான் அப்போது உணர்கிறேன்.அதன் பின்னர், எனக்குத் தெரிந்த ஈழத்தமிழர் வட்டத்தில் விசாரித்தபொழுது தான் தெரிந்தது, உலகெங்கிலும், அதிலும் குறிப்பாக கனடாவிலிருந்து வெகு ஜோராக வசூல் செய்து கொண்டிருக்கிறான் இந்த சீமான் என்பது. ஓரிரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும். ஜெனீவாவில் ஏதோ ஒரு நிகழ்விற்கு வந்தவனை நான் வசிக்கும் ஆஸ்லோவிற்கே அழைத்து வந்து பேசவைத்தார்கள் இந்த ஈழத்தமிழர்கள். ஆஸ்லோவில் அவன் பேசிய வீடியோ கிடைத்தால் பாருங்கள், சும்மா அள்ளி விடுறான். தமிழர் உரிமைப் புரட்சிக்கான விதையை இவர் உலகெங்கிலும் போயி தூவிக்கொண்டிருக்கிறாராம். பர்மாவிலே ஒரு அம்மையார் இருக்கிறார், அவர் சீமான் நீ பர்மாவுக்கு வந்து பேசிட்டு போ, இங்கேயும் தமிழர் புரட்சி வெடிக்கும் என்றாராம். அதே போல மலேசியாவில் இவர் புரட்சியை பற்ற வைத்தாராம். ஓரளவு நாலு விடையம் படைத்தவனாக இருந்த காரணத்தால், எனக்குள் எழுந்த கேள்வி, பர்மா, மலேசியா.. இவன் போயி புரட்சி நடத்தப்போறானா? பர்மா எப்படிப்பட்ட நாடு? மலேசியாவின் சட்டம் ஒழுங்கு எப்படி ? என மனதில் எண்ணிக் கொண்டேன். ஆனால் ஈழத்தமிழர்களிலும் விசிலடிச்சான் குஞ்சுகள் உண்டு. தமிழ்நாட்டில் சினிமா பைத்தியங்கள் மாதிரி, இது ஈழப்போராட்டம் சார்ந்த ஒருவித அறியாமை பைத்தியங்கள். யார் என்ன, பின்புலம் என்ன எனப்பாரது கைதட்டும் கூட்டம். அதுதான் ஏமாந்துபோய் காசு அனுப்புகிற கூட்டம். ஆனால் ஈழத்தமிழர்களின் மிகவும் அறிவார்ந்த சரிபாதி கூட்டம் ஒன்று உள்ளது. அது இவர்களிடம் இருந்து தங்களை பிரித்துக் கட்டிக்கொள்ளும். என்ன சிக்கல் என்றால், அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் பொதுவெளியில் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆகையால் அவர்களாலும் ஒன்று செய்ய இயலவில்லை.

ஆக மொத்தத்தில் இவனது ஆஸ்லோ பேச்சு, பஸ்டாண்டில் தாயத்து விற்கிற பேர்வழி போல " பிரச்சனைகளால் பிதுக்கி பிரசவிக்கப்பட்ட உங்கள் பிள்ளை நான், உங்கள் பிள்ளை,உங்கள் பிள்ளை,உங்கள் பிள்ளை...உங்களுக்காக வீதி வீதியாக கத்திக்கொண்டு திரிகிறேன், உங்கள் பிள்ளை என்னை தவிக்க விட்டுவிடாதீர்கள் (ஏதாவது பிச்சை போட்டு அனுப்புங்க), தவிக்க விட்டால் அனைவரும் ரத்தம் கக்கி சாவீர்கள் " என்பது போன்று தான் இருந்தது. வசூலில் தான் குறியாக இருக்கிறான் எனப் புரிந்தது. அதை வலுப்படுத்தும் வகையில் நானறிந்த ஈழத்தமிழர்கள் சிலர் என்னிடம் அதை உறுதிப்படுத்தவும் செய்தார்கள். சாமானியன் எனக்கே இவ்வளவு தெரிகிறதென்றால், உலகம் முழுதும் புலிகள் அமைப்பினர், புலம் பெயர் தமிழர் தொடர்புடைய வைகோ அவர்களுக்கு எத்தனை விடையங்கள் ஆதரப்பூர்வமாக அனுப்பப்பட்டிருக்கும் என எண்ணிப் பார்க்கிறேன்.

ஆயினும், அவர் இதுவரை இவனது வசூல் குறித்து, புலிக்கொடி வைத்துக்கொண்டு, ஐந்து நிமிட சந்திப்பில் எடுத்த ஒரு போட்டோவை காட்டி அளந்து விட்ட புனைக்கதைகள் இருக்கிறதே ...எதுகுறித்தும் வைகோ இதுவரை எதுவும் சொல்லியதில்லை. ஆனால், சாமர்த்தியமாக, இவனோடு கரம்குலுக்கினால் கூட நம்மீதும் களவாணிபயல் என்கிற களங்கம் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் வைகோ மட்டுமின்றி வேறு பல அமைப்புகளும் இவனை ஒதுக்கி வைத்தது மட்டும் உணர முடிந்தது. இத்தனை ஆண்டுகள் அமைதி காத்து, இப்போது வைகோ பேசுகிறார் என்றால், தன் நிலை தராதரம் உணராமல் ஓவரா எல்லை மீறி போயிட்டான் போல இருக்கு.

சரி, ஈழத்தமிழர்கள் காசு கொடுக்கிறார்கள், அது அவர்களது விருப்பம். அதை இவன் வாங்கி செலவு செய்கிறான் , அதில் உனக்கென்ன வலிக்கிறது? என நீங்கள் கேட்கலாம். அதில் தான் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. தமிழகத்தில் ஈழ ஆதரவு இயக்கங்கள் அனைத்தும் புலிகளுக்கு உதவி செய்திப்பார்களே அன்றி அவர்களிடம் எவ்வித ஆதாயமும் பெற்றிருக்க மாட்டார்கள். இறுதிவரை புலிகள் இயக்கம் தங்களை, தங்கள் கட்டமைப்பை, நிர்வாகத்தை வலுப்படுத்திக்கொள்ள தேவை நாடியவர்களை, பொருளுதவி பெற்றுவந்தவர்கள். புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வந்த நிதி அவர்கள் போராட்டத்தை தாங்கிப் பிடித்தது. தமிழகத்தில் இருப்பவர்களும், பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி உதவி செய்துள்ளார்கள். ஈழப்பிரச்சினை பேசுகிற காரணத்தால் அரசியல் வெற்றியை இழந்தவர் வைகோ என அவர் கூறாவிட்டாலும், நான் கூறுவேன். புலிகளுக்கு பெட்ரோல் கடத்திவிட்டான், பால்ரோல்ஸ் கடத்திவிட்டான், நாட்டுத்துப்பாக்கி கடத்தினான் என கைதாகி இன்னலுக்குள்ளான மதிமுகவினர் கதையை கேட்டிருக்கிறேன். காயம்பட்ட புலிகளுக்கு தனது வீட்டில் வைத்து சிகிச்சை அனுப்பிய வைகோ குடும்பத்தாரின் பணியை படித்திருக்கிறேன். இவ்வளவு ஏன், மேற்கூறிய ப்ருசல்ஸ் மாநாட்டிற்கு ஒருவர் வந்திருந்தார். வைகோ அவர்களை சந்திக்க வந்த அவர், காத்திருக்கும் நேரத்தில் தன்னைப் பற்றிய அறிமுகத்தை என்னக்கு சொன்னார். ஈழத்தில் இருந்து வைகோ தமிழகம் திரும்பியபொழுது அவருடன் சென்ற தளபதிகளில் ஒருவர். பல மாதங்கள் கடந்து மார்பில் குண்டுக்காயம் பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிற தருணத்தில்,  தமிழகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சையளித்து என்னை காப்பாற்றினார். அண்ணனாலதான நான் உயிரோட இருக்கேன், எனது மார்பிலிருந்து எடுக்கப்பட்ட அந்த தோட்டாவை அண்ணன் இன்றும் பத்திரமாக வைத்துள்ளார் என நெகிழ்ந்து நினைவுகூறினார். இப்படியாக, ஈழப்பிரச்சினை , ஈழ உணர்வு என்பது ஒரு உணர்வு சார்ந்த ஆதரவு நிலை. உயிரைக் கொடுத்து போராடுகிறவர்களுக்கு நம்மிடம் இருப்பதை கொடுத்து உதவுவதை விட்டுவிட்டு அவர்களையே ஏமாற்றி பிழைப்பு நடத்துவது எத்தனை இழிவான ஒரு செயல்?

அது போகட்டும், அதனால் எனக்கென்ன? எனக்கு வலிக்கிறது ஏனெனில், ஈழம் என்பது பலரையும் தொட்டுச் சென்றிருக்கிறது. ராஜீவ் படுகொலை நடந்த பொழுது நான் நான்காம் வகுப்பு படிக்கிறேன். அதன் பிறகான கெடுபிடிகள் புலிகள் குறித்து எதையும் நான் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கவில்லை. பிரபாகரன் குறித்து நான் சட்டை செய்து கொண்டதில்லை. வைகோ யாரென தெரியும் ஆனால் அரசியல் தெரியாது எனக்கு. ஆனால் 2005 ஆன் ஆண்டு இணைய பரவலுக்கு பிறகுதான் முதன் முதலில் யூடியூபில் வைகோ பேச்சை கேட்டேன். அதில் ஈழத்தில் தமிழர்கள் படும் அவலத்தை ஆதரப்பூர்வமாக அவர் எடுத்து வைத்தது கேட்டு ஆதரவு நிலை கொண்டேன். ஒருவகையில் பிராபகரன் யாரென்றும், ஈழம் என்றால் என்ன என்றும் எனக்கு அறிமுகம் செய்தவர் வைகோ தான். எத்தனையோ நாடுகள் உலகில் இருக்க, நார்வே நாட்டை நான் தேர்வு செய்ய முக்கிய காரணிகளில் ஒன்று வைகோ. இப்படியாக எத்தனை பிணைப்புகள்! சரி நானாவது நேற்று வந்தவன், தமிழகத்தில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு பிரபாகரன் என்றும், மதிவதனி என்று பெயர் சூட்டி பெருமை கொண்டுள்ளார்கள்? தாங்கள் சார்ந்த கட்சிகளின் பேதம் கடந்து உணர்வு சார்ந்து ஈழத்தையும் பிரபாகரனையும் போற்றுகிறவர்கள் எத்தனை பேர். அத்தனை பேரையும் கொச்சப்படுத்தும் செயல் இந்த சல்லிப்பயல் சீமானின் செயல்.

இதுபோதாதென்று, தற்போது இனத்துவேசம் வேறு. இவன் தமிழன், இவன் வந்தேறி என்பன போன்ற பரப்புரைகள். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என எண்ணிப் பார்க்கிறேன். 1. புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிட்டார்கள். தற்போது அவர்கள் எப்போது விசா சிக்கலில்லாமல் நாம் விடுப்பில் இலங்கைக்கு செல்லலாம்,  சென்று நம் பிள்ளைகளுக்கு நாம் வாழ்ந்த இடத்தைக் காட்டலாம் என்கிற சிந்தனையில் உள்ளார்கள் அன்றி, ஈழம் வாங்கித் தருகிறேன் காசு அனுப்புங்கள் எனச் சொல்கிறவனை ஆர்வமாக கவனிப்பதில்லை. 2. ஆரம்பத்தில் சேர்ந்த காசில் கட்சி ஆரம்பித்து, கறிசோறு தின்று ரத்தம் ஊறிய பிறகு இருப்பை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆகையினால்தான் இந்த வந்தேறி பிரிவினைகள், ஆமை கதை, போர்ப்பயிற்சி ஏகே 74 கதைகள். இந்த தற்குறியின் கதைகளை நம்பி கைதட்டுகிறவன் எவனாக இருக்கக் கூடும்? அடிப்படை கல்வியறிவு, பொது நாகரீகம், வரலாறு, எதிர்காலம் குறித்து ஏதும் அறியாதவனாக இருப்பான்.  அங்குதான் இவர்களுடனான முரண்பாடு எனக்கு வலுப்பெற்றது.

எனது பதிவுகளை பின்தொடர்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், அரசியல் என்பதை நான் முழுச்சாப்பாடாக விழுங்கிறவன் அல்ல, மாறாக அதை ஊறுகாயாக தொட்டுக் கொள்கிறவன். எனது கொள்கை, எதிர்பார்ப்பு எல்லாம், நாம் பிறந்து வளர்ந்த தமிழகத்தின் இளைஞர்கள் அறிவுசார்ந்த தளத்தில் சிந்திக்க வேண்டும் என்பதே. ஆகையால்தான் எனக்கு கிடைக்கிற அற்ப சொற்ப நேரத்தில் இங்கே அறிவியல், விஞ்ஞானம், பௌதீகம், உலக நடப்புகள், கல்வியின் மகத்துவம் என்கிற தளத்தில் எழுதிக் கொண்டு திரிகிறேன். கல்வி மற்றும் அறிவியல் கொண்டு சமூகத்தை எவ்வாறு முன்னேற்றலாம் எனபதுதான் எனக்கிருக்கும் சொற்ப திறமைகள் கொண்டு எனது சமூகத்திற்கு நான் வழங்கத்தக்க குறைந்தபட்ச பிரதிபலன் என எண்ணுகிறவன். அதை வீணாக்கும் வகையில் தமிழக இளைஞர்களை திசைமாற்றி, மடையர்களாக்கி, சமூகத்தை பின்னோக்கி தள்ளி எதிர் திசையில் இயங்கி கொண்டிருக்கும் இந்த தற்குறிகளை காணச் சகிக்காமல் தான் இவர்களுக்கு எதிராக பதிவிட நேர்ந்தது. உனக்கு உன் வசூல் முக்கியமென்றால் எனக்கு என் நேரம் முக்கியம். பின்னர்தான் புரிந்தது, இவனுக்கு கைதட்டுகிற கழிசடைகள் அத்தனையும் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பது. இந்த மூதேவிகளுக்கு அரசியல், அறிவியல், தர்க்க வியாக்கியானங்கள் கற்பிப்பதெல்லாம் பன்றிகளுக்கு பாட்டிலக்கணம் பயிற்றுவிக்கும் பயனற்ற செயலென்று. என்ன பேசினாலும் இறுதியில் நீ ஒரு தமிழனில்லை வந்தேறி என்பான். எனவேதான் இந்தப்பதிவு நாம்டம்ளர் தற்குறிகள் அல்லாத மற்ற எனது சொந்தச் சகோதரர்களுக்கு.

(தற்குறிகள் கவனத்திற்கு: முதல் கமெண்ட்டை பார்க்கவும் )

https://m.facebook.com/story.php?story_fbid=10155264777282377&id=528302376

No comments:

Post a Comment