Wednesday, April 4, 2018

காவிரி மேலாண்மை வாரியம் - மத்திய அரசின் பொறுப்பு

சிவசங்கரன் சரவணன்
Via Facebook
2018-04-04

இரண்டு வீட்டுக்கு இடையே நிலத்தகராறு ஏற்படுகிறது.  பல வருசம் பஞ்சாயத்து பண்ணியும் ஒரு முடிவுக்கு வர முடியல.  இனி பேசிப் பிரயோஜனம் இல்லன்னு ரெண்டு தரப்பும் முடிவுக்கு வந்து கோர்ட்டுக்கு போயாச்சு.  கோர்ட் "ஆளுக்கு சரி பாதி யா இடத்தை பங்கு போட்டு கொடுக்கனும்.  அவங்க ஒழுங்கா பிரிக்கறாங்களா என்பதை அந்த ஜில்லாவிலேயே இல்லாத ஒரு புது விஏஓ வை நியமித்து  கண்காணிக்கனும்.  எந்த விஏஓ,  எப்படி கண்காணிக்கனும் என்றெல்லாம் ஏற்கெனவே கிராம பஞ்சாயத்து சொன்ன தீர்ப்பிலேயே இருக்கு,  அதை பின்பற்ற வேண்டும்.  தாசில்தார் ஒரு விஏஓ வை இந்த வேலைக்காக நியமிக்கனும்!  " அப்படின்னு உத்தரவு போடுது!

இப்ப தாசில்தார் என்ன பண்ணனும்?  ஒரு விஏஓ வை அப்பாயின்ட் பண்ணி அந்த பொறுப்பை அவர் கையில விட்டுட்டு ஒதுங்கிடனும்.  அவ்ளோ தான் அவர் வேலை.  ஏன்னா ரெண்டு வீடுமே அவருக்கு வரி கட்டுற வீடுங்க! 

இந்த ரெண்டு வீட் ல ஒரு வீட் ல இப்ப கிடா வெட்டு விருந்து ஒன்று நடக்கவுள்ளது.  தாசில்தார் க்கு என்ன அல்ப புத்தின்னா,  கிடா வெட்டு வைக்கிற நேரத்தில் அந்த வீட்டுக்கு போனா ஒசி ல கறித்தின்னலாம்,  இந்த நேரத்தில எதுக்கு கோர்ட் உத்தரவை மதிச்சு புதுசா விஏஓ வை போடனும்.  முதல்ல கறி விருந்து முடியட்டும்.  எவ்ளோ கறி கிடைக்குதோ அத பொறுத்து பிறகு பார்க்கலாம் என கருதுகிறார். 

இப்ப நீங்க யாரை குறை சொல்வீங்க? 

ஆள் நியமிக்காத தாசில்தாரை தான் கொஞ்சமேனும் அறிவும் நியாயவுணர்ச்சியும் உள்ள எவரேனும் சொல்வார்கள். தாசில்தாருக்கு பயந்து கொண்டு,  கோர்ட்டு சொன்னதை நிறைவேற்றுங்க என கேட்க திராணி இல்லை என்பதற்கு வேணும் னா வீட்டு பெரிய மனுசன அந்த வீட்டு ஆளுங்க கோவிச்சுக்கிட்டு திட்டுவாங்க!

இல்லையா?  ஒரு குரூப் என்ன சொல்லுதுன்னா அந்த வீட்டு பையனும் இந்த வீட்டுப் பையனும் ஒரே டியூசன் வாத்தியார்ட்ட தானே ஒண்ணா படிக்கிறாங்க?  அப்ப அந்த டியூசன் வாத்தியார விட்டு பேச சொல்லலாம் ல என்று கேட்கிறார்கள். 

ரெண்டு வீடும் பேசி ஒண்ணும் ஆகப்போறதில்லேன்னு தான் வழக்கு கோர்ட்டுக்கு போச்சு!  இல்லையா?

இந்த கதையில் ரெண்டு வீடு : தமிழ்நாடு,  கர்நாடகம்

தாசில்தார் : மத்திய அரசு

நில பிரச்சினை : காவிரி பிரச்சினை

கறி விருந்து : கர்நாடக தேர்தல்

மேலாண்மை வாரியம் அமைக்க வழிவகை செய்யவேண்டும்,  இதை அமித் ஷா தான் செய்யவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.  ஏனென்றால் அமித் ஷா விற்கும் இதற்கும் ஒரு மயிறு சம்பந்தமும் இல்லை!  அதேபோலத்தான் ராகுல் காந்தி & சித்தராமையா! 

காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் சித்தராமையா மற்றும் பாஜக எடியூரப்பா ரெண்டு பேருக்கும் ஒரே நிலைப்பாடு தான்.  ஆனால் அது நமக்கு தேவையில்லாதது! 

மத்திய அரசின் கடமை நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவது தான்.  எனவே நாம் மத்திய பாஜக அரசை கேட்கிறோம்.  பாஜக விற்கு பதிலாக கம்யூனிஸ்ட் அரசாங்கம் இருந்தால் நாம் அவர்களை பார்த்து கேட்டிருப்போம்!

அமித் ஷா ஏன் காவிரி பிரச்சினை யை தீர்க்கவில்லை என்பது எவ்வளவு மொண்ணையான வாதமோ அதேபோலத்தான் ராகுல்காந்தியை இதில் இழுப்பதும்! 

பாஜக தங்களது தோல்வியை மறைப்பதற்காக,  "மச்சி நீ கேளேன் " என அடுத்தவர்களை உள்ளே இழுத்து விடுவது அர்த்தமற்றது!  அந்த அர்த்தமற்ற அலம்பல்களை நாமும் சீரியசாக எண்ணி பார்வார்டு செய்வதை தவிர வேறு துயரம் வேறு ஏதுமில்லை!

https://m.facebook.com/story.php?story_fbid=2029819963713656&id=100000570177032

No comments:

Post a Comment