Chochalingam Murugaiyan
Via Facebook
2016-Nov-27
https://m.facebook.com/story.php?story_fbid=10154728101713735&id=517973734
Cash velocity
நீங்கள் ஒரு ஊரில் இருக்கீங்கன்னு வைங்க. அங்க நீங்க கட்டட இஞ்சினியர் வேலை பார்க்கறீங்க, ஊரில் இன்னும் ஒரே ஒரு ஆள் இருக்கார் அவரு ஹோட்டல் நடத்துறார். நீங்க கட்டிடம் கட்ட அவருடைய நூறு ரூபாய் தருகிறார் நீங்க தங்க சாப்பிட நூறு ரூபாய் தரீங்கன்னா , அங்கு இருநூறு ரூபாய்க்கு பரிமாற்றம் நடந்து இருக்கு ஆனா ஒரு நூறு ரூபாய் நோட்டு தான் புழக்கத்தில் இருக்கு.
ஆக பண மாற்று 2 மடங்கு
இப்போ ஊருக்குள்ள இன்னொரு காய்கறி அங்காடி கடைக்காரர் மற்றும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் வருகிறார் என்று வையுங்கள்.
காய்கறி கடைகார்ர் , ஆட்டோ ஓட்டுனர், நீங்க மூனு பேரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கீங்க. ரூம் வாடகை முறையே 100 ரூபாய். ஒரே நாளில் ஹோட்டல்கார்ர் சம்பாத்தியம் 300 ரூபாய்.
அப்புறம் அவர் ஆட்டோவில் போய் காய்கறி கடைகார்ரிடம் 150 ரூபாய்க்கு பொருள் வாங்குகிறார் ஆட்டோவிற்கு 50 ரூபாய் கொடுக்கிறார்.
இப்ப அவரிடம் இருப்பு 100 ரூபாய், காய்கறிகடையாளிடம் 150 ரூபாய், ஆட்டோகார்ரிடம் 50 ரூபாய்.
காய்கறிகார்ர் புதிதாக கட்டும் அங்காடி பணி உங்களிடம் தருகிறார். நாள் சம்பளம் 100 ரூபாய். நீங்கள் ஆட்டோவில் 50 ரூபாய் செலவு செய்து வேலை செய்கிறீர்கள் அப்போது காய்கறி ஆளிடம் மிச்சம் 50 ரூபாய் மிஞ்சும், உங்களிடம் 50 ரூபாய் மிஞ்சும், ஹோட்டல் ஆளிடம் 100 ரூபாய், ஆட்டோகார்ரிடம் 100ரூபாய்.
இப்போ மொத்தம் 300 ரூபாய்தான் இருந்தது ஆனால் பரிமாற்றம் நடந்த தொகை எவ்வளவு 300+ 150+50+100+50 ---->650 .
அதாவது நாள் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 2.16 முறை மாறி இருக்கிறது.
அடுத்த நாள் தங்க உங்களிடம் போதுமான காசு இல்லை நாள் முடிவில் தான் இருநூறு ரூபாய் கிடைக்கும். எனவே அன்று நீங்கள் கடன் வாங்க வேண்டும் அப்போது புதிதாக ஒரு சேட்டு கடன் தர ஊருக்கு வருகிறார். அட ஆட்டோ ஓட்டினால் 100 ரூபாய் கிடைக்கிறதா என்று இன்னொரு ஆட்டோகார்ர் வருகிறார்.
இப்போது ஐந்து பேர் தங்குகிறார்கள்.
ஹோட்டல் ஆளிடம் இருப்பது 150, காய்கறி ஆளிடம் 50, ஆட்டோ ஓட்டுனரிடம் 100 , உங்களிடம் 50, புதிதாக வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் 100 சேட்டு கையிருப்பு 500.
மொத்த பணம் 950
சேட்டு உங்களுக்கும், காய்கறி ஆளுக்கும் 100 ரூபாய் கடன் தருகிறார்.
ஹோட்டலுக்கு 100 ரூபாய் தருகிறார். மிச்சம் 200 ரூபாய் தன்னிடம் வைத்துக்கொள்கிறார்
அப்போது மொத்த பணம் 950 ஆனால் புழக்கத்தில் உள்ள பணம் 750 . 200 இருப்பாக இருக்கிறது.
ஹோட்டல்கார்ரிடம் 500 ரூபாய் எல்லோரும் சேர்ந்து தருகிறீர்கள் அப்போது அவரிடம் இருப்பது 150 +500 ---> 650 ரூபாய்.
இன்னும் ஒரு அறை அதிகப்படுத்த சொல்லி உங்களுக்கு 200 கொடுக்கிறார். காய்கறிகடையில் 250 ரூபாய்க்கு பொருள் வாங்குகிறார். ஆட்டோவிற்கு இருவருடன் பேரம் பேசி 40 ரூபாய்க்கு போகிறார். அப்போது அவரிடம் மிச்சம் இருப்பது 160 ரூபாய்.
உங்களிடம் 200 ரூபாய்.காய்கறி கடைகார்ரிடம் இருப்பது 300 ரூபாய். அங்காடியை பெரிதாக்க உங்களுக்கு 150 கொடுக்கிறார் உங்கள் ஆட்டோ வாடகை 50 ரூபாய். ஆக உங்கள் இருப்பு 300 ரூபாய், காய்கறிகடைகாரிடம் 150 ரூபாய்.
சேட்டு ஆட்டோ எடுத்துக்கொண்டு பணம் வசூலிக்க வருகிறார் நீங்கள் 150 ரூபாயும், காய்கறி ஆள் 150 ரூபாயும் கொடுக்கிறீர்கள் ஆட்டோவிற்கு (இரண்டாவது ஆட்டோ) (வட்டியுடன்) 50 ருபாய் கொடுக்கிறார்
ஆக இன்றைய முடிவில் சேட்டிடம் 450 ரூபாய், உங்களிடம் 200 ரூபாய், ஹோட்டல் ஆளிடம் 160 ரூபாய், காய்கறி ஆளிடம் 0 , ஆட்டோ ஓட்டுனர் 1 90 ரூபாய் , ஆட்டோ ஓட்டுனர்2 50 ரூபாய்.
மொத்த பரிமாற்றம் 500+ 200+250+40+150+50+150+150+50 -----> 1540 ரூபாய். புழக்கத்தில் இருந்த பணம் 750 ரூபாய் . ஆக ஒரு நூறு ரூபாய் 2.05.
பணமாற்று ஏன் குறைந்தது ? இடையில் சிலரிடம் முழுதாக செலவாகாமல் சேமிப்பாக / லாபமாக பணம் தங்கிவிடுகிறது. அதனால் பணம் தனது முழு பரிமாற்றத்தைவிட குறைவாக ஆனது.
மூன்றாவது நாள் சேட்டுக்கு கொண்டாட்டம், இரண்டு ஆட்டோ ஆட்களும், காய்கறி ஆளும் சேர்த்து முன்னூறு ரூபாய் கடன் தருகிறார். புழக்கத்தில் பணம் அதிகரிக்கிறது. புது ஆட்கள் ஊருக்குள் வருகிறார்கள். பண பரிமாற்றம் அதிகரிக்கிறது. லாபங்கள்/ சேமிப்புக்கள் பணத்தை முடக்கி போடுகின்றன, புதிய கடனாளிகளும், மூடும் தொழில்களும், புதிய வேறு ஆட்களும், மேலும் பணமும் வருகிறது.
செலவு குறைப்பு, லாபம் அதிகரிப்பு, போட்டி நிறுவனத்தை வாங்குவது, இன்று பேர் சேர்ந்து விலையை அதிகரிப்பது, கடனுக்கான வட்டி அதிகரிப்பது, கடன் கட்ட முடியாமல் நொடித்து போவது ,வாரா கடன், என பொருளாதாரம் மாறுகிறது. இதற்கு இடையில் ஊருக்கு வெளியில் தங்கள் வீட்டில் தங்கி செலவு குறைப்பது, ஊருக்கு வெளியில் இருந்து பொருட்கள் வாங்குவது, இங்கு விற்பனை குறைய வேறு ஊருக்கு காய்கறி விற்பது, வாங்க விற்க வரும் ஆட்கள் ஊரில் ஹோட்டலில் தங்குவது என பொருளாதாரம் மாறிப்போகிறது....
இப்போதைக்கு இது போதும். ஆக கேஷ் வெலாசிட்டி என்பது ஆண்டிற்கு பணம் எத்தனை முறை கைமாறுகிறது என்பதே
இந்திய ஜிடிபி 130 லட்சம் கோடி இந்திய கேஷ் வெலாசிட்டி 1.3 ஆக இருக்க வேண்டிய பணம் 100 லட்சம் கோடி ஆனால் இருப்பதோ 18 லட்சம் கோடி. எப்படி ??????
அதற்கு broad money, narrow money என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அது என்ன broad money, narrow money?????
சொல்கிறேன்....
No comments:
Post a Comment