Saturday, November 12, 2016

சில real time சூழல்கள் - தினேஷ்

Dr. Dinesh Kumar
Via Facebook
2016-Nov-12

சில real time சூழல்கள்..

1. ஒட்டுமொத்தமாக digitalise / mobile based வர்த்தகம் ஆக்கினால், அந்த சமூகத்தை Paralyse செய்ய, மின்சாரத்தை 3 நாட்கள் துண்டித்தால் போதும். கடந்த டிசம்பர் வெள்ளம் போல ஒன்று ஏற்பட்டால், அருகாமையில் உள்ள micro economy தான் காப்பாற்ற வேண்டும்.

2. பொதுவாகவே, இந்தியா போன்ற vulnerable developing நாடுகளில், Savings மிக முக்கியம். உங்கள் medical emergency க்கு, ஆகும் செலவு 1- 2 வருட சேமிப்பை கோரி விடும். திருமணம் சொல்லவே தேவையில்லை. கல்விக்கான (பள்ளி, கல்லூரி) தேவையும் மிக அதிகம்.

3. எத்தனை பள்ளிகள் சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த தொகையை நேர்மையாக வசூலிக்கின்றன?? மருத்துவ சிகிச்சைக்கு உச்ச வரம்பு உள்ளதா?? இவற்றை நெறிப்படுத்தாமல், saving economy- ஐ Disrupt செய்தால், குடும்பம் என்ற அலகில் சிக்கல் ஏற்படும். மிடில் கிளாஸின் மேல் இந்த ஆபத்து நிறைய. அடுத்த தலைமுறைக்கு இன்னமும்.

4. சாதாரண மெஸ்லில் மீல்ஸ் 50 ரூபாய், பிரியாணி 70-80 ரூபாய். ஜூனியர் குப்பண்ணாவில் 160 + டேக்ஸ் = 200 வரும். உங்கள் பையில் இருந்து செல்லும் வகையில் 80 போகிறதா, 200 போகிறதா என்பதுதான் கணக்கு, அதாவது உங்கள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை. மேற்சொன்ன micro economy சேதாரமானால், நாள் ஒன்றிற்கு, மாதம் ஒன்றிற்கு செலவீனம் 2 -3 மடங்கு அதிகமாகும். சம்பளம் பெரிதாக ஏறாத நிலையில், உங்களை காபந்து செய்வது எது என யோசித்துப் பாருங்கள்.... 4 நாட்களாக கடும் நசிவுக்கு ஆளானதும் அதுவே.

-------------

Key note

சில இடங்களில் Cheque க்கையும் வாங்க மாட்டேன் என்கிறார்களாம். கேட்டால் Bounce ஆனால் என்ன செய்வது?? தெரியாத ஆளிடம் வாங்க மாட்டோம் என மறுக்கிறார்களாம். DD வேண்டுமானால் OK என்கிறார்களாம். So, Card இல்லாவிட்டால் நாம் இல்லை. உங்கள் கார்டு தொலைந்தால் நீங்கள் ஒரு பிச்சைக்காரன்.

எந்த ஒரு பொருளுக்கும் நீங்கள் கட்டும் VAT எவ்வளவு?? சர்வீஸ் டாக்ஸ் எவ்வளவு?? கார்டுக்கு 1.5% சார்ஜ் மொத்தம் எவ்வளவு?? Educational cess, krishi kalyan வரிகள் எவ்வளவு?? பெட்ரோல் மீதான வரி எவ்வளவு?? சினிமா தியேட்டர் டிக்கெட் விலையில் வரி எவ்வளவு?? இவையெல்லாம் virtual taxes....  நேரடியாக, 2.5 லட்சம் ஸ்லாபுக்கு மேல், 10%, 20%, 30% என குறைந்தது 75,000 வழித்துக் கொண்டு போகிறது... இது income tax... இது தவிர LPG க்குத் தரும் சப்சிடியும் கோவிந்தா.. யோசித்துப் பாருங்கள்... நீங்கள் இவ்வளவு கொடுத்தும், அரசாங்கம் பதிலுக்கு கல்வி, சுகாதாரம் எல்லாவற்றையும் தனியாருக்கு அளித்து, அவர்களுக்கும் நாம் உழைக்கிறோம்.

இப்படி சேர்த்த காசை, ஒர் உத்தரவில் பயன்படா வண்ணம் மாற்றும் "சர்வாதிகாரம்" எனக்கு உண்டு... 4,000 ரூபாய்க்கு சுமார் 100 கோடி மக்களை ( 25 கோடி மைனஸ் ) 3 மணி நேரம் போராட வைக்கும் சக்தி எனக்குண்டு... என்னும் நிலையில் எதோ ஒரு வல்லமை பொருந்திய அமைப்பு இருப்பது எவ்வளவு ஆபத்தானது என உணர்தல் அவசியம்.

Sellers ஐ கட்டுப்படுத்தாமல், buyers ஐ முடக்குவது தான் நடக்கிறது. எங்கே TTD ட்ரஸ்ட்டுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதோ?? எங்கே participatory note கரை புரள்கிறதோ??? எங்கே shell companies அடித்து நொறுக்குகிறதோ?? எங்கே அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் PSU க்கள் நீங்கள் சேர்த்த (வருடா வருடம் 1.5 லட்சம்) தொகையை வழித்து தருகிறதோ??? நாம் தியாகம் செய்ய வேண்டுமாம்... வாவ்...

இது குறித்த societo-political awareness ஒரளவாவது வளர வேண்டும், இதை தற்செயலாக பார்க்கும் பதின்பருவத்தினர் உணர வேண்டும் என்பதற்காகவே Nov.8 ல் இருந்து பதிந்து வருகிறேன். அடுத்த தலைமுறை அரசியல் பிரக்ஞையுடன் இருத்தல் அவசியம். அதுதான் என்னளவிலான Patriotism.

- தினேஷ்

No comments:

Post a Comment