sivasankaran saravanan
Via Facebook
2016-Nov-12
மோடி யின் நடவடிக்கை மீது இந்தளவுக்கு வெறுப்பு வரக் காரணம் என்ன??
முதலில் நாங்கள் யாரும் கறுப்புப் பணத்திற்கு ஆதரவானவர்கள் இல்லை என்பதை பக்தகோடி மரமண்டைகள் உணரவேண்டும். கறுப்புப் பணத்தை மீட்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே. இந்தியாவின் 90 சதவீத கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளிலும் தங்கமாகவும் முடங்கிக் கிடக்கிறது . அதையும் சேர்த்தே மீட்கவேண்டும் .
இரண்டாவது மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என எங்களுக்கென்ன ஆசையா? பதவிக்கு வந்த பிறகு பாகிஸ்தானுக்கு போ என்ற பேச்சு வந்தது எதிர்த்தோம். மாட்டுக்கறி அரசியல் வந்தது எதிர்த்தோம். மத்திய அரசுத் தேர்வுகளில் இந்தித் திணிப்பு வந்தது எதிர்த்தோம். நீட் வந்தது. எதிர்த்தோம். மோடி பாராட்டும்படியாக செய்தால் வரவேற்கமாட்டோமா? மீத்தேன் திட்டம் ரத்து என்பதை வரவேற்கத்தானே செய்தோம். நாளைக்கே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கட்டும். பாராட்டு விழாவே நடத்துகிறோம்.
பிறகு எதற்காக ரூபாய் நோட்டு விவகாரத்தில் இவ்வளவு எதிர்ப்பு??
மோடி அறிவித்த அன்றோ மறுநாளோ கூட இவ்வளவு எதிர்ப்பு இல்லை. கடந்த மூன்று நாட்களாகத்தான் இவ்வளவு கடும் எதிர்ப்பு. இவ்வளவு பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிற அரசு எவ்வளவு முன் யோசனை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்?! இதன் சாதக பாதக அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்திருக்கவேண்டும். ராத்திரி 7 மணிக்கு டிவியில் தோன்றி 12 மணியிலிருந்து நோட்டு செல்லாதுன்னு சொல்றாரு சரி. அதன் பிறகான நடவடிக்கைகள் என்ன? ஒரு எளிய உதாரணம் 2000 ரூபாய் நோட்டு. ஏடிஎம் களில் ஏன் பணம் உடனே தீர்ந்துவிடுகிறது? 2000 ரூபாய் நோட்டு இயந்திரத்தில் பொருந்தக்கூடியதாக இல்லை. சரி வங்கிகளிலாவது போதுமான கையிருப்பு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மக்களின் நிலைமை என்ன? கையில் பணம் உள்ளது. ஆனால் செலவு செய்ய முடியாது.
இதனால் மக்கள் ஆத்திரம் அடையத்தானே செய்வார்கள்? அப்படி இயல்பாய் கோபம் எழும்பட்சத்தில் பக்தாள் என்ன செய்ய வேண்டும்? வாய மூடிக்கிட்டு சும்மாயிருக்கனும். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல "ஏ டேஷ் விரோதிகளே, தேச நலனுக்காக கஷ்டப்பட மாட்டீங்களா? ரேஷன் அரிசி வாங்கி பொங்கி தின்ன வேண்டியது தானே? மோடி தான் சூப்பர் ஹீரோ, அவரை எதிர்க்கிறவன் ஆன்டி நேசனல் " என்று இஷ்டத்துக்கும் பேசினர். வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போன்ற இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டால் சரி பொறுமையா சகித்துத் தொலைப்போம் என்று இருந்தவர்களைக் கூட கோபமடைய செய்துவிட்டது.
எனக்கென்னவோ கேரளாவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் பேச்சில் சோமாலியா ஸ்கிரிப்ட் எழுதி தந்ததை போல, மனோகர் பாரிக்கரை முன்னிறுத்தி மோடி இமேஜை காலி பண்ணுவதற்காக ஆர்எஸ்எஸ் க்கு உள்ளேயே சிலர் இந்த விஷயத்தை மோடி கையில் கொடுத்திருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. கல்யாண வீடா இருந்தாலும் கருமாதி வீடா இருந்தாலும் தன்னோட செல்பி தான் பெரிய செல்பியா இருக்கனும் னு விரும்பற விளம்பர வெறியரான மோடி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இதை கையாண்டிருக்கிறார். விளைவு மோடி மீதான எதிர்ப்பலை பன்மடங்கு பெருகிவிட்டது!
No comments:
Post a Comment