அனுஷ்
Via Facebook
2016-Nov-28
மோடி அரசும் அதனுடன் இயங்கும் இந்த அதிகார அமைப்பும் ஒரே நேரத்தில் அடித்தட்டு மக்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகினறனர். வங்கி பரிவர்த்தனைகள் பற்றி தெரியாமல் இருப்பது மிகப் பெரிய பாவமாகவும் முட்டாள்தனத்தின் உச்சமாகவும் மக்களை நம்புபடி பிரச்சாரம் செய்கினறனர். எல்லாவற்றையும் மாற்றியமைக்கிறோம் என்கிற பெயரில் இதை பற்றி புரிதல் இல்லாத கோடான கோடி மக்களின் மீது வன்முறையாக தங்களின் அமைப்புக்குள் வரும்படி இழுக்கின்றனர்.
e- Governence, e -transations னை செயல்படுத்தும் முன்னால் எத்தனை சதவிகித மக்கள் அதனை பயன்படுத்துகினறனர், அதை பற்றிய புரிதலுடன் உள்ளனர் என தெரியாமல் ஒரே இரவில் எல்லோரையும் அதை நோக்கி நகர்த்துவது வன்முறை இல்லாமல் வேறென்ன.
அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் மக்களிடம் வலுக்கட்டாயமாக நீங்கள் இதனை பழகி கொள்ளுங்கள் எனச்சொல்ல அரசுக்கு என்ன உரிமை உள்ளது. என் தேவைக்காக நான் செயல்படுவதும் உங்கள் திட்டமிடலை நோக்கி என்னை இழுப்பதுற்குமான வித்தியாசம் பாரதூரமானது .
நம் பணத்தை வங்கி பெற்றுக் கொள்கிறது. பின் அதன் நம்பகத்தன்மையை நாம் கேள்வி கேட்பது தேசவிரோதம் என இந்த அமைப்பு சொல்கிறது. நாட்டில் எத்தனை அமைப்பு சாரா தொழிலார்கள், தினக் கூலிகள், இடப்பெயர்வு தொழிலார்கள் உள்ளனர் என சரியான கணக்கீடு அரசிடம் இல்லாத போது இவர்களுக்கு இத்திட்டத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை பற்றி யார் கணக்கீடுவது.
எல்லோரிடமும் கைபேசி உள்ளமையால் அது எப்படி நாட்டின் வளர்ச்சியுடன் ஒப்பிடமுடியாதோ அது போலவே எல்லோரையும் வங்கி பரிவர்த்தணைக்குள் கொண்டு வந்தால் கருப்பு பணத்தை ஒழித்து விடலாம் என எண்ணுவதும் ஒன்றுதான்.
இன்னும் 50 நாள் பொறுத்திருங்கள், 50 நாள் பொறுத்திருங்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள்.ஆனால் கடைசி வரை அந்த ஐம்பதாவது நாள் வரவே வராது என்று உங்களை போலவே நாங்களும் நன்கறிவோம்.
கருப்பு பணத்தை ஒழிப்பதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் அதனை வைத்திருப்பவர்கள் உங்கள் பாதுகாப்பில் இருப்பதனால் இதை ஒழிப்பேன் என்று நீங்கள் கூறும் இந்த நாடகத்தினை மக்கள் முன் நீண்ட நாட்கள் நடத்த முடியாது.
No comments:
Post a Comment