Saturday, November 12, 2016

ATM என்பது டேங்க்ல தண்ணி நிரப்புற மாதிரி பணத்தை அள்ளி போட்டு எடுக்குற இயந்திரமல்ல

Joe Milton

ATM என்பது டேங்க்ல தண்ணி நிரப்புற மாதிரி பணத்தை அள்ளி போட்டு எடுக்குற இயந்திரமல்ல .. ஒவ்வொரு நோட்டுக்கும் அதன் அளவுக்கேற்ப பெட்டி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் .. அதோடு அதன் மதிப்பை மென்பொருளில் ஏற்றம் செய்ய வேண்டும் . இவர்கள் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்ற போது முன்னரே இந்த மாற்றங்களை திட்டமிட்டு முடித்து விட்டார்கள் என நினைத்தேன் .. ஆனால் இப்போது இதற்கு இரண்டு வாரங்களாகலாம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளாராம் ..
இதிலிருந்து என்ன தெரிகிறது ? இவர்கள் எந்த வித திட்டமிடலும் இன்றி அள்ளித் தெளித்த கோலம் தான் இது .. பல விதமான ATM களில் இந்த Hardware , Software மாற்றங்கள் செய்து முடிக்க இவர்கள் சொல்லும் இரண்டு வாரத்துக்கு அதிகமாகவே ஆகலாம் .. அதுவரை நீங்கள் முனகாமல் இருங்கள் .. இல்லையென்றால் தேசபக்தர்கள் அறிவுரைகள் சொல்லியே உங்களை கொன்னுடுவான்கள்


No comments:

Post a Comment