Janakiraman Mohan
Via Facebook
2016-Nov-28
டியர் கூமுட்டைகளே,
*முதலில்,* வங்கி என்பது மக்களுக்கு சேவை செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. வங்கிக் கணக்கு வைத்திருப்பது என்னுடைய உரிமை. நீங்களோ, உங்கள் மோடியோ, ரிசர்வ் வங்கியோ, அரசாங்கமோ என்னை வங்கிக் கணக்கு தொடங்கச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. இப்போது கேஸ் மானியத்தை வங்கியில் தான் செலுத்துவோம் என்று நீங்கள் அடம்பிடிப்பதைப் போல, அரசின் சலுகைகளை அனுபவிக்க வங்கிக் கணக்கு கட்டாயம் என்று சொல்லலாம். அதுவே, எந்த அடிப்படியையில், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்று தெரியவில்லை..
மற்றபடி, வங்கியில் ஏன் கணக்கு இல்லை என்று என்னிடம் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை..
*இரண்டாவது,* என்னிடம் இருக்கும் பணத்தை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை சேமிப்பாகவோ, முதலீடாகவோ செய்ய நினைத்தால் என்னுடைய கடைசித் தேர்வாகத்தான் வங்கி இருக்கும்.. அதுவும் உடனடியாக எடுக்கக் கூடிய தேவை இருக்கும் அளவு பணத்தைத் தான் வங்கியில் போடுவேன்.. அதுவும் என் இஷ்டம். எனக்கு விருப்பமென்றால், கையில் ரொக்கமாகவே வைத்துக்கொள்வேன்.
*மூன்றாவது,* எனக்கு கையில் பணமாக வைத்து செலவு செய்வது தான் வசதி என்றால் அப்படித்தான் செலவு செய்வேன்.. gocashless, card பயன்படுத்துங்கள் என்று என்னை யாரும் கட்டாயபடுத்த முடியாது.
இதெல்லாம் ஜனநாயக நாடான இந்தியாவில் எனக்கு இருக்கும் உரிமைகள். நீங்கள் எந்த ஃபிளேவர் ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்று நான் கருத்து சொன்னால், எப்படி உங்களுக்கு கோபம் வருமோ, அதே மாதிரி தான் இந்த விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைத்து கருத்து சொல்லும்போது எனக்கும் கோபம் வரும்.
*உங்களுடைய பிரச்சினை என்ன?*
1. மோடி இப்படி யோசிக்காமல் அறிவித்து விட்டு, பணப்புழக்கம் இல்லாமல் நாடே எதிர்க்கும் வேளையில், சமாளிக்கத் தெரியாமல் இப்படி gocashless என்று கூவுகிறார். உடனே நீங்களும் கூவுகிறீர்கள். ஒவ்வொருவரும் சுயமாக சிந்திக்க தனித்தனியாக மூளை இருக்கிறது. கட்சித் தலைவர் என்பதற்காகவோ, நாட்டின் பிரதமர் என்பதற்காகவோ அவர் சிந்திப்பதை நீங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
2. நான் மட்டும் வரி கட்டுறேன். பாணிபூரி கடைக்காரன் கட்டுறது இல்லை. எல்லாம் cashless ஆகிட்டால் அவனும் கட்டித்தானே ஆகணும் என்கிற உங்கள் வயித்தெரிச்சல்.. அடுத்த மாதம் 1ஆம் தேதி, உங்களுக்கு சம்பளம் எவ்வளவு வரும் என்று உங்களால் சொல்ல முடியும். ஒரு டீக்கடைக் காரனால் சொல்ல முடியுமா? நாளை காலை மாஸ்டர் ஓடிட்டான் ன்னா, அடுத்த மாஸ்டர் கிடைக்கும் வரை வருமானம் இல்லை. LTA வில் உங்களைப் போல ஊர்சுத்த முடியுமா? சனி, ஞாயிறு கூட உழைத்தால் தான் வருமானம்.
முக்கியமாக முப்பது வருடம் உங்களால் தேய்த்துக் கொண்டு இதே வேலையில் உட்கார முடியும். முப்பது வருடம் இந்த மாதிரி சிறு, குறு தொழில் செய்து பிழைத்தவர்களை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம். இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். *உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அவர்களும் இங்கு இருப்பார்கள், இருக்க வேண்டும்.* அதுசரி, உங்களை பாணிபூரி கடை போடக் கூடாதுன்னு யார் சொன்னது, சும்மா ஒரு மாசம் ட்ரை பண்ணுங்களேன்..
எல்லாரும் இதே மாதிரி உங்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எவனிடமாவது நீங்கள் gocashless என்று ஆரம்பிக்கும்போது "மூடிட்டு போடா நாயே" என்றும் கூட பதிலளிக்கக் கூடும்.
No comments:
Post a Comment