Thursday, November 17, 2016

Peralivu

Don Asohk
via facebook
2016-11-17

நான் ஏன் முட்டாள்கள், மூடர்கள், மடையர்கள் என்ற வார்த்தைகளை மோடியின் செயலை ஆதரிப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறேன் என்பதற்கு ஒரு எளிய உதாரணம். "டெபிட் கார்ட் யூஸ் பண்ணுங்க. Go cashless. இப்பல்லாம் எல்லோர்ட்டயும் டெபிட் கார்டு இருக்கு," என்கிறார்கள். அதையொட்டி ஒரு சம்பவம்.

போன வாரம் redbusயில் ஒரு பஸ் டிக்கெட் புக் செய்தேன். Transaction fail ஆகிவிட்டது. ஆனால் 600ரூபாய் எடுத்துவிட்டார்கள். மீண்டும் முயற்சிசெய்த போது மீண்டும் Transaction fail ஆனது. ஆனால் மறுபடியும் 600ரூபாய் எடுத்துவிட்டார்கள். ஆக டிக்கெட் எதுவும் புக் செய்யாமலேயே ரெட்பஸ்க்கு எனது 1200ரூ போய்விட்டது. வழக்கமாக இந்தப் பணம் தானாகவே ஓரிரு நாட்களில் திரும்பிவிடும். ஆனால் வரவில்லை. ரெட்பஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அந்த ஆங்கில கணிக்குரல் சொல்லும் 1,8.6,7 என்ற வழித்தட எண்களை அமுக்கிய, இண்டியானா ஜோன்ஸ் போல ஒருவழியாக கஸ்டமர் கேர் அதிகாரிக்காக 30நிமிடம் காத்திருந்து பிடித்துவிட்டேன். அவர் 7நாட்களில் வந்துவிடும் என்றார். 8 நாட்கள் ஆகியும் வரவில்லை. மீண்டும் இண்டியானா ஜோன்ஸ் வேலை செய்து கேட்டால் இன்னொரு 7நாள் என்றார்கள். செம்ம்ம கடுப்பாகிவிட்டது. உயர் அதிகாரியிடம் லைனை கனக்ட் செய் என பலமுறை ஆங்கிலத்தில் சத்தம் போட்டவுடன் உயரதிகாரிக்கு கனக்ட் செய்தார்கள். அவரிடம் மீண்டும் ஆதி முதல் அந்தம் வரை விலக்கியபின், "நானே ரீஃபண்ட் procedure start பண்ணிட்டேன் சார். ரெண்டு நாள்ல காசு வந்துரும்," என்றார். கடுப்புடன் ஃபோனை வைத்துவிட்டு காசுக்காக காத்திருக்கிறேன்.

வங்கி கணக்கில் 90ரூபாய் இருந்தால் நண்பனிடம் 110ரூபாய் கைமாற்று வாங்கி வங்கியில் போட்டு, 200ரூபாயாக ஏடிஎம்யில் இருந்து எடுத்துவிட்டு, 110ரூபாய் கைமாற்றை நண்பனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, 90ரூபாயை செலவு செய்கின்றவர்கள்தான் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள். எனக்கு நடந்ததைப் போல, cashless transactionயில் அவர்கள் காசு ஒரு வாரம் மாட்டிக்கொண்டால் அவர்கள் செத்தே போவார்கள்.

நம்மூரில் 90% வாடிக்கையாளர் சேவை மையங்களில் இந்தியும், ஆங்கிலமும் தான். ஏ.டி.எம்களிலும் இதே நிலைதான். வாடிக்கையாளர் மையங்களுக்கு அழைத்தாலே 1 அமுக்குங்கள், 3 அமுக்குங்கள், 7 அமுக்குங்கள், 9 அமுக்குங்கள் என கணிக்குரல் எங்கெங்கோ இழுத்து சாவடிக்கும் என அஞ்சியே நான் பெரும்பாலும் ஃபோன் செய்வதில்லை. நன்றாக ஆங்கிலம் தெரிந்த எனக்கே, படித்த எனக்கே இந்த நிலைமை என்றால் எளியோர் என்ன செய்வார்கள்?

"தம்பி கொஞ்சம் பேசிக்கொடுங்க தம்பி," என வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்துவிட்டு தயங்கியபடியே ஃபோனை நீட்டும் எத்தனையோ எளிய மக்களை நான் பார்த்திருக்கிறேன். "தம்பி கொஞ்சம் காசு எடுத்துக்கொடுங்க தம்பி, தம்பி கொஞ்சம் ஃபார்ம் ஃபில் பண்ணிக்கொடுங்க தம்பி, இங்கிலிஷ்ல பேசுறாங்க என்னனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தம்பி... தம்பி... தம்பி... தம்பி..." என யாரோ ஒரு அம்மாவோ, அப்பாவோ, பெரியம்மாவோ, தாத்தாவோ பாட்டியோ கேட்கும்போதெல்லாம் பாவமாக இருக்கும். ரத்தம் கொதிக்கும். மக்கள் பேசும் மொழியில் சேவைகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படை அறிவில்லாத அரசு, தனியார்களை வலியுறுத்த துப்பில்லாத அரசு, எளிய மக்களை, படிக்காத மக்களை cashless ஆக போங்கள் என சொல்கிறது. சாப்பாட்டுக்கே வழி இல்லாத நாட்டில் ஜீரணத்திற்கு ஓமவாட்டர் ஒன்றுதான் கேடு.

நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். போகுமிடமெல்லாம் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் துக்ளக்கிடம் ஐஃபோன் ஒன்றைக் கொடுத்து ஒரே ஒரு ஃபோட்டோ எடுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். நான்கு நாட்கள் முக்கினாலும் முடியாது. இதுதான் தொழில்நுட்பத்தின் சிக்கல். நிலைமை இப்படி இருக்க, இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்காமல் காய்கறிக்காரர்கள் கார்டு மிஷின் வைத்துக்கொள்ள வேண்டும், கீரை விக்கிற பெண் Paytm வைத்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் பேசித்திரியும் படித்தவர்களை முட்டாள், மடையன், மூடன் என அழைக்காமல் எப்படி அழைப்பது? அடுத்தவனைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் தன்னை, தன் வாழ்கை முறையை, தன் தொழில்நுட்ப அறிவை மட்டுமே அளவுகோலாக வைத்து சமூகத்தின் தேவைகளை நிர்ணயிக்கும் இவர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, மனசாட்சியற்ற முட்டாள் மிருகங்கள்.

No comments:

Post a Comment