Friday, November 25, 2016

மீன்காரி, பூக்காரி


Nizamdeen Beer Mohd
Via Facebook
2016-Nov-15

*நியூஸ் 18 சேனலின் காலத்தின் குரல் விவாதத்தில் இசையரசு என்கிற ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர் பேசியதின் சாரம்:*

இந்த இந்தியச் சமூகம் என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் சமமானதல்ல. ஒரு சில சமூகங்களுக்கானது.

நீங்கள் பேசும்போது "மீன்காரி, பூக்காரி" என்று சொல்கிறீர்கள். அதையே நாங்கள் பேசும்போது "பூக்காரம்மா, மீன்காரம்மா" என்கிறோம்.

"பூக்காரி" என்பது உங்களது இந்தியா. "பூக்காரம்மா" என்பது எங்களது இந்தியா. தயவுசெய்து மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதையுடன் அழையுங்கள்.

க்ரிடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருப்பவர்களின் பார்வையிலிருந்து நீங்கள் இப்பிரச்சனையை அனுகுகிறீர்கள்.

அன்றாடம் கூலிவேலை செய்து பிழைக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் பார்வையிலிருந்து நாங்கள் எங்களின் வேதனையைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

எங்களை எப்போது புரிந்து கொள்வீர்கள்?

நாங்கள் அதலபாதாளத்தில் இருக்கிறோம். நீங்கள் ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருக்கிறீர்கள். இந்தப் பொருளாதார நெருக்கடிகளில் அதிகமாக பாதிக்கப்படுவது அடித்தட்டுக் குடும்பங்களில் வாழும் பெண்களே. அவர்களின் உணர்வுகளைப் பற்றி யாருமே பேசுவதும் இல்லை கவலைப் படுவதும் இல்லை.

நீங்கள் எங்களது அக்கவுன்ட்டில் பதினைந்து லட்சம் போடுவீர்களோ, பதினைந்தாயிரம் போடுவீர்களோ அல்லது பதினைந்து ரூபாய் போடுவீர்களோ தெரியாது. ஆனால் எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளி மட்டும் போடாதீர்கள்

No comments:

Post a Comment