Sunday, November 13, 2016

பேரழிவு 3

முகுந்தன் பாண்டுரங்கன்
Via Facebook
2016-Nov-12

500₹ நோட்டை இல்லாமல் செய்ய 5 100₹ நோட்டுகளை புழக்கத்தில் விட்டால் போதும் ஆனால் நமக்கு கிடைத்திருப்பதோ 2000₹ நோட்டு.

1000₹ நோட்டுகளுக்கு மாற்று இல்லை. அதற்கு ஈடாக புதிதாக 100₹ 50%, 500₹ 25%, 2000₹ 25%  இருந்தால் மட்டுமே இயல்பு நிலைக்கு சாத்தியம்.

குறைந்த பட்சம் 500₹ பழைய நோட்டுகளுக்கு சமமாக அல்லது மேலாக அச்சிடப்பட்டு இருப்பில் இருந்திருக்க வேண்டும் அதுவும் இல்லை நாட்கள் 4 கடந்துவிட்டது.

சில்லரை இல்லாமல் ஒரு நபர் நகர பேருந்தில் கூட பயணிக்க முடியாது என்ற நிலையில் நகரம் எத்தனை நாள் இருப்பு சில்லரை வைத்து இயங்க முடியும்.

தற்போது அனைத்து வங்கிகளும் Core banking மூலம் இயங்குவதால் Technology சார்ந்து இயங்கவேண்டிய நிர்ப்பந்தம். இயல்பாகவே பொதுத்துறை வங்கி மென்பொருள் இயங்குதலில் மெத்தனம்(Latency) இருக்கும். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் நாட்டின் மூலைமுடுக்களில் உள்ள அனைத்து கிளைகளும் அவர்களின் அதிகபட்ச உபயோகத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் தற்போதைய சூழலில் அனைத்து வங்கிகளின் மென்பொருள் கட்டமைப்பு (IT Infrastructure)  ஏற்கும் திறனுள்ளவையா    என்பது கேள்விக்குறி. இதுபற்றி என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என்பதும் கேள்விக்குறிதான்.

ஒரு வேளை ஏதேனும் அல்லது எல்லா வங்கிகளின் கட்டமைப்பு வீழுமாயின் அது விரைவில் நிவர்த்தி செய்ய முடியாத ஒன்றாகதான் இருக்கும். இது நிலமையை மேலும் சிக்கலாக்கும். அது சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கும்

திட்டமிடப்படாத அறிவிப்பின் விளைவுகளை பற்றி சிறிதும் அக்கறை இல்லாத வெற்று சமாதானங்களை மட்டுமே அரசு தரப்பு கூறிவருவது பெருத்த ஏமாற்றமே

மேற்கண்ட அனைத்து அவசியமான கூறுகளிலும் அரசு தவறி உள்ளதாகவே கருதுகிறேன். அது உண்மையாகும் பட்சத்தில் இன்றைய சிக்கலான நிலை தீர மாதங்கள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அதுவரை எல்லாரும் தியாகம் செய்யனும், தியானம் செய்யனும், ஜெய்ஹிந்த் கோஷம் போடனும் என்பது எவ்வளவு சாத்தியம் என்பது இன்னும் ஒரிரு நாட்களில் தெரியவரும்.

இந்த ஓரிரு நாள் முடக்கம் என்பது பலரது எஞ்சிய நாட்களின் முடக்கமாகவே தெரிகிறது. ஒவ்வொருவரின் இழப்பு மேற்கொண்டு எதையும் செய்ய துணியாமல் முடியாமல்  முடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த திட்டம் உரிய வல்லுனர்களைக் கொண்டு வகுக்கப்படாமல் ஒருசில தற்குறிகளின் அறிவுரைப்படி மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

No comments:

Post a Comment