Wednesday, November 16, 2016

பேரழிவு... 6 - மிச்ச பதுக்கல் பணமெல்லாம்


Chockalingam Murugaiyan
via Facebook
2016-Nov-16


கருப்பு பணம் அனைத்தும் மூட்டைக்கட்டி பணமாக வைக்கப்பட்டிருப்பதாக இங்கு பலர் பேசுகிறார்கள்.


ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரை நடைப்பெற்ற பல வருமான வரி சோதனைகளில் கைப்பட்ட பெற்ற வருமானத்திற்கு மீறிய பதுக்கல் சொத்து 7700 கோடி. இதில் பணமாக பதுக்கி வைக்கப்பட்ட தொகை வெறும் 408 கோடி மட்டுமே. அதாவது மொத்த பதுக்கல் பணத்தில் வெறும் 5%. 


இந்த வருட மொத்த வருமான வரி ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்ட தொகையில் இது 6% மட்டுமே. 


மிச்ச பதுக்கல் பணமெல்லாம் 
  • நிலங்களாகவும், 
  • வீடுகளாகவும், 
  • பினாமி பெயர் சொத்துக்களாகவும், 
  • பல நிறுவனங்களில் முதலீடுகளாகவும், 
  • பார்ட்டிசிப்பேட்டரி நோட்ஸ்காகவும், 
  • மொரிசியஸ் சிங்கப்பூர் கேய்மேன் தீவு, பிரிடிஷ் விர்ஜனிய தீவு போன்ற வரி இல்லாத தீவுகளின் மூலம் மீண்டும் வெள்ளையாக்கி கொண்டு வரப்பட்ட பணமாகவும், 
  • விலை குறைத்து விலை ஏற்றி பொருள் குறைத்து பொருள் கூட்டி செய்யப்படும் ஏற்றுமதி இறுக்குமதியாகவும், 
வெளிநாடுகளில் பதுக்கல் பணமாகவும் இருக்கிறது.


ஒரு சாமானிய ஏழையால் பணத்தை மட்டும் தான் வைத்திருக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் குறித்து ஒரு ஏழையோ, ஒரு நடுத்தர குடும்பத்து ஆளோ கனவு கூட காணமுடியாது .


அப்படியிருக்க எங்கிருந்து, யாரிடமிருந்து இந்த கள்ள பணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடங்கியிருக்க வேண்டும் ?

No comments:

Post a Comment