Monday, November 21, 2016

சிரிப்பா சிரித்தது... (1) SyamSundar

syamsundar
Via Facebook
2016-Nov-21

வடபழனி கோவிலுக்குப் பக்கத்திலேயே ஒரு டீக்கடை இருக்கிறது.காலையில் தினமும் 26ல் ஏறுவதற்கு முன்பு அங்குதான் டீ குடிப்பேன்.தோழர் மோடி கறுப்புப் பணத்தையெல்லாம் ஒழித்ததால் ஏற்பட்ட பொருளாதார பஞ்சத்தால் சில நாட்களாக டீ குடிக்கச் சில்லறை இல்லாமல் தவித்தேன்.இன்று காலை அந்த வழியாகப் போன போது ஏதோ நினைப்பில் டீயும், உப்பு தூவிய பிஸ்கட்டுகள் மூன்றும் சாப்பிட்டேன்.பர்சை திறந்தால் பழைய ஐநூறு ரூபாய் ஒன்றும் புதிய இரண்டாயிரம் ரூபாய் ஒன்றும் 26ல் ஏறுவதற்கு வைத்திருந்த பத்து ரூபாயும் இருந்தது.கடையில் இருந்த அக்காவிடம் காசு இல்லாத விஷயத்தைச் சொன்னேன்.

கவலைப்படாதப்பா என்ற அவர் உடனே ஸ்வைப் மிஷனை நீட்டி

"ஸ்வைப் பண்ணுறியா" என்றார்.

என்னிடம் அப்போது ஆபிஸ் ஐடிக் கார்டை தவிர வேறு எந்தக் கார்டும் இல்லாததால்."சாரிக்கா ஈவ்னிங் தரேன்" என்றேன்."என்னப்பா நீ காய்கறி கடைக்காரான்லாம் இப்ப இந்த மிசினோடதான் இருக்கான் நீ கார்டு இல்லங்கிற" என்றார்.குற்றவுணர்சியில் குமுறிப் போனேன்.தினமும் அந்தக் கடையில் பார்க்கும் அவருடைய பெண்ணைக் காணாததால் "உங்க பொண்ணு எங்கக்கா" என்றேன்.

அவதான் கல்யாணம் ஆகி அமேரிக்கா போயிட்டாளே என்றார்.எப்பயாச்சும் ஐபோன் 7ல ஸ்கைப்ல பேசிப்போம் என்றவர் "இந்த ஐநூறு, ஆயிரத்தை ஒழிச்சதும் நல்லதுதாம்பா......பீசாலாம் இப்ப ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிட்றோம்" என்றார்.என்ன இந்தக் காசிமேடுல மீன் வாங்குறப்பதான் சில பேரு கார்டு அக்சப்ட் பண்ண மாட்றான் என்றார்.
டீக்கடை வைத்திருக்கும் அக்கா ஒரே வாரத்தில் இவ்வளவு முன்னேறியது ஆச்சர்யமாக இருந்தது.போன மாதம்தான் அந்தக்காவிற்கு *120* போட்டு ரீசார்ஜ் செய்யவே கற்றுக்கொடுத்தேன்.

"ஆமாக்கா உங்க ஹஸ்பண்ட் எங்க" என்றேன்.அவர்தான் ஷேர்மார்கேட் ஷேர்மார்கேட்னு சுத்திட்டு இருக்காரே ஒரு வாரமா" என்றார்.
எனக்கு அவரைப் போனவாரம கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி வாங்கும் போது லுங்கியோடு பார்த்த ஞாபகம்.

கிளாசை கொடுக்கும் போது கையைப் பார்த்தேன்.சுவச் பாரத் என்ற பச்சைக் குத்தியிருந்தது, விசாரித்தேன்."அது ஏதோ நாட்டுக்காக என்னால முடிஞ்சது" என்றார்.அவர் பையன் ராகுல் பெயரையே மோடி என்று மாற்றிவிட்டாராம்.அவர்தான் எங்க கொலசாமி என்றவிட்டு "யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ" பாட்டைப் பாடினார்.ஆர்கஸம் அடைவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

"மூணு வேளையும் பீசா தானா" என்றேன்.

""எங்கப்பா இப்பலாம் ஒரு வேளைதான் சாப்பிட்றேன்"" என்றார்.

"ஏன்கா பொண்ணு அமேரிக்கா போன வருத்தமா" என்றேன்.

"அது இல்லப்பா ராணுவ வீரர்கள் எல்லாம் அங்க சாப்பிடாம இருக்குறப்ப நாம எப்படிச் சாப்பிட்றதுனு குற்ற உணர்ச்சிதான்....." என்று இழுத்தார்.இப்பலாம் அவங்களை நினைச்சுக் குளிக்கிறது கூட இல்லைப்பா என்றார்.

எனோ மனசு வலித்தது.ஒரு டீக்கடை நடத்தும் அக்காவிற்குத் தெரிந்தது எனக்குத் தெரியவில்லையே என்று.நாடு இவ்வளவு முன்னேறிய பின்பும் ஏன் எல்லோரும் மோடிக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.சரிக்கா என்று சொல்லிவிட்டு வரும்போது மனசு எதோ போல் இருந்தது.நாட்டுக்காக எதாவது செய்ய வேண்டும் போல் இருக்கிறது.இனி குளிக்கும் போதெல்லாம் குற்றவுணர்ச்சி வருமே என்றுதான் வருத்தமாக இருக்கிறது.இனி குளிக்க வேண்டாம் என்றிருக்கிறேன்.

# ஜெய்ஹிந்த் 
படித்ததில் சிரிப்பா சிரித்தது

No comments:

Post a Comment