வில்லவன்
Via Facebook
2016-Nov-16
இன்று ஸ்டேட் பேங்க் செய்த கடன் தள்ளுபடியில் மல்லையாவை விட மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த "ரமேஷ் சந்த் கார்க்" என்பவர் தான்..
K.S Oils Ltd என்ற எண்ணை நிறுவனத்தின் சேர்மன் இந்த ரமேஷ் சந்த் கார்க். 1985யில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 2008-2009 வருடத்தில் 3௦௦௦ கோடி அளவிற்கு வருமானத்தை ஈட்டி மிகப்பிரமாண்டமாக வளர்ந்தது. இந்தோனேசியாவில் 50000 ஏக்கரில் பனை விவசாயம் செய்து பாமாயில் தயாரித்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இருந்தது.. 2010 ஆண்டு நடந்த வருமானவரி சோதனை பொழுது வரி ஏய்ப்பு செய்தது கையும் களவுமாகப் பிடிக்கபட்டு 156 கோடி அபராதம் கட்டினார் ரமேஷ் சந்த் கார்க். 2011க்குப் பின் தொழிலில் அவருக்கு முழுவதும் இறங்கு முகம் தான். ஸ்டேட் பேங்கில் வாங்கிய கடனுக்கு அனைத்து எண்ணெய் ஆலைகளும் ஏலத்திற்கு வந்து நிற்கிறது.
இன்று அந்த ரமேஷ் சந்த் கார்க்கின் K.S Oils Ltd ஸ்டேட் பேங்கில் வாங்கிய 596 கோடி கடனையும் சேர்த்து தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.. இதில் என்ன கவனிக்கப்பட வேண்டியது என்கிறீர்களா?
ரமேஷ் சந்த் கார்க் மத்திய பிரதேச பிஜேபியின் வர்த்தகப் பிரிவு தலைவர். வருமானவரி ஏய்ப்பு செய்த அடுத்த வருடத்தில் தான் அவரை அம்மாநில வர்த்தகப் பிரிவு தலைவராக்கியது பாரதிய ஜனதா கட்சி.
வரிசையில் நின்று கையில் மை வைத்து உங்கள் பணத்தை வாங்கும் மக்களே இன்னமும் நம்புகிறீர்களா மோடியை?????
வில்லவன்
No comments:
Post a Comment