Tuesday, November 1, 2016

கார் டிக்கி மேல நின்னு தொழுகறது

ஹாரிஸ் ஜமாலி என்பவரின் இந்தப் பதிவு பெரிதும் கவர்ந்தது.

பயணிகளுக்கு இறைவன் பல சலுகைகளை வழங்கியிருக்கும் போது சிலர் செய்யும் கேலிக்கூத்தான இறைவழிபாட்டை  மிகச் சரியாகவே சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளார்.

நல்ல பதிவு.
-சிராஜுல்ஹஸன்

Haris Jamaly
வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ அனுப்பி இருந்தார்கள் .

அதில் பெரிய ஜுப்பா தாடி வைத்த சிலர் ரெயில்வே நிலையத்தில் தொழுது கொண்டிருக்கிறார்கள் .

மின் கம்பத்திற்கு முன் நின்று ஒருவர் தொழவைக்க பின்னால் 15 பேர் வரை ஜமாஅத்துடன் நின்று தொழுகிறார்கள் ..

அவர்களுக்கு அருகிலேயே அவர்கள் செல்லவிருக்கும் train னும் தயாராக நிற்கிறது ...

ஒரு சில நிமிடத்தில் இரயில் மெதுவாக நகர பின்னால் நின்று தொழுத ஒருவர் தொழுகையை விட்டுவிட்டு ஓடுகிறார் .

அவரை பார்த்து அடுத்தவர்களும் ஒவ்வொருவராக ஓடுகிறார்கள்

பொறுமையாக தொழ வைத்துக்கொண்டிருந்தவர் அவசர கதியில் குனிந்து நிமிர்ந்து எழுந்து ஸலாம் கொடுத்து ஓடுகிறார் ..

இப்படி கேலித்தனமாக இறை வணக்கம் முடிவடைகிறது ...

இரயிலுக்கு செல்லவிருப்பவர்களுக்கு அது எதனை மணிக்கு புறப்படும் என்று  தெரியாதா?  கண்டிப்பாக தெரிந்திருக்கும் .

அப்படி தெரிந்திருந்தும் எதற்க்காக அவசர கதியில் கேலியாக இறை வணக்கத்தை நிறை வேற்ற வேண்டும் ??

அல்லது பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு சில சலுகைகள் இருக்கிறது . அவர்கள் இரயில் பெட்டிக்குள் கூட நின்று பொறுமையாக தொழுதிருக்கலாம் .

அதிலும் ஒருவர் செருப்பை அணிந்துகொண்டு ஓடும்போது கடைசி பெட்டி அவரை கடந்துவிட்டது ..

சிலர் ஏறி விட்டார்கள் சிலர் முண்டியடித்து கம்பியை பிடிக்கும் சாகசத்தை செய்துகொண்டிருந்தார்கள் .

அவர்கள் இளைஞர்கள் கூட அல்ல .வயதானவர்கள் .

இப்படி அவசர கதியில் அமல்கள் செய்ய வேண்டுமா ???

இஸ்லாம் சில சலுகைகளை வழங்கிய பின் அந்த சலுகைகளை பயன்படுத்தலாமே ??

அமல்கள் வணக்கங்கள் இறைவனுக்காகத்தானே .அந்த இறைவனே சலுகைகளை கொடுக்கும்போது பொறுமையாக வணங்கினால் என்ன ??

மரத்து மேல நின்னு தொழுகறது ...

சுத்தி தண்ணி ஓடும்போது நடுவில இருக்கற பாறை மேல நின்னு தொழுகறது ...

நடு ரோட்ல மக்களுக்கு இடையூறாக நின்னு தொழுகறது ....

கார் டிக்கி மேல நின்னு தொழுகறது ..

இப்படிலாம் தொழுது அத முகநூல்ல வாட்ஸ்அப்ல போட்டு அதுக்கு ஆயிரம் ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹு அக்பர் வேற ..

இவங்களலாம் பார்த்து ஒண்ணே ஒன்னுதான் கேட்க தோனுது ...

நீங்கலாம் எப்ப திருந்த போறீங்க ?

No comments:

Post a Comment