Friday, November 25, 2016

இதய மாற்று அறுவை சிகிச்சை

Akila ramakrishnan
Via Facebook
2016-Nov-27

இதய மாற்று அறு(சு)வை சிகிச்சைக்கு ஒருத்தர ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு
போனாங்கலாம்.

அங்க வந்த டாக்டர் பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காம கத்திய எடுத்து நெஞ்சை அறுத்துட்டாராம்.

பேஷண்ட் ஐயோ உயிர் போகுதேன்னு கதறுனாராம்.

டாக்டர் சொன்னாராம் கொஞ்சம் பொறுத்துக்கோங்க உங்க உடல் நலத்துக்காக தான் ஆபரேஷன் செய்யுறேன்னு.

தலையெழுத்துனு பேஷண்ட்டும் பல்ல கடிச்சிகிட்டு கொஞ்ச நேரம் பொறுத்துகிட்டாராம்.

இதயத்தை வெளிய எடுத்துட்டு டாக்டர்
சொன்னாராம் "மாற்று இதயம்
சொல்லிருக்கேன், கிடைத்தவுடன்
பொறுத்திடுறேன்னு"

பேஷண்ட் பதட்டமாய் "அறிவு
கெட்டதனமா இப்படி பண்ணிட்டீங்களே
டாக்டர், எல்லாம் ரெடி பண்ணிட்டு
தானே ஆபரேஷன் பண்ணிருக்கணும்,
விட்டு தொலைங்க எவ்ளோ நேரம்
ஆகும்னுனாவது சொல்லுங்க"
என்றாராம்.

"வெறும் அம்பது நாள்
பொறுத்துக்கோங்க, இதயம்
கிடைச்சிரும்.. அப்படி கிடைக்காட்டி
என்னை தெருவுல நிப்பாட்டி கேள்வி
கேளுங்கன்னு"  - நா தழுதழுக்க
சொன்னாராம் டாக்டர்...

No comments:

Post a Comment