Babu Pk
Via Facebook
2016-Nov-01
ஒரு கேள்வி கேட்கிறேன். கோபப்படாம யாராச்சும் பதில் சொல்லுங்க.....
பத்து அவதாரங்குறது கீழ சொல்லப்பட்டிருக்கும் வரிசையில் நிகழ்கின்றன.
1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமண அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. ராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்
இதுல மூணாவது அவதார காலத்துல இரண்யாட்சன்ங்குற அசுரன் பூமியை... மன்னிச்சுக்குங்க... பூமாதேவியை கடலுக்குள்ள ஒளிச்சு வச்சான். அதை விஷ்ணு வராக அவதாரம் எடுத்துப் போய் கடலுக்குள்ள இருந்து மீட்டு எடுத்துக் கொண்டு வந்தார். அதற்குப் பின் ஆயிரம் வருடங்கள் அந்த அசுரனோடு போரிட்டு வென்றார். அப்பொழுதுதான் அந்தப் பன்றி அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் ஒரு குழந்தை பிறக்கின்றது. அதுவும் அசுரனாக இருக்கிறது.
அது பூமியில இருக்குறவங்களை மிகக் கொடுமைப்படுத்தி, பூமியை ஒரு நரகத்தைப் போல மாத்தினதால அவனுக்கு நரகாசுரன்னு பெயர் வந்துச்சாம். பிறந்தவுடனே என்ன பெயர் வச்சாங்கன்னுலாம் தெரியாது.
கவனிங்க... மிருக உருவத்திற்கும் பூமிங்குற ஒரு பொருளுக்கும் குழந்தை பிறக்கின்றது. அது மூன்றாவதாக ஒரு வகையினனாகப் பிறக்குது. இதெல்லாம் கூட தெய்வச் செயல்னு சொல்லி விட்டுறலாம்.
ஆனா, 3வது அவதாரத்துல பிறந்த ஒரு அரக்கனை.... அடுத்தடுத்து எடுத்த அவதாரத்துல எல்லாம் அழிக்காம விட்டுட்டு, 9வது அவதாரத்துலதான் அழிக்கிறாரு.
இடைப்பட்ட அவதாரங்களோட கண்ணுக்கு இந்த அசுரனோட கொடுமைகள் எல்லாம் தெரியலையாமா?
இதாங்க கேள்வி. அவ்ளோதான்.
Courtesy: Babu Pk
No comments:
Post a Comment