Saturday, November 12, 2016

அப்புறம் 750 மில்லியன் உழைக்கின்ற இந்தியனுங்க மண்டையில இருக்கிற மசுரை புடுங்கலாம்!!

Narain Rajagopalan
Via Facebook
2016-Nov-12

கறுப்புப் பணமென்பது வேலைக்கார முனியம்மாவிடமும், விவசாயம் செய்யும் ஆறுமுகத்திடமும், கிழிஞ்சது கிழியாதது தைக்கும் சர்புதீன் பாயிடமும், பேக்கரியோ, நர்சரியோ நடத்தும் ஜோசப்பிடமிருந்தும், மின்சார வாரியத்தில் பியுஸ்  பிடுங்கும் வேலை செய்யும் வேல்ராஜிடமும், நான்காவது ரெஜிமெண்டில் கூர்க்காவாக இருக்கும் ராஜுவிடமும், ஞாயிற்றுக் கிழமை பெரிய பீஸ் போடும் சுல்தானிடமும், சர்ச் வாசலில் ஞாயிறு மாஸ் முடிந்ததும் விற்க தோதாக பொம்மை கடை பரப்பி வைத்திருக்கும் அந்தோணியிடமும் இருக்கும் 500/1000 நோட்டுக்களை வலுக்கட்டாயமாக பிடுங்குவதின் மூலமே சுத்தமான இந்தியா உருவாகுமென்றால், அது இந்த 750 மில்லியன் பனாதை இந்தியர்களை ஏறி மெறித்து செய்ய வேண்டியதே. அது அவசியமானதும் கூட.

இவர்கள் அத்தனைப் பேரும் அரசாங்கத்தினை ஏமாற்றி, பதுக்கி வைத்திருக்கும் பணமெல்லாம் இப்போது வெளியே வருகிறது. எவ்வளவு மோசமான தேசத்துரோகிகள் இவர்கள். இந்தியாவை வேறெப்படி சுத்தப்படுத்துவது. [இந்த மாதிரி ஏற்கனவே நீங்கள் அறிவித்த ஸ்வச் பாரத் திட்டம் ”அதி தீவிரமாக செயல் பட்டதால்” தான் டெல்லியில் காற்றே மாசானது என்கிறான் கோவாலு]

நாலே படம் நடித்த சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கியது சர்ஃப் எக்ஸெலால் சுத்தப்படுத்தப்பட்ட 33% வரி கட்டிய பணமென்றும், போன வருடம் கவுன்சிலரானவர் மஹிந்திரா ஸைலோவில் போவது கூட முழுமையான வருமானவரி காண்பித்து எடுத்தது என்றும், 2014-இல் நீங்கள் ஒரே நாளைக்கு மூன்று இடங்களில் பிரச்சாரக் கூட்டம் போக பயன்படுத்திய தனியார் ஜெட்டுகள், உங்களுடைய India Inc நண்பர்கள் எல்லா விதி முறைகளையும் பின் தொடர்ந்து ஒரு பைசா கறுப்புப் பணமில்லாமல் வாங்கியதாக நான் நம்பாத சாமி சத்தியமாக நம்புகிறேன்.

ஆனால் பாருங்கள் Mr. பிரதமர்வாள்,

இந்தியாவின் டாப் 10 நிறுவனங்கள் தான் வங்கிகளையும், மக்களையும், அரசையும் NPA கியுவில் நிற்க வைத்திருக்கின்றன. அவர்கள் ஹாயாக போர்ட் ரூமில் இருக்கிறார்கள். மேலே நான் லிஸ்ட் போட்ட அயோக்கியர்கள் வேகாத வெய்யில் திருப்பதி தரிசன கியுப் போல நிற்கிறார்கள்.

ஒரு வேளை உங்கள் நண்பர்களின் NPAவினை நீங்கள் மறந்துப் போய் இருந்தால் நான் தருகிறேன். 2015-ல் கிரெடிட் சுஸே (Credit Suisse) வால் கொடுக்கப்பட்ட லிஸ்டிது.

1 ) ரிலையன்ஸ் குழுமம் (அனில் அம்பானி) - 1,25,000 கோடிகள்
2 ) வேதாந்தா குழுமம் - 1,03,000 கோடிகள்
3 ) எஸ்ஸார் குழுமம் - 1,01,000 கோடிகள்
4 ) அதானி குழுமம் - 96,031 கோடிகள் (உங்களுடைய செல்லப் பிள்ளை)
5 ) ஜே.பி குழுமம் - 75,163 கோடிகள்
6 ) ஜே.எஸ்.டபிள்யு (ஜிண்டால்) - 58,171 கோடிகள்
7 ) ஜி.எம்.ஆர் குழுமம் - 47,976 கோடிகள்
8 ) லாண்கோ குழுமம் - 47,102 கோடிகள்
9 ) வீடியோகான் குழுமம் - 45,405 கோடிகள்
10 ) ஜி.வி.கே குழுமம் - 33,933 கோடிகள்

கூட்டினால் மொத்தம் 7,32,781 கோடிகள் வருகிறது. நான் கூட தவறாய் வெறும் 6,00,000 கோடிகள் என்று சொல்லிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் மோடிஜி.

USD@66 என்றக் கணக்கில் போட்டால் $111 பில்லியன்கள் வருகிறது. 111 என்பது சராசரி இந்தியர்களுக்கு போடப்பட்ட நாமம் என்று நீங்கள் சிம்பாலிக்காக சொல்லியிருப்பதின் நுட்பத்தினைப் பார்த்து என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

முதல்ல இதை சிஸ்டத்துக்குள்ள கொண்டு வாங்க, அப்புறம் 750 மில்லியன் உழைக்கின்ற இந்தியனுங்க மண்டையில இருக்கிற மசுரை புடுங்கலாம்!!

No comments:

Post a Comment