Friday, April 14, 2017

பெண்களால் அவ்வளவு சுலபமாக கலாச்சாரத்தை, மதநம்பிக்கைகளையோ கேள்வி கேட்டு, இது எனக்கு வேண்டாம் என abandon செய்யவோ முடியாது

பகிர்வு பதிவு எழுதியவர்: வித்யா விஜயராகவன்

என்ன மயிர் புத்தாண்டுடா என ஆண்கள் இங்கே கூவிக்கொண்டிருக்க, பெரும்பாலான பெண்கள் விளக்கு, சாமி படம், தட்டில் அடுக்கி வைத்த கனிகள்,ரங்கோலி என ஒவ்வொன்றாக aesthetically appealing angleகளில் புகைப்படம் எடுத்து 'ஹேப்பி விஷு' 'ஹேப்பி டமில் நியூ இயர்' என என் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவரவர் belief system அவரவர்க்கு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், social mediaவில் பேசும் social justice, rational thinking, Hindi/Sanskrit imposition பற்றி எல்லாம் வீட்டில் யாரும் பேசுவதில்லை . பெண்கள் இவற்றைப் பற்றியெல்லாம் அதிகம் பேசுவதில்லை/பேசவிடுவதில்லை. மீறி பேசினால் அவை வாகை சூட வா படத்தில் 'நீ என்ன புலியா ' என முட்ட வரும் ஆட்டை நிப்பாட்டி விமல் கேள்வி கேட்பார், அதே தொனியில் , 'feministஆ நீயி?' என கேட்டு அடக்கி விடுவார்கள். இத்தனை வருடங்களாக பின்பற்றி வந்த belief systemகளை forego செய்வது ஆண்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் ஆனால்,

1) பெண்களால் அவ்வளவு சுலபமாக கலாச்சாரத்தை, மதநம்பிக்கைகளையோ கேள்வி கேட்டு, இது எனக்கு வேண்டாம் என abandon செய்யவோ முடியாது

2)ஒரு ஆண் இந்த நம்பிக்கைகளை social mediaவில் abuse செய்வது போல வீட்டிலும் 'என்ன மான்னாவுக்கு இத செய்யணும்' என கடந்து விடக்கூடும் ஆனால் அவற்றைப் பெண்கள் சட்டை செய்யாமல் திரும்பவும் தான் பின்பற்றுவதைப் பின்பற்றி, அவற்றை தன் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதை பார்க்கலாம். So whatever we follow without questioning are essentially passed on by our mothers and grandmothers.

3)பெண்கள் சமூக நீதி பேசாமல், மதங்களின் மூட நம்பிக்கைகளை இனங்கண்டு அவற்றை வெறுத்து ஒதுக்காமல் இருக்கும் வரையிலும் ஆண்டாண்டு காலமாக பின்பற்றுவதை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கப் போகின்றோம் என்பதையும் எப்போது உணரப் போகிறோம்?

4)நாம் தவறு என கருதும் எல்லாவற்றையும் கலாய்த்தும், abuse செய்தும் மட்டும் கடந்து போகின்றோம் ஆனால் அவை ஏன் தவறு, ஏன் நமக்கு வேண்டாம் என்பதைப் பற்றியும் சிறிதளவேனும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ,கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தாலேயொழிய இவை எல்லாருக்கும் சென்று சேராது, நாம் மட்டுமே அம்மணமாக சுற்றித் திரிபவர்களின் ஊரில் கோவணம் கட்டிய முட்டாளாக வாழ்ந்து மடிவோம், without our point ever being understood by the people who really need to be educated.

- வித்யா விஜயராகவன்

No comments:

Post a Comment