Saturday, April 1, 2017

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.

இனி யாகூப் மேமனைப் பற்றிய நிறைய
செய்திகள் வரும். இப்போது இந்தத்
தூக்கினை ஆதரிப்பவர்களில் ஒருசிலர்கூட
ஒருவேளை இவரை தூக்கிலிட்டது
தவறோ என்றுகூட நினைக்கக்கூடும்.

சில நீதிபதிகள், சில விசாரணை
அதிகாரிகள் இந்தத் தூக்கை
தவிர்த்திருக்கலாம் என்று
கருத்துசொல்வார்கள். சில
அரசியல்வாதிகள் ஏன் அவசர
அவசரமாக அரசு இவரைத்
தூக்கிலிட்டது என்று பேசுவார்கள்.

இது இந்து-முஸ்லீம் பிளவை
அதிகரித்துவிட்டது அல்லது
ஆறிய புண்ணை கிளறவிட்டது
என்று தலையங்கங்கள் எழுதப்படலாம்.

ஆனால் இந்த ஒரு தண்டனையைப்
பொறுத்தவரை நிறைவேற்றிய
பிறகு மறு பரிசீலனைக்கு வாய்ப்பே இல்லை.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக
நூற்றுக்கணக்கான "மதக்கலவரங்களில்"
ஆயிரக்கணக்காண முஸ்லீம்களையும்
சீக்கியர்களையும் கொன்றவர்களுக்கு
இந்த நாட்டில் ஆட்சி அதிகாரம்
கிடைக்கிறது. அப்சல்குருவுக்கும் யாகூப்
மேமனுக்கும் மட்டும் தூக்கு கிடைக்கிறது.

என்னவோ இனிதான் இந்தியா
இந்துத்துவ நாடாக ஆகவேண்டுமாம்.
இப்போது மட்டும் என்ன வாழ்கிறது?

இன்றும் இந்த வாரம் முழுக்கவும்
இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் இப்போது
தங்கள் தேசபக்தியை நிரூபிப்பதற்காக
படாதபாடு படவேண்டியிருக்கும்.

இந்த பாரபட்சமான நீதித்துறையை
ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று
அவர்கள் பேசவேண்டியிருக்கும்.
"யாகூப் மேமன்களுக்கு ஒரு நீதி
சங்கராச்சாரி, மோடிகளுக்கு வேறு
ஒரு நீதியா" என்று அவர்களில் ஒருவர்
எதிர்க்கேள்வி கேட்டால் அக்கணமே
யாகூப் மேமன் என்கிற தீவிரவாதியின்
ஆதரவாளர் ஆகிவிடுவார்.

குறறம்செய்தவர்களை எப்படி எதிர்
கொள்ளவேண்டும் ஒரு சமூகம்? பழிக்குப் பழிவாங்கியா?

1999 இல் பாதிரியார் கிரகாம் ஸ்டேன்சும்
அவரது பத்து வயது மகன் பிலிப்பும்
ஆறு வயது மகன் திமோத்தியும் இந்துத்துவ
அமைப்பான பஜ்ரங்தளைச் சேர்ந்த தாராசிங்கால்
உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.
பாதிரியார் அங்கே கிறிஸ்துவத்தைப் பரப்பவே
வந்தார் என்றும் ஆண்களுக்கு மாட்டுக்கறியையும்
பெண்களுக்கு பிராவையும் சானிட்டரி
டவல்களையும் கொடுத்து பழங்குடி
மக்களின் கலாச்சாரத்தை சீரழித்தார்
என்றும்கூறி அந்தத் கொலையைச் செய்ததாக
தாராசிங்கோடு அந்த படுபாதகத்தில் ஈடுபட்ட
மகேந்திர ஹெம்ரான் என்கிற ஆர்எஸ்எஸ்காரன்
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரி்ககைக்கு
அளித்த பேட்டியை நாம் மறந்திருப்போம்.

அந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் விசாரண
முடிந்து தாரா சிங்குக்கு தூக்குத்தண்டனை
விதிக்கிறது. ஆனால் மேல்முறையீட்டில்
2011 இல் ஒரிசா உயர்நீதிமன்றம்
அவருக்கான தூக்கினை குறைத்து,.
அதை ஆயுள் தண்டனையாக மாற்றுகிறது.

அ்ப்போது உயிரோடு கொல்லப்பட்ட
பாதிரியாரின் மனைவியும் அந்த இரு
குழந்தைகளை மதவெறி தீக்கு பலி
கொடுத்தவருமான தாயுமான கிளாடிஸ்
ஸ்டேன்ஸ் அரசு ஆணையத்துக்கு முன்
கொடுத்த வாக்குமூலத்தில் என்ன
சொல்லியிருந்தார் தெரியுமா?

" ... ஏன் கிராகம் ஏன் கொல்லப்பட்டார்,
1999 ஜனவரி 22/23 இரவில் அவரைக்
கொன்றவர்கள் அப்படி காட்டுமிராண்டித்தனமாக
நடந்துகொண்டார்களே அதற்கு என்னதான்
காரணம் என்று எனக்கு அவ்வப்போது
கேள்வியெழுகிறது. எனது கணவர் கிரகாமின்,
என் இரு குழந்தைகளின் மரணத்துக்கு
காரணமாக இருந்தவர்களைத் தண்டிப்பது
என்பது பற்றி நான் பெரிதும் சிந்திக்கவில்லை.
ஆனால் அவர்கள் மனம் வருந்தவேண்டும்
என்றும் அவர்களை சீர்திருத்தவேண்டும்
என்பதே என் ஆசையும் நம்பிக்கையுமாகும்."

ஒரு காலத்தில் துப்பாக்கி முறையில்
மதமாற்றங்களில் ஈடுபட்டவர்கள்தான்
கிறிஸ்துவ மத அமைப்பினர். ஆனால்
காலம் அவர்களை மாற்றியிருக்கிறது.

இந்திய ஆட்சியாளர்களையும் (அதைப் போலவே
மேற்கு ஆசியாவின் தலைவெட்டிகளையும்)
காலம் இன்னும் மாற்றவில்லை.

இந்திய "தேச பக்தர்கள்" தங்களை
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டுப்
பார்த்துக் கொள்கிறார்களே ஒழிய, கிளாடிஸ்
ஸ்டேன்ஸுடன் அல்ல.

பிரணாப் முகர்ஜி போன்ற கடைந்தெடுத்த
ஒரு மனுவாதி குடியரசுத்தலைவராகவும்
குஜராத் கலவரத்துக்கு காரணமாக இருந்து
அதன் "பலன்களையும்" அனுபவித்துவரும்
மோடி தலைமை அமைச்சராகவும் உள்ள
ஒரு நாட்டில், நாம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

மும்பை குண்டுவெடிப்பில் சி்க்கி
இறந்தவர்களின் குடும்பங்கள் வாழும்
வீடுகளுக்கு தொலைக்காட்சி காமிராக்கள்
படையெடுக்கும் முன்பு, அநேகமாக அந்த
சாதாரண மக்கள் இந்த பச்சைப் படுகொலையை
மனமார ஏற்றிருப்பார்கள் என்று
நம்பமுடியவில்லை. ஆனால் காமிராவுக்கு
முன்பு அவர்கள் என்ன பேசுவார்கள்
என்று தெரியாது.

-Aazhi Senthil Nathan

No comments:

Post a Comment