நான்கு ஆண்டுகள் அயல்நாட்டில் படித்திருக்கிறேன். படிக்கும் காலத்தில் சில மதுவிடுதிகளில் பகுதிநேர வேலை. சரக்கு ஊற்றிக்கொடுப்பது மட்டுமன்றி Housekeeping வேலைகளையும் பார்த்திருக்கிறேன். அயல்தேசம் வரும் இந்தியர்களிடம் ( மாணவர்கள் ) ஒரு விசேஷ குணமுண்டு, வந்த புதிதில் கட்டுக்கோப்பாக கொஞ்ச நாட்கள் இருக்கும் மாணவர்கள் பின்னர் திமுதிமுவென படையெடுப்பது Pub/bar/ Discotheque போன்ற இடங்களுக்கு . Genuine குடிகாரர்கள் அமைதியாக குடித்துக்கொண்டு இருப்பார்கள். பெண்களிடம் தனது ப்ராதபங்களைக் காட்ட சில கோமாளிகள் ஒன்றையணா பீர் வாங்கிக்கொண்டு " ஹாய் ...யு ஆர் நைஸ் .. " மாதிரி மொக்கை டயலாக்குடன் அங்கே ஆடிக்கொண்டிருக்கும் / குடித்துக்கொண்டிருக்கும் பெண்களிடம் சென்று Flirt செய்ய முயன்று தோற்றுக்கொண்டிருப்பார்கள். பல நேரங்களில் அந்த பெண்களின் காதலர்களின் கைகளால் வாய் உடைக்கப்பட்டு ரெட்டர் ஆப் தி டிராகன் என்று வெத்தலைப்பாக்கு வாங்கிக்கொண்டு திரும்புவார்கள்.
வெளிநாடு என்றாலே அங்கே Open sex தான் என்ற எண்ணத்துடன் சென்று அங்கே பெண்களிடம் அசிங்கப்படும் இந்தியர்களை அநேகமாக எல்லா மதுவிடுதியிலும் காண இயலும். அதுமட்டுமன்றி பே என்று வெறித்துப்பார்க்கும் இந்தியர்கள் குறித்து அதிகமான நக்கல்களை வெள்ளையர்கள் விடுவதுண்டு.
இங்கே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , காமராஜ் பல்கலைக்கழகம் இத்யாதி இத்யாதி பல்கலைக்கழகங்களில் ஏராளமான ஆப்பிரிக்கர்கள் படிக்கிறார்கள். குடி, சத்தமான மியுசிக், மிஞ்சி மிஞ்சிப் போனால் சில கேசுகள் டோப்பு அடிக்கும். அதைத்தாண்டி சில்மிஷங்கள் எதுவும் பெரிதாக செய்வதில்லை. எனக்கு தெரிந்தவரை ரோட்டில் போகும் பெண்ணிடமோ அல்லது குடித்துக்கொண்டிருக்கும் பெண்ணிடமோ வந்து "வரியா ? " என்று எந்த ஆப்பிரிக்கரும் கேட்டதில்லை.
அயல்தேசத்திற்கு படிக்கப் போகும் இந்திய மாணவர்கள் பலரிடம் இருக்கும் நாக்கை தொங்கப் போடும் புத்தி , தறிகெட்டு ஆட்டம் போடுதல் இதெல்லாம் ஆப்பிரிக்கர்களிடம் குறைவு.
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் தாக்கப்பட்டபோது ஏகோபித்த கண்டனங்கள் எழுப்பிய நாடானது தான்சானியா நாட்டுப் பெண்ணை பெங்களூருவில் துகில் உரித்து தாக்கியிருப்பதற்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறது என்று தெரியவில்லை. சூடான் நாட்டுக்காரன் ஏற்படுத்திய விபத்துக்கு , சம்பந்தமே இல்லாமல் அரைமணி நேரம் கழித்து அவ்விடத்துக்கு வந்த பெண்ணைத் தாக்குவது எவ்வித மாண்பு என்றும் புரியவில்லை. இதன் உச்சக்கட்டமாக கர்னாடக அமைச்சர் ஒருவர் சூடான்காரன் விபத்து ஏற்படுதியிருக்காவிட்டால் தான்சானியா நாட்டுப் பெண்ணுக்கு இப்படி நேர்ந்திருக்காது என்று முத்து உதிர்த்திருக்கிறார்.
Brasier கொஞ்சம் விலகினாலும் பரபரவென சாரிசெய்துகொள்ளும் அதே நாட்டில், பாரத "மாதா " என்றும் , நதிகளுக்கு எல்லாம் மயிருக்காக பெண்பால் பெயர் சூட்டும் நாட்டில் தான் தான்சானியா பெண் நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறார். ஒரு கும்பல் அவரது காரை எரித்திருக்கிறது.
நமக்கெல்லாம் இனி என்ன தார்மீகம் இருக்கிறது ? வெளிநாட்டில் இனி யாராவது அவமதிக்கப்பட்டால் எந்த மூஞ்சை வைத்து கேள்வி எழுப்ப இயலும் ?
சில வருடங்கள் முன்பு இங்கே சுற்றுலா வரவே ஐரோப்பியர்கள் அஞ்சும் வண்ணம் வன்புணர்ச்சி செய்து மகிழ்ந்தார்கள் இந்தியர்கள். இந்தியாவின் மானம் வண்டி வண்டியாக கப்பலேறியது.
அயல்நாட்டில் இருந்த ஒரு இந்திய நண்பரிடம் இது குறித்து கேட்டபோது, நம்மள எப்படி எல்லாம் கொடும படுத்தி அடிம படுத்துனான் வெள்ளகாரன், இவளுகளுக்கு எல்லாம் நல்லா வேணும் என்றார். பேஸ்தடித்து போனது.இன்னமும் இங்கே சுற்றுலாவுக்கு வரும் பெண்களை பே என்று பார்க்க, சில்மிஷம் செய்ய ஒரு கூட்டம் இருக்கிறது.
வெள்ளைக்காரர்கள் வந்தாலும் அவுத்து பார்க்கிறது.
கருப்பினர்களையும் அவுத்து பார்க்கிறது ..
இங்கேயே இருக்கும் பழுப்பு நிறத்தவர்களையும் அவுத்து பார்க்கிறது ...
உள்ளூர் மலைஜாதிப் பெண்களை அவுத்துப் பார்க்கிறது , அமைதிப்படை என்று பக்கத்துக்கு நாட்டுக்குப் போனாலும் அவுத்துப் பார்க்கிறது.சிறுமிக்கும் அவுத்துப் பார்க்கிறது, மூதாட்டிக்கும் அவுத்துப் பார்கிறது.
வட இந்திய கிராம பஞ்சாயத்துகளில் ஆண்கள் தவறிழைத்தால்கூட அவர் வீட்டுப் பெண்ணை நிர்வாணப்படுத்துதல், கும்பல் வன்புணர்வு நடக்கிறது.
அடிப்படையில் என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை.
நிர்வாணப்படுத்துதல் மேல் அப்படி என்னதான் மோகமோ . மேல்சாதியினரின் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக நிர்வாணப்படுத்தியது தான் பூலான் தேவியை சம்பல் ராணியாக மாற்றியது.
நிற்க. பொத்தாம் பொதுவாக இந்திய ஆண்களின் மனநிலையே சைக்கோத்தனமானது என்று எழுதிவிட்டு செல்வது சுலபம். முல்லைப் பெரியாறு விவாகரம் வெடித்தோங்கியபோது தமிழக பெண்கள் சிலர் கேரள எல்லையில் மாணபங்கப்படுத்தப்பட்டார்கள். அப்போது வத்திராயிருப்பு பகுதியில் இருந்த எங்கள் கல்லூரியில் பதட்டம் நிலவியது. பார்மசி பிரிவு எடுத்து படிக்கும் மாணவர்களில் அநேகர் கேரள மாநிலத்தவர். அவர்கள் பத்திரமாக வீடு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை செய்து வந்தது. அப்பொழுது நன்கு படித்த ஒரு பெண்மணி மிகவும் சாதரணமாக சொன்னது " டேய்...அவளுங்க ஒருத்தியையும் விடாதீங்க...அவுத்து அமணமா ஓட விடுங்க.... + இன்னப்பிற பீப் பீப் பீப் பீப் "... இப்படி பெண்களும்கூட கண்ணுக்குத் தெரியாதவொரு பெரிய ஆண்குறியை கட்டிக்கொண்டு அலைவதும் இங்கே நடக்கிறது.
இத்தகைய நாடு தான் தென்னாப்பிரிக்கர்களை நிறவெறியர்கள் என்றழைத்து காந்தியை கொண்டாடியது, இந்த நாடு தான் பெண்கள் தெய்வம் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் குதத்தில் இரும்பு ராடை இறக்கி குடலை வெளியே எடுத்துப்போட்டு கொன்றது , இந்த நாடு தான் அமைதி விளைவிக்கிறேன் பேர்வழி என்று ஈழப்பெண்களை வேட்டையாடியது , பாதுகாப்பு தருகிறேன் /விசாரணை என்று சொல்லி வாச்சாத்தியில் சிறுமிகளையும்கூட வன்புணர்வு செய்தது , டானிஷ் நாட்டுப் பெண்ணை கும்பலாக சிதைத்து, காலில் டாட்டு அணிந்திருந்த பெண்ணை தோலுரித்துவிடுவேன் என்று மிரட்டியது.
நியாமாக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியது இம்மாதிரியான சம்பவங்களுக்குத் தான் . இதை எல்லாம் வசதியாக மறைத்துக்கொள்ள கொடி எரித்தவனை கொல்லுவோம், தேசிய கீதத்துக்கு நிற்காதவனை போட்டுத் தள்ளுவோம், கொடி தலைகீழாக பறக்கிறது.. ஐயோ தேசமே அவமானப்பட்டுவிட்டது ,என்று ஆயிரம் சால்ஜாப்பு இருக்கிறது...
It is so comfortable to be an Indian Patriot isnt it ?
- umamaheshvaran panneerselvam

No comments:
Post a Comment