Saturday, April 1, 2017

அவ்வளவு நாற்றமெடுத்தால் மூக்கைப் பொத்திக் கொண்டு படியுங்கள்.

அவ்வளவு நாற்றமெடுத்தால் மூக்கைப் பொத்திக் கொண்டு படியுங்கள். ஆனால் படியுங்கள். நீங்களும் கூட அந்தக் கறுப்பாடினை சந்தித்திருக்கலாம்.
.
இது பல நாட்களாகவே எழுத நினைத்திருந்த ஒன்று தான். அதிலும் நேற்று பார்த்த காட்சி செவுளில் அறைந்தது போலிருக்கிறது.
நம்மாட்கள் பயன்படுத்துகிற டாய்லெட் அவலங்களின் எல்லை மீறிக் கொண்டே இருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது நம்மூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே கமகம மணத்துடன் எந்நேரமும் நமக்காகக் காத்திருக்கும் டாய்லெட்டைப் பற்றி அல்ல. இது அதுக்கும் மேல.
.
கோடி கோடியாய் கொழித்து கட்டபட்டிருக்கும் ஆசியாவிலேயே மிகபெரிய ஐடி வளாகத்தைப் பற்றி. இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவருமே குறைந்த பட்ச படிப்பறிவு உடையவர்கள். குறைந்தபட்சம் என்றால் பி.இ, பி.எஸ்ஸி. அதிகபட்சம் அதற்கு அளவெல்லாம் இல்லை தினசரி புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு இருக்க வேண்டியது தானே ஐடி வாழ்க்கை.
.
அப்படிப்பட்ட படித்த மாமேதைகளுக்கு சரியான இடத்தில் மூத்திரம் கழி என்று எழுதி ஓட்டுவதே வெட்கக்கேடு. இது போதாது என டாய்லெட்டில் செய்யக்கூடாத பத்து காரியங்கள் என மிகபெரிய லிஸ்டையே ஒட்டி இருக்கிறார்கள். ஏன் இதெல்லாம் இவர்களுக்கு தெரியாதா? இது கூடத் தெரியாமலா இவ்வளவு நாட்களை / நாட்களாக கழித்திருக்கிறார்கள். என்னதான் மயிறு போற வேலை என்றாலும் எந்த இடத்தில் மூத்திரம் போக வேண்டும் என்று கூடவா தெரியாது.
.
இவர்கள் கூட பரவாயில்லை. இந்த பபுள்கம் மென்று துப்புகிறார்களே கிராதகர்கள் இவர்கள் தான் எல்லாவற்றிலும் அல்டிமேட். ஏதொ அவன் அப்பன் வீட்டு சொத்து போல. அது அதை துப்புவதற்கென்று சில வழிகள் இருக்கிறது அப்படித் துப்புவது தானே. மசுரே போச்சு என பேஸின் உள் துப்பிவிட்டுப் போய் விடுகிறார்கள். அது எங்கோ ஓர் மூலையில் ஒட்டிக்கொண்டு மொத்த பாதையையும் அடைத்து பின் எதுவுமே போக வழியில்லாமல் செய்துவிடுகிறது.
.
அன்றைக்கு ரெஸ்ட்ரூம் மெயின்டனன்ஸின் போது பபிள்கம் துப்பியவர்கள் குடும்பத்தை வண்டை வண்டையாய்த் திட்டிக் கொண்டிருந்தார்கள். பாவம் ரெஸ்ட்ரூம் சுத்தம் செய்பவர்கள். அவர்களால் வேறு எப்படி எதிர்வினை அளிக்க முடியும். இது போல் சிக்கிக் கொள்ளும் பபிள்கம்களை தங்களுடைய கைகளைக் கொண்டுதான் எடுக்க வேண்டி இருக்கிறது.
.
எவ்வளவுதான் சகித்துக் கொண்டு இந்த வேலையைச் செய்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கு உண்டான சம உரிமையை அளிப்பதில் தானே மனிதம் இருக்கிறது. அப்படியா பணம் அல்லது அந்தஸ்து நம்மை காட்டுமிராண்டி ஆகிவிட்டது. ஒரு டிஸ்யு பேப்பரை எடுத்து அதில் துப்பி பபிள்கம்மை தூர வீச வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவுகூடவா உங்களுடைய மூளைக்கு எட்டாமல் இருக்கிறது.
.
என்னதான் பேஸின் அடைத்துக் கொண்டாலும் நிரம்பி வழிய வழிய போகத் தெரிகிறது. அந்நேரங்களில் கட்டிக் கிடக்கும் மூத்திரம் சூழலுக்கு என்ன சுகந்தத்தையா அளிக்கப் போகிறது. வெறும் நாற்றத்தையும் அதனால் பரவும் நோய்களையும் தானே. உங்களால் பாதிக்கபடுவது சுற்றுச்சூழலும் சேர்த்து தானே. எங்கோ நீங்கள் ஆரம்பிக்கும் புள்ளி தான் இப்படிப் பல்கிப் பெருகி சாக்கடையாக ஓடுகிறது. இதை ஏன் உணர மறுக்கிறேறேகள். ஆரம்பிக்கும் நீங்களே நிறுத்துங்களேன் முதலில்.
.
சரி இந்த மூத்திரப் பேழை பிரச்னையை விடுவோம். வெஸ்டர்ன் டாய்லெட். அது என்ன பாவம் செய்தது. வெஸ்டர்னில் உட்காரும் முன் உங்கள் தொடைகளில் அடுத்தவனுடைய சொறி சிரங்கு படை முதலிய பத்துவகை சரும நோய் வரக் கூடாது என டாய்லெட் பேப்பரை விரித்து அதன் மீது உட்காரத் தெரிகிறது இல்லையா. ஆமாவா இல்லையா. அப்புறம் ஏன் கழித்து முடிந்ததும் அதை தூர எறிய தோணுவதில்லை. ஏன் நீங்கள் உட்கார்ந்ததைத் தொட உங்களுக்கே அறுவறுப்பாக இருக்கிறதா? இல்லை சோம்பேறித்தனமா? அறுவறுப்பு என்றால் நீ மனித இனமே இல்லை. சோம்பேறித்தனம் என்றால் நீங்களெல்லாம் கழிக்க வேண்டும் என்று எவன் கேட்டான். டாய்லெட் பேப்பரை எடுத்துப் போட மாட்டீர்கள். ஒழுங்காக தண்ணீரைக் கொண்டு பிளஷ் செய்ய மாட்டீர்கள். ஆனால் வெளியில் சென்று 'ஒழுங்காக டாய்லெட் கிளீன் செய்வதில்லை' என்று கம்ப்ளைன்ட் செய்வது .
.
முன்பெல்லாம் ரெஸ்ட்ரூம் இன்சார்ஜ்களின் முகத்தில் குறைந்தபட்ச புன்னகையையாவது காண முடியும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. எரிந்து விழுகிறார்கள். அதுவும் மிகச் சில மாதங்களாகத்தான் இப்படி ஒரு சூழ்நிலையைப் பார்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்களால் தான் அவர்கள் நம்முடைய ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் எரிந்து விழுகிறார்கள். ஏன் என்றால் எங்களுடைய சமுதாயத்தில் நீங்களும் ஒரு பிரதிநிதி அல்லது உள்ளே நுழைந்திருக்கும் கறுப்பாடு.
.
சரி நேற்றைக்குப் பார்த்த அவலத்தைக் கூறுகிறேன்.
அலுவலகத்து ரெஸ்ட்ரூமில் ஒரு எல்லைக் கோடு வரைந்து அதன் அருகில் இப்படி எழுதிவைத்திருக்கிறார்கள், ' தயவு செய்து எல்லைக் கோட்டினுள் நின்று கழிக்கவும். இதன் மூலம் ரெஸ்ட்ரூம் சுத்தமாக வைத்திருக்க உதவவும்'.
.
அப்புறம் மற்றொரு வேண்டுகோளையும் ஒட்டி இருக்கிறார்கள். 'தயவு செய்து பேழையில் பபிள்கம் துப்பாதீர்கள். ரெஸ்ட்ரூம் இன்சார்ஜும் மனிதர்கள். அவர்களுக்கு உரிய கௌரவத்தை அளியுங்கள்'.
.
இப்போது சொல்லுங்கள் என் மாண்புமிகு பட்டதாரி சமுதாயமே நிஜமாகவே செவ்வுளில் அறைந்தார்ப் போல் இல்லை.
.
மூதேவிகளே இப்படி பண்ணா அப்புறம் என்னதான்டா பண்றது.....? எவ்ளோ ஹைக்ளாசா பாத்ரூம் கட்டி விட்டாலும் தெருவுல போற மாதிரியே போறானுங்க..... க்ளீன் இந்தியான்னு தெருவுக்கு வெளக்கமாறு எடுத்துட்டு போகவேணாம்... அவனவன் பாத்ரூம் போகும் போது ஒழுங்கா போனாவே போதும்...
.
திருந்துங்கள் அல்லது திருத்துங்கள்.

----Srinivasan Balakrishnan---

No comments:

Post a Comment