மதுவிலக்கை ஒத்திப்போடப்படுவதைத்
தடுக்க, மூதறிஞர் ராஜாஜி , கலைஞர்
வீட்டின் முன் கதறியழுதார் என்ற
நெஞ்சைப்பிழியும் பதிவுகள்
கண்களில் பட்டன.
எனக்கு ஒரு டவுட் என்னான்னா,
அதே காலகட்டத்தில், மூதறிஞர்
ராஜாஜி நில்லென்றால் நிற்கும்
உட்காரென்றால் உட்காரும் அவரின்
சுதந்திரா கட்சி ஆட்சியிலிருந்த
ஒரிசாவில் மதுவிலக்கு அமலில்
கிடையாது.
முன்னுதாரணமாக இருக்கவேண்டு
மெனில் ராஜாஜி ஒரிசாவில் மதுவிலக்கை
அமல்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?
எனக்கு வந்த டவுட் அன்னக்கி
கலைஞருக்கும் வந்திருக்கு...
இதே கேள்வியை கேட்டபின்னர்,
ராஜாஜி கப்சிப் ஆனார் என்று
திமுக பெருசுகள் சொல்கின்றன.
----
1971யில், மதுவிலக்கு கொள்கையை
மாநிலங்கள் ஏற்றுநடத்தினால், அரசு
மானியம் தரவேண்டுமென்பதை மத்திய
அரசு மதிக்கவில்லை. பொருளாதார
ரீதியாக நிலைநிறுத்த மதுவிலக்கை
நீக்காமல், ஒத்திப்போடப்பட்டது. (
கவனிக்க ஒத்திப்போடப்பட்டது). அடுத்த
ஈராண்டில் மாநில நிதிநிலைமை
சரியானவுடன், ஒத்திபோடப்பட்டது
என்பதை மதித்து , அன்ணா பிறந்த
நாள் முதல் , கலைஞர் சாராயக்கடைகளை
மூடினார். அதன் பின்னர்,
ஏழைகளின் பங்காளன் எம்ஜிஆர்
சாராயக்கடைகளைத் திறந்து டாஸ்மாக்
ஆரம்பித்தார் என்பது நீங்கள் எம்ஜிஆர்
ரசிகராக இல்லாமல் இருந்தால் தெரிந்திருக்கும்.
வாக்கரசியலில் தவறு செய்யாத
அரசியல்வாதிகளே கிடையாது. லிஸ்ட்
எடுத்தால், மிக மிக குறைந்த தவறுகளை
செய்து, தமிழ்நாட்டு மக்களுக்கு அதிக
நன்மைகளைக் கொடுத்த சிறந்த மக்களாட்சி
முதல்வர் என்பது கலைஞர் என்று
வைகோவிடம் தனியாகக் கேட்டால்
சொல்வார். அல்லது தமிழருவி என்று
கலைஞரால் பெயர் சூட்டப்பட்டவரை
கூட கேட்கலாம்.
ராஜாஜிக்கள், சோ ராமசாமிக்கள்,
பத்ரி சேஷாத்ரிக்கள் இவர்கள் கேள்வி
கேட்டால் அந்த கேள்வியின் உள்நோக்கம்
புரிந்து பதிலடி கொடுத்தால்தான் சரியான
தலைவனாக இருக்கமுடியும். அதை
அறிந்தவர் கலைஞர். அதனால்தான்
இன்றும் இந்திய அரசியலின் பேசப்படும்
பொருள் கலைஞர்
No comments:
Post a Comment