தமிழ் ஆண்டு வரலாறு
( பார்ப்பனிய ஆண்டு வரலாற்றின் இலட்சணம்)
இந்துக் கட வுள் கண்ணன் 60,000 பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கே சென்ற நாரதனுக்கும் ஆசை வந்து விடவே, "கண்ணா" நீயே எல்லா பெண்களையும் அனுபவிக்கின்றாயே, எனக்கொரு பெண்ணைத் தரக்கூடாதா?" என்று கேட்டான்.
கண்ணனும், சரி, இந்த ஊருக்குள் நான் இல்லாத வீட்டிற்குள் இருக்கின்றப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்" என்று அனுமதித்தான்.
நாரதனும் ஒவ்வொரு வீடாய்ச் செல்ல, எல்லா வீட்டிலும் கண்ணன் காட்சியளித்தான்.
வெறுத்துப்போன நாரதன், கண்ணனின் வேண்டுகோளுக்கிணங்க தானே ஒர் பெண்ணாய் மாறி கங்கையில் நீராடி வர, கண்ணனும் - நாரதனும் கூடி சல்லாபிக்கின்றனர். அவர்களுடைய சல்லாபம் 60 ஆண்டுகள் நடந்ததாம்.
அவ( ன் )களுக்கு ஆண்டுக்கு ஒரு குழந்தை வீதம் பிறந்ததாம்.
அந்த குழந்தைகளின் பெயர்களைத்தான் இன்றைக்குத் தமிழ் எனப்படுகிற "பிரபவ முதல் அட்சய," வரையிலான 60 ஆண்டுகளாம்.
மேலும் அந்த 60 பெயர்களில் ஒன்று கூட தமிழில் இல்லை. தமிழாக இல்லை. எல்லாம் வடமொழிப்பெயர்கள்.
"சைத்ரை முதல் பகுனா" வரை உள்ள சமற்கிருத மாதங்களே தமிழில் "சித்திரை முதல் பங்குனி" என இடம் மாறியுள்ளன.
இப்படித் தமிழர்களையும், நமது பெண்களையும் இழிவுப் படுத்துகிற இந்த 60 ஆண்டு முறையை இனியும் நாம் பின்பற்ற வேண்டுமா?
எனவே தான் நமது தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு தமிழ்நாடு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, உலகப் பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழாண்டு எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31, எனவே திருவள்ளுவர் ஆண்டு நடப்பு ஆங்கில ஆண்டான 2017டன் 31 கூட்டினால் வருவது 2048 ஆகும். அதுவே தமிழாண்டாகும்.
மேலும், சுறவம் (தை ) 1, தமிழாண்டு பிறப்பு என்றும் முடிவெடுத்தனர்.
தமிழ்நாட்டு அரசு இதை 1971 முதல் அரசு பதிவு அட்டவணையில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
எனவே, தமிழர்களாகிய நாமும் இதனையே தமிழ்ப் புத்தாண்டு என நடைமுறைப்படுத்தலாமே.
"சித்திரை வருடப்பிறப்பு" தமிழனின் ஆண்டு பிறப்பன்று.
உணர்ந்து செயல்படுக.
என்றும் தங்களன்புள்ள,
இரெ.சு. முத்தையா
ஆலோசகர்,
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்.
012 3965793
017 3660091
No comments:
Post a Comment