Saturday, April 1, 2017

மதச்சார்பின்மை என்று சொல்லும்போது நீங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பவர் என்பதல்ல பொருள்

மதச்சார்பின்மை:

ஒருவரின் மதத்தை பார்க்காமல் அவரின் செயலை மட்டுமே கொண்டு மற்றவரை மதிப்பிடுவது.. அவ்வளவுதான்.. ஆனால் நீங்கள் கிறிஸ்தவம், இஸ்லாமை ஆதரிக்கிறீர்கள், இந்து மதத்தை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்களே, அது எப்படி மதச்சார்பின்மை ஆகும், அதன் பெயர் இந்துத்துவ விரோதமல்லவா என்று சிலருக்கு தோன்றலாம்.

மதச்சார்பின்மை என்று சொல்லும்போது நீங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பவர் என்பதல்ல பொருள், அப்படியான மதத்தின் பெயரால் யாரும் பாதிக்காதபடிக்கு உங்கள் நிலையை அமைத்துக்கொள்வதே.. இந்தியா என்பது இந்துக்கள் பெருமளவில் வசிக்கும் நாடு என்ற வகையில், பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் பாதிப்புக்கு உள்ளாகாதபடிக்கு அரணாய் நிற்பதே உண்மையான மதச்சார்பின்மையாக இருக்க முடியும்.
அப்படியெனில் மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இந்துத்துவ விழாக்களை மட்டும் கொண்டாட மறுப்பது ஏன்?

விடை எளிதினும் எளிது. மற்ற நாடுகளில் எப்படியோ, ஆனால் இந்தியாவில் நாத்திகம் உருவாக முக்கிய காரணமாய் இருப்பது சாதி முறை தான். இந்துத்துவ விழாக்கள் ஒவ்வொன்றுமே சாதியோடு பின்னிப்பிணைக்கப்பட்டவை. சாதியின் பொருட்டு கடவுளர்களையும் முடக்கிப்போடும் ஆதிக்க வழக்குடையவர்கள். அப்படியிருக்க அந்த விழாவில் ஒரு பகுத்தறிவாளன் நிச்சயம் பங்கேற்க முடியாது.

சிறுபான்மையினர் விழாக்களில் பங்கேற்பது அவர்களின் கடவுளை, மத வழிபாட்டு முறையை ஆதரித்து அல்ல, உங்கள் சுதந்திரமான வாழ்வுக்கு நாங்கள் துணை நிற்போம் என்பதை உணர்த்துவதற்காக மட்டும் தான்.

மற்றபடி பகுத்தறிவாளர்கள் எந்த பாகுபாடுமின்றி எல்லா மத குப்பைகளையும் ஒன்றாகவே ஒதுக்கி தள்ளக் கூடியவர்களே.

Leo Joseph D

No comments:

Post a Comment