Saturday, April 1, 2017

சாதியமைப்பு குறித்து காந்தியம்:

சாதியமைப்பு குறித்து காந்தியம்:
.
துவக்கத்தில் இருந்தே காந்தி சாதியை ஆதரிப்பவராகவே இருந்தார். தீண்டாமையை மட்டும் எதிர்த்தார். அவருடைய இறுதி காலகட்டத்தில் சாதியம் குறித்த அவர் கருத்து மாறியது போலவே தெரிகிறது.
எத்தனையோ சிறு தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்ட காந்தியால் சாதி குறித்து தான் முன்பு கொண்டிருந்த தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.
.
1945 - 46 வாக்கில் காந்தி தன் அரசியல் செல்வாக்கு முழுதும் இழந்தார். அவர் தன் எடுபடாத குரலில் சாதிகளை தொகுத்து வர்ணங்கள் மட்டும் இருக்கட்டும் என்று சொன்னார். பிறகு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் என்று சொன்னார்.
.
அதற்க்கு அம்பேத்கார் கேட்ட கேள்விகள் :
.
1. தகுதியைத் தீர்மானிப்பது யார்.
2. பிறப்பின் அடிப்படையில் மேல் சாதியில் பிறந்தவனை எப்படி கீழ் இறக்கப் போகிறீர்கள்.
3. பெண்களின் தகுதியை கணவரின் தகுதியை வைத்து தீர்மானிப்பீர்களா அல்லது அவர்களின் தகுதியை வைத்து தீர்மானிப்பீர்களா.
.
காந்தியிடம் பதில் இல்லை.
.
இந்த பதிவின் நோக்கம் காந்தியின் வரலாற்றுப் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுவதல்ல. சாதி குறித்த ஒரு விவாதத்தை முன்னெடுப்பதே.
.
வேத காலத்தில் சாதிகள் இல்லை. வர்ண அமைப்பு மட்டுமே இருந்தது. கல்வி அனைவருக்கும் பொதுவாக இருந்தது. கல்வி முடிந்தவுடன் பார்ப்பனர்களும் மற்றவர்களும் அடங்கிய ஒரு குழு ஒவ்வொரு மாணவனையும் பரிசோதித்து. மாணவரின் தகுதிக்கு ஏற்ப அவருக்கான வர்ணம் நிர்ணயிக்கப் பட்டது. இது தான் இந்து மத வித்தகர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் விளக்கம். இது உண்மையா பொய்யா என்று தெரியாது.
.
சரி உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அம்பேத்கர் கேட்ட கேள்விகளுக்கு பதில் உண்டா?
.
1. தகுதியைத் தீர்மானிப்பது யார்.
2. பிறப்பின் அடிப்படையில் மேல் சாதியில் பிறந்தவனை எப்படி கீழ் இறக்கப் போகிறீர்கள்.
3. பெண்களின் தகுதியை கணவரின் தகுதியை வைத்து தீர்மானிப்பீர்களா அல்லது அவர்களின் தகுதியை வைத்து தீர்மானிப்பீர்களா.
.
காந்தியால் பதில் சொல்ல முடியாத கேள்விகள் இவை.
ஹிந்துக்கள் யாரிடமாவது பதில் இருந்தால் சொல்லலாம்
.
- துணைத் தளபதி மார்கோஸ்

No comments:

Post a Comment